Posts

Showing posts from January, 2009

மினி லயன் காமிக்ஸ் லிஸ்ட்

Image
இதுவரை வெளிவந்த மினி லயனில் வெளிவந்த புத்தகங்களின் பட்டியல் கீழே வெளியிடப்பட்டுள்ளது. 1. துப்பாக்கி முனையில்-ஜோன்ஸ் 2. மரண சர்க்கஸ்-மேசன் 3. கருப்பு பாதிரி மர்மம்-புயல் வேக இரட்டையர்கள்   4. கானக மோசடி-சூப்பர் பைலட் டைகர் 5. சொர்க்கத்தின் சாவி-அலிபாபா 6. ஆர்டிக் நரகம்-சூப்பர் பைலட் டைகர்   7. கோப்ரா தீவில் ஸ்பைடர்-ஸ்பைடர் 8. ஸ்பைடர் படை-ஸ்பைடர் 9. விற்பனைக்கு ஒரு ஷெரீப்-சிக் பில்  10. ஒரு கள்ளப்பருந்தின் கதை-சார்லி 11. விசித்திர ஜோடி-ஜெர்ரி&ஷர்மா 12. வெள்ளைப் பிசாசு-அலிபாபா 13. ஒரு நாணயப் போராட்டம்-அங்கிள் ஸ்குருஜ் 14. சம்மர் ஸ்பெஷல்-ஸ்பெஷல் 15. பயங்கரப் பயணம்-சுஸ்கி&விஸ்கி  16. மாயத்தீவில் அலிபாபா-அலிபாபா 17. நீலப்பேய் மர்மம்-சிக் பில் 18. புரட்சித் தீ-லக்கி லுக் 19. ராஜா ராணி ஜாக்கி-சுஸ்கி&விஸ்கி  20. விண்வெளியில் ஒரு எலி-சிக் பில்  21. பிசாசுப் பண்ணை-லக்கி லுக்  22. ஹாலிடே ஸ்பெஷல்-ஸ்பெஷல் 23. நடுக்கடலில் எலிகள்-அங்கிள் ஸ்குருஜ்  24. இரத்த வெறி -லக்கி-லுக்  25. பயங்கரப் பொடியன்-லக்கி லுக் 26. தேவை ஒரு மொட்டை-சிக் பில் 27. சிவப்பு மலை மர்மம்-

பற்றி எரியும் பாலைவனம்

Image
தென் ஆப்பிரிக்காவின் கடலோர கிராமங்கள் அங்கு நடக்கும் உள்நாட்டு புரட்சிகளால் மிகவும் பாதிப்புகுள்ளாயின. வெளி தொடர்புகள் அறுந்து போன நிலையில் அங்கு பசி, பட்டினி, போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் பல உயிர்கள் மடிந்து கொண்டிருந்த சூழல். சுட்டெரிக்கும் பாலைவனம், இரக்கமுள்ளவர்கள் கொண்டு வரும் உதவிப் பொருட்களை பறிப்பதற்கென்றே இரக்கமில்லாத கடற்கொள்ளையர்கள் மொத்தத்தில் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை. இந்த சூழலில் சர்வதேச சமூகத் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பெர்குஸன் என்பவர் பாதிக்கப்பட்டுள்ள ஜனங்களுக்கு உணவுகளையும் மருந்துகளையும் கொணடு செல்வதற்காக பிரின்ஸ் குழுவை சம்மதிக்க வைத்து அவரும் உடன் செல்கிறார். கடல் மார்க்கமாகவும் பிறகு பாலைவன பயணம் மேற்கொள்ளும் போது அங்குள்ள கடற்கொள்ளையர் தாக்குதலில் பெர்குஸன் காயமடைகிறார். குழுவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு யாராவது ஒருவர் பாதிக்கப்ட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் தன் உயிரையே பணயம் வைக்க முற்பட்டு பொருட்களை ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார் பார்னே. ஒரளவு குணமடைந்து கண்விழிக்கும் பெர்குஸன் பார்

லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு கடிதம்

மதிப்பிற்குரிய லயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு, சில காலம் முன்பு திகில் காமிக்ஸில் தொடராக வெளிவந்த ஸ்பைடரின் விண்வெளி பிசாசு மற்றும் கேப்டன் ஜானின் விண்ணில் முளைத்த மண்டை ஓடு ஆகிய சித்திர தொடர்கள் விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸ் நிறைந்தவையாகவும் இருந்த தொடர்கள். படித்த அனைத்து காமிக்ஸ் இரசிகர்கள் மனதையும் கவர்ந்த தொடர்களும் கூட. இந்த இரு தொடர்களையும் தாங்கள் மீண்டும் மறுபதிப்பாக ஒரே இதழாக காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் வெளியிட்டு அந்த இரு சித்திர தொடர்களையும் சிறப்பு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் வாசகன்... ப்ரூனோ ப்ரேசில்