Posts

Showing posts from November, 2008

லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு ஒரு வாசகன் கடிதம்

மதிப்பிற்குரிய திரு, எஸ் விஜயன் அவர்களுக்கு, அச்சு காகிதத்தின் திடீர் விலை உயர்வால் தாங்கள் எங்களுக்கு வைத்துள்ள மூன்று Options 1) விலையேற்றலாமா? 2) பக்கங்களை குறைக்கலாமா? 3) சைஸை குறைக்கலாமா? இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் புத்தகத்தின் விலையை ரூபாய் 15 என்று உயர்த்தி விட்டு சில பக்கங்களை கூடுதலாக சேர்த்து வெளியிடலாம். அல்லது சைஸை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் வழக்கமான பக்கங்களுடன் வெளியிடலாம். எக்காரணத்தை முன்னிட்டும் பக்கங்களையோ, சைஸையோ குறைப்பதை தாங்கள் தவிர்த்து விடவும். தற்போதைய அனைத்து வார இதழ்களும், மாத இதழ்களின விலையேற்றத்தையும் மற்ற விலைவாசி உயர்வையும் அனைவருமே அறிவார்கள். ஆதலால், தாங்களும் தயங்காமல் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ப்ரூனோ ப்ரேசில்

நான் ரசித்துப் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்.

Image
1. சை த் தான் துறைமுகம் சிறு மு ன்னுரை : வட துருவத்தில் ஆர்க்டிக் கடல். அங்கே மேரி நவம்பர் என்ற கப் பல் த ரை தட்டி நிற்கிறது. அந்த கப்பலில் ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற கேப்டன் பிரின்ஸ் குழுவினர் செல்கிறார்கள். கடும் பனிப் பொழிவுகளிடையே கேப்டன் பிரின்ஸ் எதிரிகளோடு மோதுகிறார். இறுதியில் கரை தட்டிய கப்பலில் சிக்கி இ ரு ந் தவர்களை காப்பாற்றி விடுகிறார். இந்த கதைக்கு உயிரோட்டமான் சித்திரமும் அற்புதமான கதைக் களமும் சிறப்பாக அமைந்துள்ளது. எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. 2. நரகத்தின் எல்லையில் லா-டூபாங்க் துறைமுகத்துக்கு வரும் கேப்டன் பிரின்ஸ் குழுவினர், அவர்களுடைய முன்னாள் எதிரி வாங்-லு வின் சூழ்ச்சிக்கு இரையாகி சோங்-பே என்னும் கொடிய சிறைச்சாலைக்கு அனுப்பபடுகிறார்கள். அங்கு இகோர் என்னும் கொடியவனிடம் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். பின்னர் அந்த கொடிய நரகத்திலிருந்து ஜீவ மரணப் போராட்டத்திற்கு பின்னர் தப்பித்து வருகிறார்கள். அவர்களுடைய மரணப் போராட்டங்களை மிக ஆற்புதமாக ஓவியரும், கதாசிரியரும் தெளிவான நீரோட்டமாக உருவாக்கியுள்ளார்கள். இந்த கதையும் எனக்கு பிடித்த கதைகளில்
நான் ரசித்துப் படித்த காமிக்ஸ் புத்தகங்கள். சைத்தான் துறைமுகம் நரகத்தின் எல்லையில் விவரங்கள் விரைவில் ...

தலைமையகத்திலிருந்து அறிவிப்பு

Image
வலையுலகில் இருக்கின்ற நிறைய தீவிரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக இந்த முதலைப்பட்டாளத்தை சேர்ந்த நாங்கள் இனி பாடுபடபோகிறோம். பின்னுட்டங்களில் நீங்கள் எது சொன்னாலும் அது உங்களுக்கு எதிராக திருப்பப்படும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறோம். தற்சமயம் தீவிரவாத குழுக்களை கணக்கெடுப்பதில் ஈடுபட்டிருப்பதால், கூடிய விரைவில் அடுத்த அறிவிப்பினை கொடுக்கின்றோம்.