Posts

எரிமலை தீவில் பிரின்ஸ்

Image
சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனான லம்பார்டியும் கொலைக்கு சிறிதும் அஞ்சாத அவனது இரு கூட்டாளிகளான ஸ்டீபன் மற்றும் ஹம்மிங்ஸ் ஆகிய மூவரும் பிரின்ஸிக்கு சொந்தமான கழுகு கப்பலை கடத்தி செல்கின்றனர். அருகிலிருக்கும் தீவுகளில் ஒன்றான கோர்க்காவில் எரிமலை வெடித்து தீவே அழியப் போவதாக அரசாங்கம் விடுத்த எச்சரிக்கைய கேட்டு தீவு மக்கள் அனைவரும் கப்பல்களில் ஏறித் தப்ப முயல்கிறார்கள். இந்த நிலையில் அத்தீவிற்கு வந்தடையும் கடத்தல் பேர்வழிகள் தீவு மக்களை பிணைக் கைதிளாக்கி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்து தீவிலிருந்து தப்பிக்க திட்டமிடுகிறார்கள். அரசாங்கமும் இவர்களுடைய கோரிக்கைகளுக்கு பணிந்து அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருகிறது, இதனிடையே சுயநலம் காரணமாக கடத்தல் பேர்வழிகளுக்குள் கலகம் ஏற்பட இதில் தலைவன் பலியாகிவிடுகிறான் எஞ்சியிருக்கும் இவருக்குள் மோதல் ஏற்படுகிறது. பல இன்னல்களை கடந்து அங்கு வந்து சேரும் பிரின்ஸ்சும் மோதலில் கலந்து கொள்ள நேரிடுகிறது இந்த நேரத்தில் எரிமலையும் பயங்கரமாக வெடித்து கொதிக்கும் குழம்பாக தீவையே முற்றுகையிட பாய்ந்தோடி வருகிறது. எதிரிகளிடமும் தீக்கு...

பயங்கர புயல் - இயற்கையின் சீற்றத்தை துல்லியமாக காட்டியிருக்கும் ஒரு மகத்தான சித்திரக் கதை

Image
டாகோ-டாகோ என்னும் அழகிய தீவில் இந்த கதை தொடங்குகிறது. அங்கு ஓய்வெடுக்க வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் பார்னேயின் பழைய அடிதடி நண்பர் லோபோவை சந்திக்க நேர்கிறது. லோபோ ஒரு தீவை சூதாட்டத்தில் ஜெயித்த விவரத்தை சொல்லி அந்த தீவிற்கு அழைத்து செல்கிறார். அந்த தீவினை உரிமை கொண்டாடும் அண்ணன்-தங்கை டெட்டி மற்றும் கிறிஸ்டி இருவரும் அங்கு வசிக்கும் கானக வாசிகளை துணையாக வைத்துக் கொண்டு தீவில் வசிக்கிறார்கள். பிரின்ஸ் குழு மற்றும் லோபோவினை அந்நியர்களாக நினைத்து அவர்களை விரட்டியடிக்க நினைக்கும்போது, டெட்டி தவறி கடலில் விழுந்து விடுகிறான். அந்த தீவின் கரையோரத்தில் வசிக்கும் ஒரு ராட்சஸ ஜந்து ஒன்று அவனை துரத்துகிறது. அதிலிருந்து பிரின்ஸ் அவரை காப்பாற்றுகிறார். தன் உயிரை காத்த நன்றிக் கடனாக சமாதானமாகும் டெட்டி அவர்களுடன் சேர்ந்து தொல்லை கொடுத்து வரும் அந்த ராட்சஸ ஜந்துவை கொல்ல ஆயத்தமாகிறார்கள். அந்த ஜந்துக்கு நிறைய கடல் மீன்களை உணவாக போட்டு அது அரை மயக்க நிலையில் இருக்கும்போது வேட்டையடலாம் என்ற திட்டத்துடன் இருக்கும்போது, அந்த தீவில் வசிக்கும் காட்டுவாசிகளின் தலைவன் இவர்களின் குறுக்கீட்டினை...

திகில் காமிக்ஸ் லிஸ்ட்

Image
1. சைத்தான் கிரகம் - ஜெட் வீரர் லோகன் 2. பிசாசுச் செடிகள் - புரபசர் லோகன்  3. பயங்கரப் பூனைகள் - உட்வர்ட்  4. பிசாசுக் குரங்கு - மார்ஷல்  5. பனிமலை பூதம் - ரிக்கன் & மேஜர்  6. இரத்தப் படலம் - ஜேசன்  7. மர்மக் கத்தி - ரோஜர் & பில்  8. இரத்தக் காட்டேரி மர்மம் - ரிப்போட்டர் ஜானி  9. சைத்தான் வீடு- ரிப்போட்டர் ஜானி  10. மர்ம ஏரி - மார்ஷல்  11. பணிமண்டலக் கோட்டை - பிரின்ஸ் 12. மர்மச் சவப்பெட்டிகள் - ப்ருனோ பிரேசில்  13. மரண விளையாட்டு - ஜான் ராம்போ  14. சிவப்புப் பாதை - ரிப்போட்டர் ஜானி  15. சாவதற்கு நேரமில்லை - சைமன்  16. பயங்கரப் புயல் - பிரின்ஸ்  17. கோடை மலர் - ஸ்பெஷல்  18. கடற் கோட்டை மர்மம் - வில்சன்  19. ஓநாய் மனிதன் - ரிப்போட்டர் ஜானி  20. முகமற்ற கண்கள் - ப்ருனோ பிரேசில்  21. சிரித்துக் கொல்ல வேண்டும் - பேட்மேன்  22. சைத்தான் துறைமுகம் - பிரின்ஸ்  23. கறுப்புக் கிழவி ஸ்பெஷல் - கறுப்புக் கிழவி  24. பிசாசுக் குகை - ரிப...

மினி லயன் காமிக்ஸ் லிஸ்ட்

Image
இதுவரை வெளிவந்த மினி லயனில் வெளிவந்த புத்தகங்களின் பட்டியல் கீழே வெளியிடப்பட்டுள்ளது. 1. துப்பாக்கி முனையில்-ஜோன்ஸ் 2. மரண சர்க்கஸ்-மேசன் 3. கருப்பு பாதிரி மர்மம்-புயல் வேக இரட்டையர்கள்   4. கானக மோசடி-சூப்பர் பைலட் டைகர் 5. சொர்க்கத்தின் சாவி-அலிபாபா 6. ஆர்டிக் நரகம்-சூப்பர் பைலட் டைகர்   7. கோப்ரா தீவில் ஸ்பைடர்-ஸ்பைடர் 8. ஸ்பைடர் படை-ஸ்பைடர் 9. விற்பனைக்கு ஒரு ஷெரீப்-சிக் பில்  10. ஒரு கள்ளப்பருந்தின் கதை-சார்லி 11. விசித்திர ஜோடி-ஜெர்ரி&ஷர்மா 12. வெள்ளைப் பிசாசு-அலிபாபா 13. ஒரு நாணயப் போராட்டம்-அங்கிள் ஸ்குருஜ் 14. சம்மர் ஸ்பெஷல்-ஸ்பெஷல் 15. பயங்கரப் பயணம்-சுஸ்கி&விஸ்கி  16. மாயத்தீவில் அலிபாபா-அலிபாபா 17. நீலப்பேய் மர்மம்-சிக் பில் 18. புரட்சித் தீ-லக்கி லுக் 19. ராஜா ராணி ஜாக்கி-சுஸ்கி&விஸ்கி  20. விண்வெளியில் ஒரு எலி-சிக் பில்  21. பிசாசுப் பண்ணை-லக்கி லுக்  22. ஹாலிடே ஸ்பெஷல்-ஸ்பெஷல் 23. நடுக்கடலில் எலிகள்-அங்கிள் ஸ்குருஜ்  24. இரத்த வெறி -லக்கி-லுக்  25. பயங்கரப் பொடியன்-லக்கி ல...

பற்றி எரியும் பாலைவனம்

Image
தென் ஆப்பிரிக்காவின் கடலோர கிராமங்கள் அங்கு நடக்கும் உள்நாட்டு புரட்சிகளால் மிகவும் பாதிப்புகுள்ளாயின. வெளி தொடர்புகள் அறுந்து போன நிலையில் அங்கு பசி, பட்டினி, போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் பல உயிர்கள் மடிந்து கொண்டிருந்த சூழல். சுட்டெரிக்கும் பாலைவனம், இரக்கமுள்ளவர்கள் கொண்டு வரும் உதவிப் பொருட்களை பறிப்பதற்கென்றே இரக்கமில்லாத கடற்கொள்ளையர்கள் மொத்தத்தில் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை. இந்த சூழலில் சர்வதேச சமூகத் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பெர்குஸன் என்பவர் பாதிக்கப்பட்டுள்ள ஜனங்களுக்கு உணவுகளையும் மருந்துகளையும் கொணடு செல்வதற்காக பிரின்ஸ் குழுவை சம்மதிக்க வைத்து அவரும் உடன் செல்கிறார். கடல் மார்க்கமாகவும் பிறகு பாலைவன பயணம் மேற்கொள்ளும் போது அங்குள்ள கடற்கொள்ளையர் தாக்குதலில் பெர்குஸன் காயமடைகிறார். குழுவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு யாராவது ஒருவர் பாதிக்கப்ட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் தன் உயிரையே பணயம் வைக்க முற்பட்டு பொருட்களை ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார் பார்னே. ஒரளவு குணமடைந்து கண்விழிக்கும் பெர்குஸன் பார்...

லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு கடிதம்

மதிப்பிற்குரிய லயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு, சில காலம் முன்பு திகில் காமிக்ஸில் தொடராக வெளிவந்த ஸ்பைடரின் விண்வெளி பிசாசு மற்றும் கேப்டன் ஜானின் விண்ணில் முளைத்த மண்டை ஓடு ஆகிய சித்திர தொடர்கள் விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸ் நிறைந்தவையாகவும் இருந்த தொடர்கள். படித்த அனைத்து காமிக்ஸ் இரசிகர்கள் மனதையும் கவர்ந்த தொடர்களும் கூட. இந்த இரு தொடர்களையும் தாங்கள் மீண்டும் மறுபதிப்பாக ஒரே இதழாக காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் வெளியிட்டு அந்த இரு சித்திர தொடர்களையும் சிறப்பு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் வாசகன்... ப்ரூனோ ப்ரேசில்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Image