Posts

Showing posts from 2012

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -2013

Image

புதுவை, புத்தகக்கண்காட்சி-2012

Image
24.12.2012 திங்கள்கிழமை இன்று புதுவை எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள ஆனந்தா திருமண நிலையத்தில்  நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில், இந்த வருடத்தில் வெளிவந்துள்ள லயன் & முத்து காமிக்ஸின்  ஸ்பெஷல் இதழ்களான 1.முத்து சர்ப்ரைஸ் ஸ்பெஷல் 2.லயன் நியுலுக் ஸ்பெஷல் 3.லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் 4.ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷல் 5.சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் 6.தங்கக் கல்லறை போன்ற புத்தகங்கள் ஸ்டால் எண்-39,ல் (இலக்கியம் புத்தக நிலையம் ) விற்பனைக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.                   (பின் குறிப்பு )                                                                                                                                      இந்த மாதம்(டிசம்பர்) வெளிவந்துள்ள ரிப்போட்டர் ஜானியின் மரணத்தின் நிசப்தம் (முத்து காமிக்ஸ்) புத்தகம், இந்த வாரத்திற்குள் புத்தகக் கண்காட்சியிலும்,கடைகளிலும் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ...                                    . 

துப்பறியும் வீரர் ரிப் கிர்பி

Image
                                                                         ப்ளாஷ் கார்டன், ஜங்கிள் ஜிம், பிலிப் காரிகன் போன்ற பிரபல சித்திரக் கதை நாயகர்களை உருவாக்கிய அலெக்ஸ் ரேமாண்ட். ரிப் கிர்பி எண்ணும் சித்திரக் கதை பாத்திரத்தை 1946 -ம் ஆண்டு உருவாக்கினார்.   தனியார் துப்பறிவாளரான ரிப் கிர்பி, பல சவாலான வழக்குகளை, தனது அபார துப்பறியும் திறமையால் வெற்றி கண்டுள்ளார். நேரடிச் சண்டையிலும், துப்பாக்கி சுடுவதிலும் சிறந்து விளங்குபவர். கோல்ப் விளையாடுவது இவரது பிடித்தமான விளையாட்டாகும்.   இவரது உதவியாளர் டெஸ்மாண்ட், ரிப் கிர்பியின் வலதுகரமாக உடன் இருந்து வருபவர். சிறந்த சமையல் கலை நிபுணராகவும் பணி புரிபவர். ரிப் கிர்பியின் உற்ற தோழி ஹனி டோரியன் ஆவார்.          1974 – வருடம் முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு ரிப் கிர்பி அறிமுகமானார். அதன் பிறகு மாலை மதி, இந்திரஜால், லயன், ராணி, மினி லயன், போன்றவற்றிலும் ரிப் கிர்பியின் சித்திரக் கதைகள் வெளி வந்துள்ளன.   தமிழில் வெளிவந்துள்ள ரிப் கிர்பியின் சித்திரக் கதைகளின்  தலைப்புக்கள்!  முத்து காமிக்ஸ் –  1. பு

பாண்டிச்சேரியில் லயன் காமிக்ஸ்

Image
பாண்டிச்சேரி (அ) புதுச்சேரி காமிக்ஸ் வாசகர்களுக்கு ஒரு இனிய செய்தி. இம் மாதம் (அக்டோபர் 2012 ) முதல் லயன் காமிக்ஸ் குழுமம் வெளியிடும் அனைத்து காமிக்ஸ் இதழ்களும், சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) இதழ் முதல்.   இனி காலந்தவறாமல் புதிய  லயன் & முத்து  காமிக்ஸ்கள் இதழ்கள் அனைத்தும்  கீழே குறிப்பிட்டுள்ள கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  1. சிந்து சௌமியா டிரேடர்ஸ்  எண்- 43 . ஏர்போர்ட் ரோடு   (குளினி ஸ்கூல் அருகில்)  லாஸ்பேட்  புதுச்சேரி - 8   சிந்து சௌமியா ட்ரேடர்ஸ் 2.M.V. ஸ்டோர்  எண் - 117  மகாத்மா காந்தி ரோடு   புதுச்சேரி-1  M.V. Store 3. அப்துல் ஹாமிது  எண் - 144 மிஷன் வீதி ( நேரு வீதி சந்திப்பு)  புதுச்சேரி -1  Abdul Hameed Shop மேலும் படிக்க மட்டும்  விரும்பும் வாசக, வாசகிகள் லாஸ்பேட்டையில் நடராஜ் லெண்டிங்  லைப்ரரியில்  நமது லயன் & முத்து காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  Nadaraj Lending Library நட்ராஜ் லெண்டிங் லைப்ரரி 64, ப

விண்வெளிப் பிசாசு - A Super Hero Spider Adventure

Image
The crook from outerspace எண்ணும் அயல் நாட்டு சித்திரக்கதை தமிழில், 1986- வருடம் திகில் காமிக்ஸில்  தொடராக ( 18- பாகம்) வெளிவந்தது, அப்போதைய காலகட்டத்தில் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சித்திரக் கதையாகும், இச்சித்திரக் கதையை முழுப் புத்தகமாக வெளியிட்டால்? சிறப்பாக இருக்கும்- வேற்றுக் கிரகத்திலிருந்து பூமியை நோட்டமிட வந்திருந்த விண்வெளிப் பிசாசு ஒன்று, தற்செயலாக நீதிக் காவலன் ஸ்பைடர், விசித்திரன் என்கிற எத்தனோடு மோதிக் கொள்ளும் காட்சியைக் காண நேர்கிறது, அதில் ஆர்வம் கொண்ட விண்வெளிப் பிசாசு. இருவரையும் தனது விண்கலத்திற்கு கடத்திச் சென்று, இருவருடைய மனத்திரை மூலமாக. பூமியில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது.  நினைத்த நேரத்தில், நினைத்த உருவத்திற்கு மாறும். அற்புத ஆற்றல் படைத்த அந்தப் பிசாசு. மேலும் பூமியில் வாழ்ந்த முன்னால் கொடியவர்களான ஜெஸ்ஸி ஜேம்ஸ்- பில்லி- ஜெங்கிஸ்கான்- ஹெர்குலஸ்- அல்-லூபரியான் போன்றவர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொண்டு- அவர்களைப் போன்ற தோற்றத்தில் தன்னை உருமாற்றிக் கொண்டு பூமியில் அட்டகாசம் புரியத் தொடங்குகிறத

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

Image
1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி 2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி 3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி 4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி 5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட் 6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி 7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட் 8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ 10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி 11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட் 12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ 13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட் 15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ 16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி 17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட் 18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ 19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி 20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ 21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட் 22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை ம

நியுயார்க்கில் மாயாவி

Image
1970- களில் சித்திரக் கதைகளை வாசித்த அனைத்து சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் இரும்புக்கை மாயாவி நன்கு பரிச்சயமானவர். மாயாவியின் இரும்புக் கரம் மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் முழுவதும் மறைந்து, இரும்புக்கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இந்த அபூர்வ சக்தியைக் கொண்டு, பல விசித்திர ஜந்துக்களையும், பல விசித்திர வில்லன்களையும் அழித்து, நாட்டை பல முறை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். ஆனால்? ஆரம்பக் காலத்தில் இரும்புக் கை மாயாவியே நாட்டிற்கே பெரும் அச்சுருத்தலாக விளங்கியுள்ளார். அதன் கதை தான் இந்த நியுயார்க்கில் மாயாவி ... புரபஸர் பாரின்ஜரின் ஆய்வுக் கூட, விபத்தொன்றில் சிக்கிக் கொள்ளும், அவரது உதவியாளர் கிராண்டேலுக்கு(மாயாவி) எதிர்பாராத விதமாக அரூரபமாகும் சக்தி கிடைக்கப் பெறுகிறது. அதன் சக்தியைக் கொண்டு, உலகை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, முதலில் ஒரு வங்கியை கொள்ளையடித்தும், பின்னர் தொடர் விபத்துக்களை, நிகழச் செய்தும், அதன் மூலமாக பொது மக்களையும், அரசாங்கத்தையும் அதிர்ச்சியடையச் செய்கிறார் மாயாவி. இறுதியாக தனது அற்புத ஆற்றலை உலகிற்கு நிரூபிப்பதற்காக, ந

சாகச வீரர் சார்லி சாயர்

Image
  1943- ம் வருடம் ராய் கிரேன் என்பவர். சார்லி சாயர் என்கிற சித்திரக்கதை பாத்திரத்தை உருவாக்கினார். சார்லி சாயரின் இயற்பெயர்- ஜான் பஸ் சாயர் என்பதாகும். இவருக்கு கிறிஸ்டி ஜேம்சன் என்கிற மனைவியும், பெப்பர் சாயர் என்கிற மகனும், ராஸ்கோ ஸ்வீனே என்கிற நண்பரும் உள்ளனர். யதார்த்தமான சித்திரக் கதைகள் மூலமாக பல வாசகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். மிகச் சிறந்த சாகச வீரரான சார்லி சாயர். இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், கடற்படை விமானியாக, பசிபிக் பெருங்கடலில் நடந்த யுத்தத்தில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு எண்ணைய் நிறுவனத்தில் பழுது பார்க்கும் நிபுணராக பணியாற்றினார். 1950 –ல் மீண்டும் கப்பற்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, 1960-ம் ஆண்டில் நடந்த வியட்நாம் போரில் கலந்து கொண்டவர். போருக்குப் பின்னர் தனியார் துப்பறிவாளராக மாறி, பல வழக்குகளை, தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1974- ம் வருடம் முதல், முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு சார்லி சாயர் அறிமுகமானார். அதன் பின்னர் இந்திரஜால் காமிக்ஸ்,ராணி காமிக்ஸ், மேகலா காம