ஜான் சில்வர் - விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய இரகசிய உளவாளி .
பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஓர் அங்கமான Q பிரிவில் பணி புரியும் ஒரு ரகசிய உளவாளி ஜான் சில்வர். அவரது இயற்பெயர் ஜான் ஹவாக். ஜான் சில்வர் ஒரு தலைசிறந்த உளவாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தாலும், அவரது ஒரே இலட்சியம், தான் ஒரு தலைசிறந்த விமானியாக, புகழ்பெற வேண்டும் என்பதே ஆகும். ஜான் சில்வர் முதன்முறையாக டெல்டா-10 என்ற விமானத்தை இயக்கியபோது, விமானத்தில் பயணம் செய்த ஹர்ஸ், காலின்ஸ் ஆகிய இரண்டு உளவாளிகளின் கவனக்குறைவினால், விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகியது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஜான் சில்வர், நடந்த விபத்தின் உண்மையை உணர்த்த தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய லைசன்ஸையும், வேலையையும் இழந்தார். அதன்பிறகு ஒரு துப்பறிவாளராக மாறி, நடந்தவற்றைக் கண்டுபிடித்தார். ஜான் சில்வரிடம் இருந்த அசாத்திய திறமைகளை அறிந்த 'Q' என்ற உளவு அமைப்பினர், ஜான் சில்வரின் பைலட் லைசன்சை திரும்பப் பெற்றுத்தருவதாகக் கூறி, தங்களது கடினமான பணிகளை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டனர். ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்பட்...