ஆப்பிரிக்காவில் பிரின்ஸ்


கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லம்பாஸியில் உள்நாட்டு கலவரங்கள் வெடிக்க, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வடங்கோக்கள் என்னும் புரட்சியாளர்களால் நகரமே நாசமாகிறது.

புரட்சி கும்பலின் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கொலைவெறியுடன் கொன்று குவிக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் திணறிக் கொண்டிருக்கும் அவல நிலை.


இதற்கிடையே புரட்சியாளர்களிடமிருந்து துணிச்சலாக தப்பிக்க முயல்கின்றனர் ரயான் குடும்பத்தினர். சண்டையிட்டுக் கொண்டே லம்பாஸி நகரை விட்டு சிறிய விமானத்தில் இரு குழந்தைகளுடன் தப்பித்து செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக எதிரிகளின் கண்ணில் விமானம் தென்பட அதை சுட்டு சேதப்படுத்துகின்றார்கள்.

பழுதடைந்த விமானத்தோடு அடர்ந்த முட்காட்டின் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர். தங்களை சுற்றிலும் விஷ முட்கள் சூழ்ந்திருப்பதை கண்டு மரணத்தின் விளிம்பில் உதவிக்காக காத்துக் கிடக்கின்றனர்.

ரயான் குடும்பத்தினரை மீட்பதற்காக யாருமே செல்ல தயங்கும் ஆபத்துகள் நிறைந்த கானகத்திற்கு மனித நேயம் மிக்க தீரர்களான பிரின்ஸ் மற்றும் பார்னே துணிச்சலாக செல்லத் துணிகிறார்கள்.

இறுதியில் கானகத்தில் பல போராட்டங்களை கடந்து கொலை வெறி கொண்ட வடங்கோக்களை சமாளித்து ரயான் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு வருவதே கதை.







Comments

  1. Me the First!
    நான் வைத்திருந்த ஒரே பிரின்ஸ் கதை இது தான் . இப்போது தான் ஒரு பழைய புத்தக கடையில் சாத்தான் ஜெனரல் கதை கிடைத்தது . இக்கதை வெளிவந்த அடுத்த இதழில் ஒரு வாசகர் ஏன் ஹெலிகாப்டேரில் சென்று அவர்களை காப்பாற்றி இருக்கலாம் என கேட்டிருப்பார் . ரபிக் அவர்கள் ஏற்கனவே இது பற்றி வேறு ஒரு பதிவில் கூறி இருப்பார் . எனக்கும் இது நினைவு உள்ளது .

    அன்புடன் ,
    லக்கி லிமட்
    உலவல்

    ReplyDelete
  2. நண்பரே,

    சிறப்பான பதிவு. பிரின்ஸ் கதைகளில் என்னைத் திருப்தி செய்யாத கதைகளில் இது ஒன்றாகும். நீங்கள் வழங்கியுள்ள அட்டைப்படத்தை கிரெக் வரைந்திருந்தாலும், கதையின் சித்திரங்களை வரைந்தவர் டேனி எனும் ஓவியர். கிரெக்கின் ரசிகர்கள் சித்திரங்களிலுள்ள வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் எனவே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  3. நண்பரே, என்னிடம் இருக்கும் சொற்ப பிரின்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று. எத்தனை முறை படித்திருப்பேன் என்று நியாபகம் இல்லை. கதையின் ஒரிஜினல் மூலத்தில் சித்திரங்கள் இன்னும் சிறப்பாக வண்ண கலவையில் பிரதிபலிக்கிறது... ஸ்மார்ட் பதிவு, நன்றி.

    லிமட் கூறியது போல, அந்த வாசகர் கடிதம் இன்றும் நியாபகத்தில் இருக்கிறது. கூடவே, காதலர் கூற்றுபடி சித்திரங்களில் ஒரு வித்தியாச பாணியை தான் டேனி படைத்திருக்கிறார் போல. பிரின்ஸை பற்றி இன்னும் அறிந்து கொள்ள ஆவலை தூண்டி விட்டீர்கள்.... தொடருங்கள் உங்கள் கதை சொல்லலை.

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு. பிரின்ஸ் குழுவினர் ஹெலிகாப்டரில் வருதாயிருந்தால் எதிரிகளில் கண்களில் பட வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன்.

    (புத்தகத்தை படித்து நிறைய நாள் ஆகிவிட்டதால் கதை மறந்து விட்டது. பதிவில் கண்ட கதைசுருக்கம் மூலம் இதை யூகிக்கிறேன்)

    comicstamil.blogspot.com

    ReplyDelete
  5. இந்த கதையை நான் படித்ததில்லை. தகவலுக்கு நன்றி. நான் படிக்காத ஒன்று அல்லது இரண்டு பிரின்ஸ் புத்தகத்திலொன்று இது.

    ReplyDelete
  6. தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
    தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

    ReplyDelete
  7. உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு V FOR VENDETTA பத்தி ஒரு போஸ்ட் ஒன்னு எழுதி இருக்கேன்.....
    வந்து அவசியம் பாத்துட்டு போங்க தல....

    ReplyDelete
  8. பாஸ் .முத முதல்ல தமிழ்ல,அதுவும் lucky luke பத்தி போஸ்ட் போட்டு இருக்கேன்.
    வந்து பாத்துட்டு, புடிச்சு இருந்தா,வோட்டு குத்திட்டு போங்க.
    உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.

    http://illuminati8.blogspot.com/2010/02/blog-post.html

    ReplyDelete
  9. பிரிஸ் கதைகள் பல வாசிக்கும் சந்தர்பம் எனக்கு கிடைக்காவிட்டாலும் பதிவு வாசிக்க தூண்டுகின்றது ஆனால் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது கதை தேறாது போல உள்ளதே ;)

    ReplyDelete
  10. தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

    http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

    ReplyDelete
  11. காமிக்ஸ் நண்பர்களே,

    வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

    புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

    இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
    காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

    ReplyDelete
  12. நண்பர்களே,

    புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். வந்து உங்கள் மேலான கருத்துக்களை பதிக்கவும்.

    நன்றி.

    http://kingofcrooks.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. super story this one...
    for me this is the first comics bought from muthu/lion comics.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்