Posts

Showing posts from October, 2011

தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்

Image
தமிழ் காமிக்ஸ் பற்றிய கருத்துக்கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் நிறைந்திருக்கும். மேலைநாடுகளில் 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட காமிக்ஸ் ( சித்திரக்கதை ) புத்தகங்களின் பதிப்பக உரிமைகளைப் பெற்று, குமுதம், கல்கி, ராணி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன் ஆகிய நாளிதழ்களில் முதன்முதலாக தமிழில் தொடர்கதைகளாகச் சித்திரக்கதைகள் வெளிவரத் தொடங்கின.  அதன் பின்னர் 1965-ம் வருடத்திற்குப் பின் ஃபால்கன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், வித்தயார்த்தி மித்ரம் ஆகிய புத்தக நிறுவனங்கள் முழுநீள சித்திரக்கதைகளாக வெளியிட்டுள்ளனர்.                தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1965-ம் வருடம் முதல் வெளிவந்துகொண்டிருந்தாலும், 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரை தான் காமிக்ஸ்களுக்குப் பொற்காலமாக விளங்கியது.   இந்த காலகட்டத்தில் தான் புற்றீசல் போல ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன.  லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், திகில் காமிக்ஸ், முத்து மினி காமிக்ஸ், வாசு காமிக்ஸ், மின