Tuesday, January 27, 2009

மினி லயன் சித்திர கதைகள்இந்த மாதம் மினி லயன் மாதம் என்பதால், இதுவரை வெளிவந்த மினி லயனில் வெளிவந்த புத்தகங்களின் பட்டியல் கீழே வெளியிடப்பட்டுள்ளது.

1. துப்பாக்கி முனையில்-ஜோன்ஸ்
2. மரண சர்க்கஸ்-மேசன்
3. கருப்பு பாதிரி மர்மம்-புயல் வேக இரட்டையர்கள்  
4. கானக மோசடி-சூப்பர் பைலட் டைகர்
5. சொர்க்கத்தின் சாவி-அலிபாபா
6. ஆர்டிக் நரகம்-சூப்பர் பைலட் டைகர்  
7. கோப்ரா தீவில் ஸ்பைடர்-ஸ்பைடர்
8. ஸ்பைடர் படை-ஸ்பைடர்
9. விற்பனைக்கு ஒரு ஷெரீப்-சிக் பில் 
10. ஒரு கள்ளப்பருந்தின் கதை-சார்லி
11. விசித்திர ஜோடி-ஜெர்ரி&ஷர்மா
12. வெள்ளைப் பிசாசு-அலிபாபா
13. ஒரு நாணயப் போராட்டம்-அங்கிள் ஸ்குருஜ்
14. சம்மர் ஸ்பெஷல்-ஸ்பெஷல்
15. பயங்கரப் பயணம்-சுஸ்கி&விஸ்கி 
16. மாயத்தீவில் அலிபாபா-அலிபாபா
17. நீலப்பேய் மர்மம்-சிக் பில்
18. புரட்சித் தீ-லக்கி லுக்
19. ராஜா ராணி ஜாக்கி-சுஸ்கி&விஸ்கி 
20. விண்வெளியில் ஒரு எலி-சிக் பில் 
21. பிசாசுப் பண்ணை-லக்கி லுக் 
22. ஹாலிடே ஸ்பெஷல்-ஸ்பெஷல்
23. நடுக்கடலில் எலிகள்-அங்கிள் ஸ்குருஜ் 
24. இரத்த வெறி -லக்கி-லுக் 
25. பயங்கரப் பொடியன்-லக்கி லுக்
26. தேவை ஒரு மொட்டை-சிக் பில்
27. சிவப்பு மலை மர்மம்-துப்பறியும் மூவர் 
28. பயங்கரப் பாலம்-சிக் பில்
29. கொள்ளைக்கார கார்-சுட்டி&நட்டி  
30. கொலைகார காதலி-சிக் பில்
31. எழுந்து வந்த எலும்புக்கூடு-ஷெர்லக் ஹோம்ஸ் 
32. விற்பனைக்கு ஒரு பேய்-ஷெர்லக் ஹோம்ஸ் 
33. இரும்பு கௌபாய்-சிக் பில் 
34.காமெடி கர்னல்-கர்னல் கிளிப்டன் 
35. அதிரடிப் பொடியன் -2-லக்கி லுக்
36. வின்டர் ஸ்பெஷல்-லக்கி லுக்
37. காசில்லா கோடீஸ்வரன்-ரிப் கிர்பி 
38. மாயாஜால மோசடி-ரிப் கிர்பி  
39. ஒரு காவலனின் கதை-சார்லி
40. விசித்திர ஹீரோ-சிக் பில்

ஜூனியர் லயன் காமிக்ஸ்1. சூப்பர் சர்க்கஸ்-லக்கி லுக்
2. உலகம் சுற்றும் அலிபாபா-அலிபாபா
3. அதிரடி மன்னன்-சிக் பில்
4. புதிர் குகை-ஜெர்ரி


Tuesday, January 20, 2009

பற்றி எரியும் பாலைவனம்தென் ஆப்பிரிக்காவின் கடலோர கிராமங்கள் அங்கு நடக்கும் உள்நாட்டு புரட்சிகளால் மிகவும் பாதிப்புகுள்ளாயின. வெளி தொடர்புகள் அறுந்து போன நிலையில் அங்கு பசி, பட்டினி, போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் பல உயிர்கள் மடிந்து கொண்டிருந்த சூழல். சுட்டெரிக்கும் பாலைவனம், இரக்கமுள்ளவர்கள் கொண்டு வரும் உதவிப் பொருட்களை பறிப்பதற்கென்றே இரக்கமில்லாத கடற்கொள்ளையர்கள் மொத்தத்தில் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை. இந்த சூழலில் சர்வதேச சமூகத் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பெர்குஸன் என்பவர் பாதிக்கப்பட்டுள்ள ஜனங்களுக்கு உணவுகளையும் மருந்துகளையும் கொணடு செல்வதற்காக பிரின்ஸ் குழுவை சம்மதிக்க வைத்து அவரும் உடன் செல்கிறார்.

கடல் மார்க்கமாகவும் பிறகு பாலைவன பயணம் மேற்கொள்ளும் போது அங்குள்ள கடற்கொள்ளையர் தாக்குதலில் பெர்குஸன் காயமடைகிறார். குழுவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு யாராவது ஒருவர் பாதிக்கப்ட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் தன் உயிரையே பணயம் வைக்க முற்பட்டு பொருட்களை ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார் பார்னே.

ஒரளவு குணமடைந்து கண்விழிக்கும் பெர்குஸன் பார்னே கொண்டு செல்லும் மருந்து போதைக்கும் பயன்படுத்தலாம், இதை அங்குள்ள கடற்கொள்ளையர் தலைவனுக்கு தெரியும் என்பதை பிரின்ஸ் இடம் தெரிவிக்கிறார். பார்னேயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணரும் பிரின்ஸ் ஒரு பாதுகாப்பான மறைவிடத்தில் கப்பலையும் பெர்குஸனையும் விட்டுவிட்டு பார்னேக்கு உதவ ஜின்னுடன் விரைந்து செல்கிறார்.

கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்த பார்னேயை சூழ்ச்சியாக கொள்ளைக் கும்பல் மடக்கி விடுகிறது. தந்திரமாக கொள்ளையர்களுடன் போரிடும் பார்னேயுடன் பிரின்ஸ் இணைந்துக் கொண்டு கொள்ளையர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறார்கள். ஆத்திரமடையும் கொள்ளையர்கள் பார்னேயை சுட்டு விடுகிறார்கள். குண்டடிப்பட்ட பார்னேயுடன் மூவரும் தப்பித்து கர்ஜிக்கும் மணல்வெளியை நோக்கி விரைகிறார்கள். எஞ்சியிருக்கும் கொள்ளைக் கும்பல் அவர்களை துரத்துகிறது

தீடீரென மணல்வெளி பயங்கர சூறாவளிக் காற்றுடன் வீசத் தொடங்குகிறது. இதில் துரத்தி வந்த கொளளைக்கும்பல் மண் சுவர்கள் சரிந்து சமாதியாக்குகிறது. பிரின்ஸ் குழுவும் புயலில் சிக்கி மணலில் புதையுண்டு கிடக்கிறார்கள். இதற்கிடையே வானிலை அறிவிப்பை கேட்கும் பெர்குஸன் கப்பலில் உள்ள ரேடியோ மூலம் அங்கு உள்ள மீட்புக் குழுவிற்கு தகவல் அனுப்பி பிரின்ஸ் அண் கோவை பத்திரமாக மீட்டுவிடுகிறார். இவர்கள் எடுத்து வந்த உணவு, மருத்துவ பொருட்கள் பல உயிர்களை காக்க பயன்படுகின்றன.

இந்த கதையில் வரும் பாலைவன சண்டைகள், சீறிவரும் மணல்புயல், பிரின்ஸ் குழு படும் அவஸ்தைகள் என அனைத்தையும் மிகத் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் ஓவியர் க்ரேக்.

பொதுவாக புத்தகங்கள் எல்லாம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக மட்டும் இருக்கும். ஆனால் பிரின்ஸ் கதைகளில் சமூக உணர்வு, தியாகம், விட்டுக் கொடுத்தல், மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை இவைகளையே அதிகமாக கலந்து இருப்பார் கதாசிரியர் க்ரேக். பிரின்ஸ் கதைகளை நான் விரும்பி படிக்க இதுவும் ஒரு காரணம்.

Sunday, January 4, 2009

லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு கடிதம்

மதிப்பிற்குரிய லயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு,

சில காலம் முன்பு திகில் காமிக்ஸில் தொடராக வெளிவந்த ஸ்பைடரின் விண்வெளி பிசாசு மற்றும் கேப்டன் ஜானின் விண்ணில் முளைத்த மண்டை ஓடு ஆகிய சித்திர தொடர்கள் விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸ் நிறைந்தவையாகவும் இருந்த தொடர்கள். படித்த அனைத்து காமிக்ஸ் இரசிகர்கள் மனதையும் கவர்ந்த தொடர்களும் கூட.

இந்த இரு தொடர்களையும் தாங்கள் மீண்டும் மறுபதிப்பாக ஒரே இதழாக காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் வெளியிட்டு அந்த இரு சித்திர தொடர்களையும் சிறப்பு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் வாசகன்...


ப்ரூனோ ப்ரேசில்

2018 அட்டவணையும் சில கருத்துக்களும்

2018 அட்டவணையில் பட்டாசுகளும், புஸ்வானங்களுமாய் நிறைந்துள்ளது  பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிருப்தியையும் தந்துள்ளது  இந்த  அ...