Posts

vagam comics list (வகம் காமிக்ஸ்)

Image
அன்பு நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது முதலைப்பட்டாளத்தில் பதிவு போடுகிறேன்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு, அதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால், இதில் தலைகாட்ட முடியவில்லை! எப்போதாவது இதிலும் தலைகாட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை பதிவு செய்கிறேன்! பொதுவாக, ஏதாவது பதிவை போட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்பது எனது விருப்பமல்ல! நாம் பகிரும் பதிவு நாலு பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்! வகம் காமிக்ஸ் தொடங்கப்பட்டு இருபத்தி நான்கு புத்தகங்கள் வெளிவந்து விட்டது! அதனுடைய வரிசைப்பட்டியலை கொடுத்தால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன்! படித்து (பார்த்து) விட்டு உங்கள் எண்ணங்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்!  நன்றி!   1.    மரண ஒப்பந்தம் பல வருங்களுக்கு முன்பு வேறு நிறுவனத்தில் வெளிவந்த கதையிது, இந்தக் கதையுடன் வெளிவராத ஒரு பத்து பக்க புதுக் கதையையும் சேர்த்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது! முழு வண்ணம் + பக்கம் - 64 + விலை – 250/- மாதம் – ஜூலை   2.    சிஸ்கோ கிட் ஸ்பெஷல் – 1 இதில் மூன்று சிஸ்கோ கிட் கதைகள் வெளி

பூந்தளிர் அமர் சித்திரக்கதை

Image
  புராண , இதிகாசக் கதைகள் மூலம் இந்தியச் சித்திரக்கதை வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சிகண்ட இதழ் என்று பூந்தளிர் அமர் சித்ரகதையைக் குறிப்பிடலாம். உலக அளவில் இந்தியச் சித்திரக்கதைகளுக்கான அடையாளத்தையும் இக்கதைகள் கொண்டுள்ளன. 1984 இ ல் ‘பைகோ நிறுவனம்’ (Paicco) அமர் சித்ர கதைகளின் கதைகளுக்கான உரிமம் பெற்றுத் தமிழில் வெளியிட்டனர். அவை ‘பூந்தளிர் அமர் சித்திரக்கதைகள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளன.   இன்றும் மக்களிடையே பாரதப் பண்பாட்டை, வளரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் அடையாளத்தை இச்சித்திரக்கதைகள் பெற்றுத் தந்துள்ளன. அதனால் இன்றுவரை புத்தகச் சந்தையில்   பூந்தளிர் அமர் சித்ர கதைக்கு குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. உலக நாடுகளிடையே இந்தியச் சித்திரக்கதைக்கான அடையாளத்தைத் தாங்கி இருப்பவை இச்சித்திரக்கதைகள் ஆகும். 1984 ல் தொடங்கிய இவர்களது சித்திரக்கதை பயணம் செப்டம்பர் 1989 வரை மட்டுமே நீடித்துள்ளது!    அவர்கள் வெளியிட்டுள்ள கதைகளில் தலைப்புகளும், (பட்டியல்) அதனுடைய முகப்பு அட்டைகளும் கீழே தொகுக்கப்ப ட் டுள்ளன! இவைகளைப் பற்றிய கேள்வி, வினாக்கள் இருப்பின் கமெண்ட்டில் தெரியப்படுத்தவும் _