Posts

Showing posts from July, 2011

கார்ஸனின் கடந்த காலம்

Image
டெக்ஸ் வில்லர் கதைகள் என்றாலே டமால், டூமில் சமாச்சாரங்கள் மட்டுமே அதிகம் நிறைந்திருக்கும். கார்ஸனின் கடந்த காலம் சித்திரக் கதையில் வழக்கத்திற்கு மாறாக கார்ஸனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அன்பு, நேசம், நட்பு, வீரம் என அனைத்து சிறப்பம்சங்களும் கதையோடு கலந்து தரப்பட்டிருக்கும்.  ஆக் ஷனுக்கும், விறுவிறுப்புக்கும் குறைவே இல்லாத கதை.  இதன் வெற்றிக்கு ஒவியமும், முக்கிய காரணமாக அமைந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சித்திரக் கதை ஆகும்.  எனக்கும் பிடித்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்றாகும்.  இனி கதை. அமெரிக்க மாநிலத்தில் உள்ள டக்ஸன் நகருக்கு வரும் கார்ஸனை ஒரு மர்ம நபர் கொல்லமுயற்சிக்கிறான்.  அவனை வீழ்த்திடும் கார்ஸன் அவனிடமிருந்து ஒரு துண்டு விளம்பரத்தை கண்டு எடுக்கிறார்.  அதில் ரே க்ளம்மன்ஸ் என்ற நபரின் சவ அடக்க ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு அப்பாவிகளுக்கு அழைப்பு இருப்பதை கண்டு, உடனே மான்டானா பகுதிக்கு விரைந்து செல்கிறார் கார்ஸன்.     இரு தினங்களுக்கு பின் கார்ஸனை தேடி டக்ஸன் நகருக்கு வரும் டெக்ஸ் வில்லரும் அவரது மகனும் கார்ஸன் மான்டனா பகுதிக்க