Posts

Showing posts from 2009

ஆப்பிரிக்காவில் பிரின்ஸ்

Image
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லம்பாஸியில் உள்நாட்டு கலவரங்கள் வெடிக்க, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வடங்கோக்கள் என்னும் புரட்சியாளர்களால் நகரமே நாசமாகிறது. புரட்சி கும்பலின் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கொலைவெறியுடன் கொன்று குவிக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் திணறிக் கொண்டிருக்கும் அவல நிலை. இதற்கிடையே புரட்சியாளர்களிடமிருந்து துணிச்சலாக தப்பிக்க முயல்கின்றனர் ரயான் குடும்பத்தினர். சண்டையிட்டுக் கொண்டே லம்பாஸி நகரை விட்டு சிறிய விமானத்தில் இரு குழந்தைகளுடன் தப்பித்து செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக எதிரிகளின் கண்ணில் விமானம் தென்பட அதை சுட்டு சேதப்படுத்துகின்றார்கள். பழுதடைந்த விமானத்தோடு அடர்ந்த முட்காட்டின் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர். தங்களை சுற்றிலும் விஷ முட்கள் சூழ்ந்திருப்பதை கண்டு மரணத்தின் விளிம்பில் உதவிக்காக காத்துக் கிடக்கின்றனர். ரயான் குடும்பத்தினரை மீட்பதற்காக யாருமே செல்ல தயங்கும் ஆபத்துகள் நிறைந்த கானகத்திற்கு மனித நேயம் மிக்க தீரர்களான பிரின்ஸ் மற்றும் பார்னே துணிச்சலாக செல்லத் துணி

தலை வாங்கிய குரங்கு - டெக்ஸ் வில்லர் சாகஸம்

Image
துப்பாக்கி வீரரான டெக்ஸ் வில்லர், ரேஞ்சர் உளவுப் பிரிவில் தலை சிறந்த ஏஜெண்டாக திகழ்பவர் . செவ்விந்திய இனத்தில் உள்ள ஒரு பிரிவான  நவஜோ என்ற இனத்தின் தலைவர். வெள்ளையரான இவர் லிலித் என்ற செவ்விந்திய பெண்ணை மணந்து,  சில வெள்ளையர்களின் சூழ்ச்சி காரணமாக மனைவியை பறிகொடுத்தவர். செவ்விந்திய இனத்தையும், அடிமைகளாக அழைத்து வரப்பட்ட ஆப்பிரிக்கர்களையும் வெள்ளையர்கள்  வெறுத்தனர். டெக்ஸ் வில்லர் இவ்விரு இனங்களுக்காக தொடர்ந்து போராடுபவர். நவஜோ இனத்தவர் இவரை இரவுக் கழுகு என்றும் அழைப்பார்கள் டெக்ஸ் வில்லரின் உற்ற தோழனும், சக ரேஞ்சருமான கிட் கார்ஸன் நகைச்சுவை உணர்வு கொண்டவர். டெக்ஸ் வில்லருடன் பல சாகஸங்களில் பங்கேற்று உயிர் காப்பான் தோழன் என்பதற்கேற்ப திகழ்பவர். துப்பாக்கி சுடுவதிலும் வல்லமை பெற்றவர். டெக்ஸ் வில்லரின் வாரிசான சின்னக் கழுகு கிட் தந்தையை போலவே சாகஸ வீரர். டைகர் ஜாக் ஆபத்தான தருணங்களில் டெக்ஸ்-க்கு உதவும் செவ்விந்திய தோழன். தன்னுடைய பலங்களாக டெக்ஸ் கருதுவது இவர்கள் மற்றும் தன்னுடைய குதிரை டைனமைட் மற்றும் வின்சென்ஸ்டர். இவரின் சாகஸங்கள் இத்தாலி. ப்ரென்ஞ், ஆங்கிலம், ஜெர்மன்

அசோக்/மேத்தா காமிக்ஸ் வரிசைப்பட்டியல்

Image
லயன் காமிக்ஸ் மற்றும் இராணி காமிக்ஸ் தொடங்கிய 1984-ம் ஆண்டில்தான் மேத்தா காமிக்ஸ்-ம் தொடங்கப்பட்டது. சிறிது காலத்திற்கு பிறகு அசோக் காமிக்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் தொடர்ந்து வந்தது. தரமான காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்ட நிறுவனங்களில் மேத்தா காமிக்ஸ் நிறுவனமும் ஒன்று. இவர்கடைய நிறுவனத்தில் ஜான் சில்வர் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளனர். அச்சித்திர புத்தங்களில் வெளிவந்த இரத்தப் பிசாசு என்ற சித்திரத் தொடருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. எதன் காரணத்தினாலோ மேத்தா காமிக்ஸ் வெளிவராமலே நின்றுவிட்டது. அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளேன். 1. இரத்த விளையாட்டு (ஜான் சில்வர்) 2. கொலைக் கழகம் (ஜான் சில்வர்) 3. மரணக்கயிறு (ஜான் சில்வர்) 4. மனித வேட்டை (ஜான் சில்வர்) 5. பயங்கரத் தீவு (ஜான் சில்வர்) 6. விசித்திர பந்தயம் (ஜான் சில்வர்) 7. மரணத்தின் நிழலில் (ஜான் சில்வர்) 8. நவீனக் கொள்ளையர் (ஜான் சில்வர்) 9. புதிர்மாளிகை (லில்லி குழுவினர்) 10, பொற்சிலை மர்மம் (ஜான் சில்வர்) 11. நள்ளிரவு பிசாசு (லில்லி குழுவினர்) 12. சுரங்க வெடி மர்மம் (

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Image

முகமற்ற கண்கள்

Image
வில்லியம் வான்ஸின் சித்திரங்களில் க்ரெக் (லுயி அல்பர் என்ற புனைப்பெயரில்)அவரின் கதையுடன் 1970-களில் வெளிவந்த ஒரு சித்திரத் தொடர் முதலைப்படை. தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஒரு இரகசிய பிரிவின் அதிரடி படை: முதலைப் படை. இந்த படையின் தலைவர் கலோனல் எல் (காமெடி கர்னல் இல்லீங்க!). கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில். படையின் உறுப்பினர்கள் பற்றி சிறிய அறிமுகம். ப்ரூனோ ப்ரேசில் கமாண்டர். மின்னல் வேக செயல்திறன் கொண்டவர் (என்னை போலவே) கௌச்சோ மோரல்ஸ் முன்னாள் ரௌடி. சிறைச்சாலையின் வெளிப்புறம் மட்டுமின்றி உள்புறமும் நல்ல பழக்கம் அண்ணாச்சிக்கு. விப் ரபேல் (அல்லது) ஜுடி சாட்டையடி வீராங்கனை. சர்க்கஸில் காட்டு மிருகங்களை சாட்டையை வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தவர் இப்போது நாட்டு மிருகங்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவர். டெக்ஸாஸ் அண்ணாச்சி ஒரு கௌபாய். டமால் டூமில் பேர்வழி. பில்லி ப்ரேசில் இவரும் அதிரடி படை காரர். கமாண்டர் ப்ரூனோவின் தம்பி. நாடோடி ஆள் பார்க்க ஜிப்சி அடிச்சா எதிரிகள் கப்சிப். இந்த சித்திர தொடர்கள் வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கதையே மு

கொலைகார கானகம்

Image
கடலோரம் அமைந்த காட்டினால் சூழப்பட்ட தீவு ஒன்றில் தீடீரென காட்டுத் தீ ஏற்படுகிறது. தீயை அணைக்க முடியாதபடி காற்று பலமாக வீசி தீயை மேலும் வேகமாக பரவசெய்கிறது. தீவில் உள்ள மக்கள் தீவின் நடுவில் சிக்கிக் கொள்ள அவர்களை மீட்பதற்காக அருகிலுள்ள அனைத்து கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்து வந்தடையும் சிறு கப்பல்களால் கூட தீவை நெருங்க முடியாத அளவு கடலெங்கும் ஊசி போன்ற பாறைகள் அரணாக அமைந்துள்ளது. மீறி செல்வோருக்கு கப்பலும், உயிரும் மீஞ்சாத நிலைமை. காப்பீடு நிறுவனங்களும் கைவிரித்து விட்ட சூழ்நிலையில், பிரின்ஸ் குழுவினரின் கழுகு கப்பலும், மேலும் இரு கப்பல்களும் துணிச்சலாக தீவு மக்களை மீட்பதற்காக செல்கின்றன. தீவில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் உபயோகமற்ற நிலையில் தீவு மக்களுக்கு உதவி வந்து கொண்டிருப்பதை தெரிவித்து, அவர்களை ஒன்று திரட்டுவதற்காக காட்டுத் தீக்குள் நுழைந்து செல்ல தயாராகிறார் கேப்டன் பிரின்ஸ். பல ஆபத்துகளை எதிர்நோக்கி செல்லும் பிரின்ஸ் தீவு மக்களிடம் பத்திரமாக சென்றடைந்தாரா? பார்னே தலைமையில் சென்ற மூன்று கப்பல்களும் விபத்தில் சிக்காமல் தீவிலிலுள்ள

பனிமண்டலக் கோட்டை - பனியில் ஒரு சாகசம்

Image
கேப்டன் பிரின்ஸ்-ன் எதிரியான வாங்-ஓ-வின் அழகிய மகளை மூக் மாஞ்ச் என்ற இன்னொரு பிரபல கடத்தல்காரன் கடத்தி ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள வைரங்களை கேட்கிறான். பேரத்திற்கு உடன்படும் வாங்-ஓ தன் மகளை மீட்டு வர தன்னுடன் இருப்பவர்களை நம்பாமல் தன்னுடைய பரம வைரியான பிரின்ஸ்-ன் உதவியை நாடுகிறான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பிரின்ஸ்-ம் அவனுக்கு உதவி செய்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் சம்மதிக்கிறான். வைரத்துடன் புறப்படும் பிரின்ஸ் மற்றும் பார்னே செங்குத்தான மலைகள், குறுகலான பாதைகள், கந்தகம் நிறைந்த பிரதேசங்கள், வழிப்பறி திருடர்களின் அபாயங்கள், மனித இரத்தத்தை ருசி பார்க்கும் ராட்சத வவ்வால்கள் என பல ஆபத்துகளை கடந்து மூக் மாஞ்சுவிடம் வைரங்களை ஒப்படைத்து வாங்-ஓவின் மகளை மீட்டார்களா என்பதுதான் கதை. வித்தியாசமான கதை சூழல். பிரமிப்பான ஒவியங்கள். கடைசியில் மிரள வைக்கம் சஸ்பென்ஸ். ஓவியர் மற்றும் கதாசிரியர் ஹெர்மான் மற்றும் க்ரேக். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்திரப் புதையலை நமது லயன் மற்றும் முத்து வாசகர்களில் ஒருவரான திரு ராகுலன் என்பவர் பிரெனஞ் (மூலம்) மொழியில், பெரிய அளவில், முழு

சதுப்புநில காட்டு சாகசங்கள்

Image
மான்டெனவானா என்ற கற்பனை நாட்டின் ஜனாதிபதி வாக்கரை கொன்றுவிட்டு அந்நாட்டை கைப்பற்ற துடிக்கின்றான் ஜெனரல் மன்டோஸா. மன்டோஸாவின் கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் ஜனாதிபதியை பிரின்ஸ் குழுவினர் காப்பாற்றுகின்றார்கள். தன்னாட்டு மக்களுக்கு தான் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்து சதிகார ஜெனரல் மன்டோஸாவின் பிடியிலிருந்து தன் நாட்டை பிரின்ஸ் குழுவுடன் எப்படி மீட்க போராடுகின்றார்கள் என்பதுதான் கதை இந்த கதையில் சதுப்பு நிலக் காடும் ஒருகதாபாத்திரமாக அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அங்கே நடைபெறும் மரணப் போராட்டம் தான் ஹைலைட். கானக வாசிகளின் தீடீர் தாக்குதல்கள். சதிகார படையினரின் கண்களில் படாமல் தப்பி செல்லும் முயற்சிகள் என கதையை நடத்தி செல்லும் கதாசிரியரின் திறமையையும், சதுப்புநிலக் காட்டை கண்முன்னே கொண்டுவந்திருக்கும் ஒவியரின் திறமையும் இணைந்து இந்த சித்திர கதையின் தரத்தை எங்கோ கொண்டு சென்று விட்டன. மனதை கவர்ந்த கட்டம் என்று உள்ளதல்லவா? கானகவாசிகளின் பிடியில் சிக்கிக் கொள்ளும் பார்னே-வை தனி ஆளாக மீட்க முடியாத காரணத்தினால் மனம் வருந்தி திரும்பிச் செல்லும் பிரின்ஸ

சித்திர நினைவலைகள்

Image
காமிக்ஸ் புத்தகங்கள் பற்றிய கருத்து கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும்தான் நிறைந்திருக்கும். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1970-ம் வருடம் முதல் வெளிவந்து கொண்டிருந்தாலும் 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரைதான் காமிக்ஸ்களுக்கு பொற்காலமாக விளங்கியது. இந்த காலக்கட்டத்தில்தான் ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அவற்றில் முத்து காமிக்ஸ், இந்திரஜால், மாலைமதி, லயன், ராணி, அசோக், திகில், முத்து மினி காமிக்ஸ், சக்தி, மினி லயன், ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ், டார்ஜான் காமிக்ஸ், பார்வதி, மதி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், மலர் காமிக்ஸ் ரேகா காமிக்ஸ், கஸ்துரரி காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ் என பல காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்த காலமும் கூட. எதை வாங்குவது எதை படிப்பது என்று திக்குமுக்காடிய காலகட்டமும் கூட. 1995-ம் வருடத்திற்கு பிறகு இதன் நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. புயலில் சிக்கி காணாமல் போன மாதிரி நிறைய புத்தகங்கள் காணாமல் போய்விட்டன. தற்போது லயன் காமிக்ஸ் மற்றும் முத்த

எரிமலை தீவில் பிரின்ஸ்

Image
சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனான லம்பார்டியும் கொலைக்கு சிறிதும் அஞ்சாத அவனது இரு கூட்டாளிகளான ஸ்டீபன் மற்றும் ஹம்மிங்ஸ் ஆகிய மூவரும் பிரின்ஸிக்கு சொந்தமான கழுகு கப்பலை கடத்தி செல்கின்றனர். அருகிலிருக்கும் தீவுகளில் ஒன்றான கோர்க்காவில் எரிமலை வெடித்து தீவே அழியப் போவதாக அரசாங்கம் விடுத்த எச்சரிக்கைய கேட்டு தீவு மக்கள் அனைவரும் கப்பல்களில் ஏறித் தப்ப முயல்கிறார்கள். இந்த நிலையில் அத்தீவிற்கு வந்தடையும் கடத்தல் பேர்வழிகள் தீவு மக்களை பிணைக் கைதிளாக்கி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்து தீவிலிருந்து தப்பிக்க திட்டமிடுகிறார்கள். அரசாங்கமும் இவர்களுடைய கோரிக்கைகளுக்கு பணிந்து அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருகிறது, இதனிடையே சுயநலம் காரணமாக கடத்தல் பேர்வழிகளுக்குள் கலகம் ஏற்பட இதில் தலைவன் பலியாகிவிடுகிறான் எஞ்சியிருக்கும் இவருக்குள் மோதல் ஏற்படுகிறது. பல இன்னல்களை கடந்து அங்கு வந்து சேரும் பிரின்ஸ்சும் மோதலில் கலந்து கொள்ள நேரிடுகிறது இந்த நேரத்தில் எரிமலையும் பயங்கரமாக வெடித்து கொதிக்கும் குழம்பாக தீவையே முற்றுகையிட பாய்ந்தோடி வருகிறது. எதிரிகளிடமும் தீக்கு

பயங்கர புயல் - இயற்கையின் சீற்றத்தை துல்லியமாக காட்டியிருக்கும் ஒரு மகத்தான சித்திரக் கதை

Image
டாகோ-டாகோ என்னும் அழகிய தீவில் இந்த கதை தொடங்குகிறது. அங்கு ஓய்வெடுக்க வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் பார்னேயின் பழைய அடிதடி நண்பர் லோபோவை சந்திக்க நேர்கிறது. லோபோ ஒரு தீவை சூதாட்டத்தில் ஜெயித்த விவரத்தை சொல்லி அந்த தீவிற்கு அழைத்து செல்கிறார். அந்த தீவினை உரிமை கொண்டாடும் அண்ணன்-தங்கை டெட்டி மற்றும் கிறிஸ்டி இருவரும் அங்கு வசிக்கும் கானக வாசிகளை துணையாக வைத்துக் கொண்டு தீவில் வசிக்கிறார்கள். பிரின்ஸ் குழு மற்றும் லோபோவினை அந்நியர்களாக நினைத்து அவர்களை விரட்டியடிக்க நினைக்கும்போது, டெட்டி தவறி கடலில் விழுந்து விடுகிறான். அந்த தீவின் கரையோரத்தில் வசிக்கும் ஒரு ராட்சஸ ஜந்து ஒன்று அவனை துரத்துகிறது. அதிலிருந்து பிரின்ஸ் அவரை காப்பாற்றுகிறார். தன் உயிரை காத்த நன்றிக் கடனாக சமாதானமாகும் டெட்டி அவர்களுடன் சேர்ந்து தொல்லை கொடுத்து வரும் அந்த ராட்சஸ ஜந்துவை கொல்ல ஆயத்தமாகிறார்கள். அந்த ஜந்துக்கு நிறைய கடல் மீன்களை உணவாக போட்டு அது அரை மயக்க நிலையில் இருக்கும்போது வேட்டையடலாம் என்ற திட்டத்துடன் இருக்கும்போது, அந்த தீவில் வசிக்கும் காட்டுவாசிகளின் தலைவன் இவர்களின் குறுக்கீட்டினை

திகில் காமிக்ஸ் லிஸ்ட்

Image
1. சைத்தான் கிரகம் - ஜெட் வீரர் லோகன் 2. பிசாசுச் செடிகள் - புரபசர் லோகன்  3. பயங்கரப் பூனைகள் - உட்வர்ட்  4. பிசாசுக் குரங்கு - மார்ஷல்  5. பனிமலை பூதம் - ரிக்கன் & மேஜர்  6. இரத்தப் படலம் - ஜேசன்  7. மர்மக் கத்தி - ரோஜர் & பில்  8. இரத்தக் காட்டேரி மர்மம் - ரிப்போட்டர் ஜானி  9. சைத்தான் வீடு- ரிப்போட்டர் ஜானி  10. மர்ம ஏரி - மார்ஷல்  11. பணிமண்டலக் கோட்டை - பிரின்ஸ் 12. மர்மச் சவப்பெட்டிகள் - ப்ருனோ பிரேசில்  13. மரண விளையாட்டு - ஜான் ராம்போ  14. சிவப்புப் பாதை - ரிப்போட்டர் ஜானி  15. சாவதற்கு நேரமில்லை - சைமன்  16. பயங்கரப் புயல் - பிரின்ஸ்  17. கோடை மலர் - ஸ்பெஷல்  18. கடற் கோட்டை மர்மம் - வில்சன்  19. ஓநாய் மனிதன் - ரிப்போட்டர் ஜானி  20. முகமற்ற கண்கள் - ப்ருனோ பிரேசில்  21. சிரித்துக் கொல்ல வேண்டும் - பேட்மேன்  22. சைத்தான் துறைமுகம் - பிரின்ஸ்  23. கறுப்புக் கிழவி ஸ்பெஷல் - கறுப்புக் கிழவி  24. பிசாசுக் குகை - ரிப்போட்டர் ஜானி  25. பௌர்ணமி வேட்டை - பேட்மேன்  26. பேட்மேன் கிறுக்கனா? - பேட்மேன்  27. பற்றி எரியும

மினி லயன் காமிக்ஸ் லிஸ்ட்

Image
இதுவரை வெளிவந்த மினி லயனில் வெளிவந்த புத்தகங்களின் பட்டியல் கீழே வெளியிடப்பட்டுள்ளது. 1. துப்பாக்கி முனையில்-ஜோன்ஸ் 2. மரண சர்க்கஸ்-மேசன் 3. கருப்பு பாதிரி மர்மம்-புயல் வேக இரட்டையர்கள்   4. கானக மோசடி-சூப்பர் பைலட் டைகர் 5. சொர்க்கத்தின் சாவி-அலிபாபா 6. ஆர்டிக் நரகம்-சூப்பர் பைலட் டைகர்   7. கோப்ரா தீவில் ஸ்பைடர்-ஸ்பைடர் 8. ஸ்பைடர் படை-ஸ்பைடர் 9. விற்பனைக்கு ஒரு ஷெரீப்-சிக் பில்  10. ஒரு கள்ளப்பருந்தின் கதை-சார்லி 11. விசித்திர ஜோடி-ஜெர்ரி&ஷர்மா 12. வெள்ளைப் பிசாசு-அலிபாபா 13. ஒரு நாணயப் போராட்டம்-அங்கிள் ஸ்குருஜ் 14. சம்மர் ஸ்பெஷல்-ஸ்பெஷல் 15. பயங்கரப் பயணம்-சுஸ்கி&விஸ்கி  16. மாயத்தீவில் அலிபாபா-அலிபாபா 17. நீலப்பேய் மர்மம்-சிக் பில் 18. புரட்சித் தீ-லக்கி லுக் 19. ராஜா ராணி ஜாக்கி-சுஸ்கி&விஸ்கி  20. விண்வெளியில் ஒரு எலி-சிக் பில்  21. பிசாசுப் பண்ணை-லக்கி லுக்  22. ஹாலிடே ஸ்பெஷல்-ஸ்பெஷல் 23. நடுக்கடலில் எலிகள்-அங்கிள் ஸ்குருஜ்  24. இரத்த வெறி -லக்கி-லுக்  25. பயங்கரப் பொடியன்-லக்கி லுக் 26. தேவை ஒரு மொட்டை-சிக் பில் 27. சிவப்பு மலை மர்மம்-

பற்றி எரியும் பாலைவனம்

Image
தென் ஆப்பிரிக்காவின் கடலோர கிராமங்கள் அங்கு நடக்கும் உள்நாட்டு புரட்சிகளால் மிகவும் பாதிப்புகுள்ளாயின. வெளி தொடர்புகள் அறுந்து போன நிலையில் அங்கு பசி, பட்டினி, போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் பல உயிர்கள் மடிந்து கொண்டிருந்த சூழல். சுட்டெரிக்கும் பாலைவனம், இரக்கமுள்ளவர்கள் கொண்டு வரும் உதவிப் பொருட்களை பறிப்பதற்கென்றே இரக்கமில்லாத கடற்கொள்ளையர்கள் மொத்தத்தில் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை. இந்த சூழலில் சர்வதேச சமூகத் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பெர்குஸன் என்பவர் பாதிக்கப்பட்டுள்ள ஜனங்களுக்கு உணவுகளையும் மருந்துகளையும் கொணடு செல்வதற்காக பிரின்ஸ் குழுவை சம்மதிக்க வைத்து அவரும் உடன் செல்கிறார். கடல் மார்க்கமாகவும் பிறகு பாலைவன பயணம் மேற்கொள்ளும் போது அங்குள்ள கடற்கொள்ளையர் தாக்குதலில் பெர்குஸன் காயமடைகிறார். குழுவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு யாராவது ஒருவர் பாதிக்கப்ட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் தன் உயிரையே பணயம் வைக்க முற்பட்டு பொருட்களை ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார் பார்னே. ஒரளவு குணமடைந்து கண்விழிக்கும் பெர்குஸன்

லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு கடிதம்

மதிப்பிற்குரிய லயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு, சில காலம் முன்பு திகில் காமிக்ஸில் தொடராக வெளிவந்த ஸ்பைடரின் விண்வெளி பிசாசு மற்றும் கேப்டன் ஜானின் விண்ணில் முளைத்த மண்டை ஓடு ஆகிய சித்திர தொடர்கள் விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸ் நிறைந்தவையாகவும் இருந்த தொடர்கள். படித்த அனைத்து காமிக்ஸ் இரசிகர்கள் மனதையும் கவர்ந்த தொடர்களும் கூட. இந்த இரு தொடர்களையும் தாங்கள் மீண்டும் மறுபதிப்பாக ஒரே இதழாக காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் வெளியிட்டு அந்த இரு சித்திர தொடர்களையும் சிறப்பு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் வாசகன்... ப்ரூனோ ப்ரேசில்