Posts

Showing posts from December, 2008

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Image

சூப்பர் சர்க்கஸ்

Image
லக்கி லுக்கை தெரியாதவர்களுக்கு மட்டும், வழக்கமான கௌபாய் ஹீரோக்களை கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்டவர்தான் லக்கி லுக். தன் நிழலை விட வேகமாக சுடக் வடிய திறமை வாய்ந்தவர். குதிரை சவாரி செய்வதில் கில்லாடி. இவருக்கு இருக்கும் ஒரே உற்ற தோழன் தன்னுடைய குதிரை ஜாலி ஜம்பர் மட்டுமே. புத்திசாலியான திறமை வாய்ந்த குதிரையும் கூட. இவர்களுக்கு இலக்கே கிடையாது. தாங்கள் செல்லும் வழியெல்லாம் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் அப்பாவிகளுக்கு உதவுவதே இவருடைய தலையாய கடமை. இவருடைய கதைகள் எல்லாமே சிரிப்பு தோரணமாகவே அமைந்திருக்கும். இனி கதை. கோயட் கோட்டை என்னும் நகரத்தில் குதிரை போட்டி வருடந்தோறும் நடைபெறும். அதி கலந்து கொள்வதற்காக லக்கி லுக் செல்கிறார். செல்லும் வழியில் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் சர்க்கஸ் குழுவினருக்கு உதவி செய்து அவர்களையும் தம்மோடு கோயட் கோட்டைக்கு பத்திரமாக அழைத்து செல்கிறார். அந்த ஊரில் ரீகன் என்னும் கொடியவன் அந்த ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். வருடந்தோறும் குதிரை போட்டியை பார்த்த ஊர் மக்களுக்கு புதிதாக ஊருக்குள் வரும் சர்க்கஸ் காண ஆவலோடு இருக்கின்றனர். இதை அறிந்த ரீகன

இலயன் காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் பற்றி ..................

மதிப்பிற்குரிய இலயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு, பழைய புதிய வாசகர்கள் நிறைய பேரிடம் பழைய காமிக்ஸ் புத்தகங்கள் கிடையாது. அதனால் தாங்கள் கொண்டு வந்துள்ள காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் ஒரு வரவேற்கதக்க முயற்சி. ஆனால் இதை கடமைக்காக சேகரிக்கலாமே தவிர அனைவரும் படிக்கக்கூடிய நிலையில் புத்தகத்தின் தரமோ, எழுத்துக்களோ இல்லை. ஏதோ இதை தாங்கள் கடமைக்காக இந்த இதழை போடாமல் அனைவரும் இதையும் சேகரிக்கிற மாதிரி போடலாமே? தாங்கள் ஒரு புத்தகத்தில் இரு கதைகளை போடுவதற்கு பதிலாக ஒரே கதையாக நல்லதரமாக உதாரணத்திற்கு மெக்ஸிகோ படலாம் இதுமாதிரி போடலாமே? அடிக்கடி தாங்கள் மறுபதிப்பு செய்த கதைகளையே திரும்ப திரும்ப போடாமல் இதுவரை மறுபதிப்பே செய்யாத நல்ல கதைகள் நிறைய உள்ளன. அவையெல்லாம் தாங்கள் வெளியிட்டால் இன்னும் சிறப்பாகவும், அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் அன்புடன் ப்ருனோ

தன்னை தானே தேடும் ஒரு சாகசகாரனின் கதை

Image
துப்பாக்கியால் சுடப்பட்டு தன்னுடைய நினைவாற்றலை இழந்து உயிருக்கு போரடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனை மீட்டு அவருடைய உயிரை காப்பாற்றி தன்னுடனே வைத்திருக்கும் ஒரு வயதான தம்பதியினர். அவருககு இருக்கு ஒரே அடையாளம் XIII என்ற எண் மட்டுமே. தீடிரென ஒருநாள் கொலைகார கும்பல் ஒன்று அங்கு வந்து அந்த வயதான தம்பதிகளை XIII யும் கொல்ல முயற்சிக்கிறார்கள். திறமையாக அவர்களுடன் போராடி அவர்களில் சிலரை கொன்று விடுகிறான். அந்த குமபலின் தலைவன் மங்கூஸ் மட்டும் தப்பி விடுகிறான். இவர்கள் ஏன் கொல்ல வந்தார்கள்? தான் யார் போலீஸா? கொலைகாரனா? தனக்கு குடும்பம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடி ஈஸ்ட் டவுன் என்னும் ஊருக்கு செல்கிறான். தான் செல்லும் ஊரெல்லாம் ஒவ்வொரு பெயரில் இருந்திருப்பதை கண்டு மேலும் குழப்பமடைகிறான்.தான் ஸ்டீவ் ராலாண்ட் என்னும் பெயரில் ஜனாதிபதியை கொன்று இதற்காக ஒரு பெருந்தொகையை பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். இந்த பணத்திற்காக ஒரு கும்பல் அவனை துரத்துகிறது. ஒரு பக்கம் கொலைகார கும்பல் ஒன்று அவனை கொல்ல துரத்துகிறது. ஒரு பக்கம் ஜனாதிபதியை கொன்ற குற்றத்திற்காக விசாரணை கமிஷன் அதிகார