Posts

Showing posts from November, 2014

சன்ஷைன் லைப்ரரி காமிக்ஸ் லிஸ்ட்

Image
1. டைகர் ஸ்பெஷல் -1 - கேப்டன் டைகர் - மறுபதிப்பு   ( ஏப்ரல் - 2013 ) 2. நிலவொலியில் நரபலி - டெக்ஸ் வில்லர் ( ஜூன் - 2013 ) 3. லக்கிலூக் ஸ்பெஷல் - 1 - லக்கிலூக் -  ( ஜூன் - 2013 ) 4. மேற்கே ஒரு சுட்டிப்புயல் - லக்கிலூக் ( ஆகஸ்ட்  - 2013 ) 5. கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் - பிரின்ஸ் - மறுபதிப்பு ( செப்டம்பர் - 2013) 6. ஆகாயத்தில் அட்டகாசம் - ப்ளூகோட்ஸ் ( அக்டோபர் - 2013) 7. லயன் தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லர் ( நவம்பர் - 2013) 8. வேங்கையின் சீற்றம் - கேப்டன் டைகர் ( டிசம்பர் - 2013) 9. காமெடி கெளபாய் ஸ்பெஷல் - சிக்பில்&லக்கிலூக் - மறுபதிப்பு ( டிசம்-13) 10. ஜானி ஸ்பெஷல் - 1 - ரிப்போட்டர் ஜானி - மறுபதிப்பு ( டிசம் - 2013) 11. பயங்கரப் புயல் - பிரின்ஸ் -  மறுபதிப்பு ( ஜனவரி - 2014 ) 12. முகமற்ற கண்கள் - ப்ரூனோ பிரேசில் - மறுபதிப்பு ( ஏப்ரல்-2014) 13. பூம் பூம் படலம் - லக்கிலூக் - மறுபதிப்பு ( ஜூன் - 2014) 14. கார்ஸனின் கடந்த காலம் - டெக்ஸ் வில்லர் - மறுபதிப்பு (அக்டோபர்-14) 15. சைத்தான் வீடு - ரிப்போட்டர் ஜானி - மறுபதிப்பு ( நவம்பர் - 2014) 16. பனி அசுரர் ப

2015 ஒரு கண்ணோட்டம்

Image
பின் குறிப்பு - அடுத்த வருடம் வரவிருக்கும் புத்தகங்கள் ஒகே ரகம் தான். டெக்ஸ் வில்லருக்கு அதிக இடம் ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிதான். டைகர் கதைகளை இனி வரும் காலங்களில் பிரித்து போடாமல் முடிந்தளவு ஒரே இதழாக வெளியிட முயற்சித்தால்?, மீண்டும் அனைத்து வாசகர்களையும் டைகர் கவர வாய்ப்புண்டு. இதே போன்று கமான்சே கதைகளும் இன்னும் ஏறக்குறைய பத்து கதைகளுக்கு மேல் உள்ளதால் அவருடைய கதைகளையும் இரண்டு, இரண்டாக போட்டு முடித்தால், எஞ்சியிருக்கும் கதைகளிலும், வாசகர்களிடமும் ஒருவித தொய்வு ஏற்படாமல் இருக்கக்கூடும்.  நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த டேஞ்சர் டயபாலிக்கை ஒரேடியாக ஓரங்கட்டியதுதான் வியப்பளிக்கிறது. இறுதியாக வந்த அவருடைய இரண்டு கதைகளும் நன்றாகவே இருந்தன. ஜில் ஜோர்டான், மற்றும் நிறைய கிராபிக் நாவலுக்கு வாய்ப்பளிக்கும் போது, ஜெஸ் லாங் நாயகருக்கும் இடையில் ஒரு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம்.   வித்தியாசமான துப்பறிவாளர் நான்கைந்து கதைகளில் வெளிவந்திருந்தாலும், அவருடைய கதைகள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தன. இவரைப்

ஒரு உற்சாகப் பதிவு!

Image
நேற்று இரவுதான் இங்குள்ள ( புதுச்சேரி ) ஒரு நண்பருடன்   பழைய கதைகளை ரீபிரிண்ட் பண்ணாததையும், பழைய புத்தகங்களை அதிக விலைக்கு சிலர்   விற்பதைப் பற்றியும் நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தோம். சில வருடங்களுக்கு முன்னர் அதிக விலையில் பழைய புத்தகங்கள் விற்பதைக் கேள்விப்பட்டு எடிட்டர் தடாலடியாக   நான்கு புத்தகங்கள்    60 ரூபாய் விலையில் வரும் என்று அறிவித்ததும். நிறைய வாசகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால், அதிக விலைக்கு பழைய புத்தகங்களை விற்கும் விற்பனையாளர்களுக்கு இச்செய்தி தலையில் இடி விழுந்த மாதிரி விழுந்தது. பின்னர் 70 காப்பி கூட முன் பதிவு ஆகாததால் மும்மூர்த்திகளையும் பழைய ஹீரோக்களையும் பரண் மேல் போடுவதாக எடிட்டர் அறிவித்ததும், மீண்டும் பழைய புத்தகங்களுக்கு முன்பை விட அதிக கிராக்கி ஏற்பட்டு இன்னும் கூடுதலான விலைக்கு விற்கப்பட்டன. எடிட்டரின் இந்த தடாலடி முடிவால் பழைய புத்தகங்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் மனதில் பாலை வார்த்து விட்டார். ஆனால்,  நிறைய பேர் கிராபிக் நாவலை வாங்க (படிக்கவும்) மறுத்தும் பிடிவாதமாக நான் போடுவேன்   என்ற