Posts

Showing posts from 2021

பூந்தளிர் அமர் சித்திரக்கதை

Image
  புராண , இதிகாசக் கதைகள் மூலம் இந்தியச் சித்திரக்கதை வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சிகண்ட இதழ் என்று பூந்தளிர் அமர் சித்ரகதையைக் குறிப்பிடலாம். உலக அளவில் இந்தியச் சித்திரக்கதைகளுக்கான அடையாளத்தையும் இக்கதைகள் கொண்டுள்ளன. 1984 இ ல் ‘பைகோ நிறுவனம்’ (Paicco) அமர் சித்ர கதைகளின் கதைகளுக்கான உரிமம் பெற்றுத் தமிழில் வெளியிட்டனர். அவை ‘பூந்தளிர் அமர் சித்திரக்கதைகள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளன.   இன்றும் மக்களிடையே பாரதப் பண்பாட்டை, வளரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் அடையாளத்தை இச்சித்திரக்கதைகள் பெற்றுத் தந்துள்ளன. அதனால் இன்றுவரை புத்தகச் சந்தையில்   பூந்தளிர் அமர் சித்ர கதைக்கு குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. உலக நாடுகளிடையே இந்தியச் சித்திரக்கதைக்கான அடையாளத்தைத் தாங்கி இருப்பவை இச்சித்திரக்கதைகள் ஆகும். 1984 ல் தொடங்கிய இவர்களது சித்திரக்கதை பயணம் செப்டம்பர் 1989 வரை மட்டுமே நீடித்துள்ளது!    அவர்கள் வெளியிட்டுள்ள கதைகளில் தலைப்புகளும், (பட்டியல்) அதனுடைய முகப்பு அட்டைகளும் கீழே தொகுக்கப்ப ட் டுள்ளன! இவைகளைப் பற்றிய கேள்வி, வினாக்கள் இருப்பின் கமெண்ட்டில் தெரியப்படுத்தவும் _