Posts

Showing posts from November, 2012

துப்பறியும் வீரர் ரிப் கிர்பி

Image
                                                                         ப்ளாஷ் கார்டன், ஜங்கிள் ஜிம், பிலிப் காரிகன் போன்ற பிரபல சித்திரக் கதை நாயகர்களை உருவாக்கிய அலெக்ஸ் ரேமாண்ட். ரிப் கிர்பி எண்ணும் சித்திரக் கதை பாத்திரத்தை 1946 -ம் ஆண்டு உருவாக்கினார்.   தனியார் துப்பறிவாளரான ரிப் கிர்பி, பல சவாலான வழக்குகளை, தனது அபார துப்பறியும் திறமையால் வெற்றி கண்டுள்ளார். நேரடிச் சண்டையிலும், துப்பாக்கி சுடுவதிலும் சிறந்து விளங்குபவர். கோல்ப் விளையாடுவது இவரது பிடித்தமான விளையாட்டாகும்.   இவரது உதவியாளர் டெஸ்மாண்ட், ரிப் கிர்பியின் வலதுகரமாக உடன் இருந்து வருபவர். சிறந்த சமையல் கலை நிபுணராகவும் பணி புரிபவர். ரிப் கிர்பியின் உற்ற தோழி ஹனி டோரியன் ஆவார்.          1974 – வருடம் முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு ரிப் கிர்பி அறிமுகமானார். அதன் பிறகு மாலை மதி, இந்திரஜால், லயன், ராணி, மினி லயன், போன்றவற்றிலும் ரிப் கிர்பியின் சித்திரக் கதைகள் வெளி வந்துள்ளன.   தமிழில் வெளிவந்துள்ள ரிப் கிர்பியின் சித்திரக் கதைகளின்  தலைப்புக்கள்!  முத்து காமிக்ஸ் –  1. பு