Posts

Showing posts from March, 2010

புரட்சித் தலைவன் பிரின்ஸ்

Image
க்ரனாடா தீவின் செல்வந்தரான பிரான்ஜென் பணபலம், படைபலம் என அனைத்தையும் கொண்ட ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறான். அங்கு வசிக்கும் ஏழை விவசாயிகளின் நிலங்களை தன்னுடைய ஏற்றுமதி தொழிலுக்காக சொற்ப விலை கொடுத்து பறித்துக் கொள்கிறான். பிரான்ஜென்னால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் எமிலியோ என்ற நபரின் தலைமையில் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கி அவனை எதிர்கின்றார்கள். புரட்சிப் படை தலைவன் எமிலியோவை தந்திரமாக சிறை பிடிக்கிறான் ப்ரான்ஜென். இந்த சூழ்நிலையில் கழுகு கப்பல் பழுதடைந்த காரணத்தினால் க்ரனாடா தீவிற்கு வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் எதிர்பாராத விதமாக புரட்சிப் படை முகாமிற்கு வந்து சேர்கின்றார்கள். ப்ரான்ஜென்னுக்கு எதிராக போராடும் அவர்களின் உண்மைநிலையை கண்டு புரட்சிப் படைக்கு தலைமை ஏற்று எதிரிகளோடு மோதுகிறார் பிரின்ஸ். பிரின்ஸின் சாதுர்யத்தால் எதிரிகளின் படைகளையும் ப்ரான்ஜென்னின் சூழ்ச்சியையும் முறியடித்து அவனிடம் இழந்த அனைத்து மக்களின் நிலங்களையும் இறுதியில் மீட்டு தருவதே கதை. பிரின்ஸ் கதைகளில் சற்று மாறுபட்ட விதத்தில் கௌபாய் பாணியில் இந்த சித்திரக் கதையை உருவாக்கி