Posts

Showing posts from May, 2014

தமிழ் சித்திரக் கதைகளில் எம்ஜியார்

Image
புரட்சித்தலைவர் எம்ஜியார் 17,01,1917 ல் ஸ்ரீலங்காவில் உள்ள கண்டி என்னும் ஊரில் பிறந்தார். அவரது முழுப் பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பதாகும். நாடகத்துறை மூலம் தன்னை மேம்படுத்திக் கொண்டு பிறகு சினிமாத்துறையிலும் கால் பதித்து   பெரும் நடிகராகவும்   உயர்ந்தார். மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பின் மூலமாக, சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் நுழைந்து, தமிழகத்தின் முதலமைச்சராகவும் மூன்று முறை ஆனார். தனது எழுபதாவது வயதில் (24,12,1987) இம்மண்ணை விட்டு பிரிந்தார், அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்னும் மறையாமல் உள்ளது. இவரது புகழுக்கு பல சாட்சியங்கள் உள்ளன. அதில் ஒன்றாக சித்திரக்கதை வாயிலாகவும் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு திரு, முல்லை தங்கராசன் ( கண்மணி காமிக்ஸ் –1969) அவர்களால் திரு, எம்ஜியார் அறியப்பட்டுள்ளார்.        எம்ஜியார் அவர்களைக் கொண்டு. மொத்தம் ஏழு    சித்திரக்கதைகளை உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்றினை   உங்களது பார்வைக்காக கீழே தொகுத்துள்ளேன்…         இம்மாத (ஜூலை) புத்தகங