Posts

Showing posts from May, 2009

சித்திர நினைவலைகள்

Image
காமிக்ஸ் புத்தகங்கள் பற்றிய கருத்து கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும்தான் நிறைந்திருக்கும். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1970-ம் வருடம் முதல் வெளிவந்து கொண்டிருந்தாலும் 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரைதான் காமிக்ஸ்களுக்கு பொற்காலமாக விளங்கியது. இந்த காலக்கட்டத்தில்தான் ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அவற்றில் முத்து காமிக்ஸ், இந்திரஜால், மாலைமதி, லயன், ராணி, அசோக், திகில், முத்து மினி காமிக்ஸ், சக்தி, மினி லயன், ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ், டார்ஜான் காமிக்ஸ், பார்வதி, மதி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், மலர் காமிக்ஸ் ரேகா காமிக்ஸ், கஸ்துரரி காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ் என பல காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்த காலமும் கூட. எதை வாங்குவது எதை படிப்பது என்று திக்குமுக்காடிய காலகட்டமும் கூட. 1995-ம் வருடத்திற்கு பிறகு இதன் நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. புயலில் சிக்கி காணாமல் போன மாதிரி நிறைய புத்தகங்கள் காணாமல் போய்விட்டன. தற்போது லயன் காமிக்ஸ் மற்றும் முத்து கா