Posts

Showing posts from August, 2011

மரண வைரங்கள் - கேப்டன் பிரின்ஸ் சாகசம்

Image
1986-ம் வருடம் திகில் கோடை மலரில் வெளிவந்த சித்திரக் கதை இது.  கதாசிரியர் மற்றும் ஒவியர் ஹர்மான் மற்றும் க்ரேக் இருவரின் கூட்டு முயற்சியில் உருவான பல சித்திரக் கதைகள் வெற்றி பெற்றுள்ளன.  அந்த வரிசையில் வெளிவந்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்று.  இனி கதை மரயாளி என்ற பகுதியை சேர்ந்த ராபர்ட் கோரல்ஸ் அந்த பகுதியின் மிகப் பெரிய பண்ணை அதிபராக இருப்பவர்.  தமது நிலங்களில் விளையும் காபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர்.  ராபர்ட்டின் மகன்களில் இருவரான ஜாய், ஜோஸ் ஆகிய இருவரும் தங்களது பண்ணை நிலங்களில் ஏராளமான பச்சை நிறக் கற்கள் (வைரங்கள்) கிடைப்பதாக கருதி பண்ணை நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெடி வைத்து அழிக்க முயல்கின்றனர்    மகன்களில் விரோதப் போக்கை தடுப்பதற்காகவும் பண்ணையின் அழிவைத் தடுப்பதற்காகவும் பிரின்ஸ் குழுவினரின் உதவியை நாடுகிறார் ராபர்ட்.  இதற்கிடையில் டூக்ஸே என்னும் கொடியவன் பண்ணையின் அழிவை தான் தடுப்பதாக கூறிக் கொண்டு மோரல்ஸ் குடும்பத்தினருடன் அடாவடியாக பேரம் பேசுகிறான். பேரத்தினால் கோபமடையும் மோரல்ஸ் குடும்பத்தினர் டூக்ஸே-வை அடித்து துரத்துகின்றனர்.