Posts

Showing posts from March, 2011

இரும்புக் கை மாயாவி

Image
1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல். மாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானியங்கி முறையில் இயங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. சாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார். மாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் ப