Posts

Showing posts from 2011

ஜான் சில்வர் - விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய இரகசிய உளவாளி .

Image
பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஓர் அங்கமான Q  பிரிவில் பணி புரியும் ஒரு ரகசிய உளவாளி ஜான் சில்வர். அவரது இயற்பெயர் ஜான் ஹவாக். ஜான் சில்வர் ஒரு தலைசிறந்த உளவாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தாலும், அவரது ஒரே இலட்சியம், தான் ஒரு தலைசிறந்த விமானியாக, புகழ்பெற வேண்டும் என்பதே ஆகும்.         ஜான் சில்வர் முதன்முறையாக டெல்டா-10 என்ற விமானத்தை இயக்கியபோது, விமானத்தில் பயணம் செய்த ஹர்ஸ், காலின்ஸ் ஆகிய இரண்டு உளவாளிகளின் கவனக்குறைவினால், விமானம் பயங்கர  விபத்துக்குள்ளாகியது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஜான் சில்வர்,  நடந்த விபத்தின் உண்மையை உணர்த்த தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய லைசன்ஸையும், வேலையையும் இழந்தார். அதன்பிறகு ஒரு துப்பறிவாளராக மாறி, நடந்தவற்றைக் கண்டுபிடித்தார். ஜான் சில்வரிடம் இருந்த அசாத்திய திறமைகளை அறிந்த 'Q' என்ற உளவு அமைப்பினர், ஜான் சில்வரின் பைலட் லைசன்சை திரும்பப் பெற்றுத்தருவதாகக் கூறி, தங்களது கடினமான பணிகளை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டனர். ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் 'Q&

தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்

Image
தமிழ் காமிக்ஸ் பற்றிய கருத்துக்கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் நிறைந்திருக்கும். மேலைநாடுகளில் 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட காமிக்ஸ் ( சித்திரக்கதை ) புத்தகங்களின் பதிப்பக உரிமைகளைப் பெற்று, குமுதம், கல்கி, ராணி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன் ஆகிய நாளிதழ்களில் முதன்முதலாக தமிழில் தொடர்கதைகளாகச் சித்திரக்கதைகள் வெளிவரத் தொடங்கின.  அதன் பின்னர் 1965-ம் வருடத்திற்குப் பின் ஃபால்கன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், வித்தயார்த்தி மித்ரம் ஆகிய புத்தக நிறுவனங்கள் முழுநீள சித்திரக்கதைகளாக வெளியிட்டுள்ளனர்.                தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1965-ம் வருடம் முதல் வெளிவந்துகொண்டிருந்தாலும், 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரை தான் காமிக்ஸ்களுக்குப் பொற்காலமாக விளங்கியது.   இந்த காலகட்டத்தில் தான் புற்றீசல் போல ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன.  லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், திகில் காமிக்ஸ், முத்து மினி காமிக்ஸ், வாசு காமிக்ஸ், மின

மரண வைரங்கள் - கேப்டன் பிரின்ஸ் சாகசம்

Image
1986-ம் வருடம் திகில் கோடை மலரில் வெளிவந்த சித்திரக் கதை இது.  கதாசிரியர் மற்றும் ஒவியர் ஹர்மான் மற்றும் க்ரேக் இருவரின் கூட்டு முயற்சியில் உருவான பல சித்திரக் கதைகள் வெற்றி பெற்றுள்ளன.  அந்த வரிசையில் வெளிவந்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்று.  இனி கதை மரயாளி என்ற பகுதியை சேர்ந்த ராபர்ட் கோரல்ஸ் அந்த பகுதியின் மிகப் பெரிய பண்ணை அதிபராக இருப்பவர்.  தமது நிலங்களில் விளையும் காபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர்.  ராபர்ட்டின் மகன்களில் இருவரான ஜாய், ஜோஸ் ஆகிய இருவரும் தங்களது பண்ணை நிலங்களில் ஏராளமான பச்சை நிறக் கற்கள் (வைரங்கள்) கிடைப்பதாக கருதி பண்ணை நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெடி வைத்து அழிக்க முயல்கின்றனர்    மகன்களில் விரோதப் போக்கை தடுப்பதற்காகவும் பண்ணையின் அழிவைத் தடுப்பதற்காகவும் பிரின்ஸ் குழுவினரின் உதவியை நாடுகிறார் ராபர்ட்.  இதற்கிடையில் டூக்ஸே என்னும் கொடியவன் பண்ணையின் அழிவை தான் தடுப்பதாக கூறிக் கொண்டு மோரல்ஸ் குடும்பத்தினருடன் அடாவடியாக பேரம் பேசுகிறான். பேரத்தினால் கோபமடையும் மோரல்ஸ் குடும்பத்தினர் டூக்ஸே-வை அடித்து துரத்துகின்றனர்.  

கார்ஸனின் கடந்த காலம்

Image
டெக்ஸ் வில்லர் கதைகள் என்றாலே டமால், டூமில் சமாச்சாரங்கள் மட்டுமே அதிகம் நிறைந்திருக்கும். கார்ஸனின் கடந்த காலம் சித்திரக் கதையில் வழக்கத்திற்கு மாறாக கார்ஸனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அன்பு, நேசம், நட்பு, வீரம் என அனைத்து சிறப்பம்சங்களும் கதையோடு கலந்து தரப்பட்டிருக்கும்.  ஆக் ஷனுக்கும், விறுவிறுப்புக்கும் குறைவே இல்லாத கதை.  இதன் வெற்றிக்கு ஒவியமும், முக்கிய காரணமாக அமைந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சித்திரக் கதை ஆகும்.  எனக்கும் பிடித்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்றாகும்.  இனி கதை. அமெரிக்க மாநிலத்தில் உள்ள டக்ஸன் நகருக்கு வரும் கார்ஸனை ஒரு மர்ம நபர் கொல்லமுயற்சிக்கிறான்.  அவனை வீழ்த்திடும் கார்ஸன் அவனிடமிருந்து ஒரு துண்டு விளம்பரத்தை கண்டு எடுக்கிறார்.  அதில் ரே க்ளம்மன்ஸ் என்ற நபரின் சவ அடக்க ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு அப்பாவிகளுக்கு அழைப்பு இருப்பதை கண்டு, உடனே மான்டானா பகுதிக்கு விரைந்து செல்கிறார் கார்ஸன்.     இரு தினங்களுக்கு பின் கார்ஸனை தேடி டக்ஸன் நகருக்கு வரும் டெக்ஸ் வில்லரும் அவரது மகனும் கார்ஸன் மான்டனா பகுதிக்க

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

Image
01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ] 2.பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர் ![கௌபாய் ] 3.மந்திரியைக் கடத்திய மாணவி  [ஜேம்ஸ் பாண்ட் ] 4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்] 5.காதலியை விற்ற உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ] 6.நாலாவது பலி [கௌபாய் ] 7.சுறா வேட்டை  [ஜேம்ஸ் பாண்ட் ] 8.மர்ம முகமூடி [கௌபாய் ] 9.மந்திரத் தீவு  [ஜேம்ஸ் பாண்ட் ] 10.சாட்டையடி வீரன் [கௌபாய் ] 11.மிஸ்டர் ABC  [ஜேம்ஸ் பாண்ட் ] 12.மின்னல் வீரன் [கௌபாய் ] 13.அழகிய ஆபத்து  [ஜேம்ஸ் பாண்ட் ] 14.விசித்திர விமானம் [ ஜுலி ] 15.மர்ம ராக்கெட்  [ஜேம்ஸ் பாண்ட் ] 16.மரணப் பரிசு [கார்ஸன் ] 17.கடல் கொள்ளை  [ஜேம்ஸ் பாண்ட் ] 18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ] 19.டாக்டர் நோ  [ஜேம்ஸ் பாண்ட் ] 20.ராட்சத பல்லி [நிக்,டான்]  21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ] 22.இரும்பு மனிதன்  [இந்திரஜித் ] 23.இரத்தக் காட்டேரி  [ஜேம்ஸ் பாண்ட் ] 24.புரட்சி வீரன் [கௌபாய் ] 25.எரி நட்சத்திரம்   [ஜேம்ஸ் பாண்ட் ] 26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை] 27.கவச உடை  [ஜேம்ஸ் பாண்ட் ] 28.பழிக்குப் பழி [கௌபாய் ] 29.கதிர் வெடி  [ஜேம்ஸ் பாண்ட் ] 30.மரக் கோட்டை [கார்ஸன்] 31.மனித

இரகசிய உளவாளி பிலிப் காரிகன்

Image
1934-ம் வருடம் டேனியல் ஹம்மட் என்பவர் பிலிப் காரிகன் என்கிற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். பல தலை சிறந்த உளவாளிகளில் இவரும் ஒருவர். இரு நபர்களுக்கான நேருக்கு நேர் சண்டையிலும், துப்பாக்கி சண்டையிலும் சிறந்து விளங்குபவர். இவரது மனைவியின் பெயர் வில்டா காரிகன். ஆரம்ப காலங்களில் இரகசிய உளவாளி X-9 என்கிற பெயரில் பெயரிடப்படாத ஒரு உளவு நிறுவனத்திற்காக வேலை பார்த்துள்ளார். 1940-க்கு பிறகு இரகசிய உளவாளி X-9 என்ற பெயரை மாற்றி பிலிப் காரிகனாக அழைக்கப்பட்டுள்ளார்.அதன் பிறகு F.B.I. உளவாளியாக மாறி பல சிக்கலான விசித்திரமான பலவழக்குகளை தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1975-ம் வருடம் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு பிலிப் காரிகன் அறிமுகமானார். முத்து காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மேகலா காமிக்ஸ் ராணி காமிக்ஸ் மற்றும் தினத்தந்தி நாளேடுகளில் (தொடர்) மூலமாகவும் பிலிப் காரிகனின் சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழில்வந்துள்ள காரிகனின் கதைகளின் தலைப்புகள் மேகலா காமிக்ஸ் 1) எங்கே அந்த வைரம் 2) கழுகு பார்வை 3) ஆயுதப் புதையல் 4) மனித குண்டு 5) மாய விமானம