Posts

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

Image
01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ] 2.பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர் ![கௌபாய் ] 3.மந்திரியைக் கடத்திய மாணவி  [ஜேம்ஸ் பாண்ட் ] 4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்] 5.காதலியை விற்ற உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ] 6.நாலாவது பலி [கௌபாய் ] 7.சுறா வேட்டை  [ஜேம்ஸ் பாண்ட் ] 8.மர்ம முகமூடி [கௌபாய் ] 9.மந்திரத் தீவு  [ஜேம்ஸ் பாண்ட் ] 10.சாட்டையடி வீரன் [கௌபாய் ] 11.மிஸ்டர் ABC  [ஜேம்ஸ் பாண்ட் ] 12.மின்னல் வீரன் [கௌபாய் ] 13.அழகிய ஆபத்து  [ஜேம்ஸ் பாண்ட் ] 14.விசித்திர விமானம் [ ஜுலி ] 15.மர்ம ராக்கெட்  [ஜேம்ஸ் பாண்ட் ] 16.மரணப் பரிசு [கார்ஸன் ] 17.கடல் கொள்ளை  [ஜேம்ஸ் பாண்ட் ] 18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ] 19.டாக்டர் நோ  [ஜேம்ஸ் பாண்ட் ] 20.ராட்சத பல்லி [நிக்,டான்]  21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ] 22.இரும்பு மனிதன்  [இந்திரஜித் ] 23.இரத்தக் காட்டேரி  [ஜேம்ஸ் பாண்ட் ] 24.புரட்சி வீரன் [கௌபாய் ] 25.எரி நட்சத்திரம்   [ஜேம்ஸ் பாண்ட் ] 26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை] 27.கவச உடை  [ஜேம்ஸ் பாண்ட் ] 28.பழிக்குப் பழி [கௌபாய் ...

இரகசிய உளவாளி பிலிப் காரிகன்

Image
1934-ம் வருடம் டேனியல் ஹம்மட் என்பவர் பிலிப் காரிகன் என்கிற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். பல தலை சிறந்த உளவாளிகளில் இவரும் ஒருவர். இரு நபர்களுக்கான நேருக்கு நேர் சண்டையிலும், துப்பாக்கி சண்டையிலும் சிறந்து விளங்குபவர். இவரது மனைவியின் பெயர் வில்டா காரிகன். ஆரம்ப காலங்களில் இரகசிய உளவாளி X-9 என்கிற பெயரில் பெயரிடப்படாத ஒரு உளவு நிறுவனத்திற்காக வேலை பார்த்துள்ளார். 1940-க்கு பிறகு இரகசிய உளவாளி X-9 என்ற பெயரை மாற்றி பிலிப் காரிகனாக அழைக்கப்பட்டுள்ளார்.அதன் பிறகு F.B.I. உளவாளியாக மாறி பல சிக்கலான விசித்திரமான பலவழக்குகளை தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1975-ம் வருடம் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு பிலிப் காரிகன் அறிமுகமானார். முத்து காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மேகலா காமிக்ஸ் ராணி காமிக்ஸ் மற்றும் தினத்தந்தி நாளேடுகளில் (தொடர்) மூலமாகவும் பிலிப் காரிகனின் சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழில்வந்துள்ள காரிகனின் கதைகளின் தலைப்புகள் மேகலா காமிக்ஸ் 1) எங்கே அந்த வைரம் 2) கழுகு பார்வை 3) ஆயுதப் புதையல் 4) மனித குண்டு 5) மாய விமானம்...

காணாமல் போன கழுகு - பிரின்ஸ் சாகசம்

Image
சர்வதேச கடத்தல் மன்னன் ட்யூக் செபாஸ்டியானை கொல்லத் திட்டம் போடுகிறது ஒரு கொலைகார கும்பல். இதற்கிடையே அடுத்த பணிக்கான வேலைகளில் தயாராகிக் கொண்டிருக்கும் பிரின்ஸ் குழுவினரையும் கழுகு கப்பலையும் தங்களுடைய கொலைத் திட்டத்திற்காக தந்திரமாக சிறை பிடிக்கின்றனர் கொலைகார கும்பல். கமன்சினி என்கிற பயங்கரவாதியின் தலைமையில் கொலைகாரகும்பல் இயங்குவதையும் செபாஸ்டியன் என்ற முக்கிய நபரை நூதன முறையில் கொல்ல இருப்பதையும் தெரிந்துக் கொள்ளும் பிரின்ஸ் தனது நண்பர்களையும் செபாஸ்தியனையும் காப்பாற்றுவதற்காக எதிரிகளிடமிருந்து தப்பித்து செபாஸ்தியனை தேடிச் செல்கிறார். வழியெங்கும் கம்சினி கும்பலால் ஏற்படும் ஆபத்துகளை வெற்றிகரமாக சமாளித்து பலத்த பாதுகாப்புடனும் அடியாட்களுடனும் வாழும் செபாஸ்டியனை நேரில் சந்திக்கிறார். தனது நிலைமையையும் கமன்சினி கும்பலால் அவருக்கு ஏற்பட போகும் ஆபத்துகளையும் எடுத்துக் கூறி செபாஸ்டியானை காப்பாற்ற முயற்சிக்கிறார். கமன்சினியின் கொலைத் திட்டத்தை தெரிந்துக் கொள்ளும் செபாஸ்டியன் கமன்சினி கும்பலையும் தனது இரகசியங்களை தெரிந்துக் கொண்ட பிரின்ஸ் குழுவினரையும் அழிக்க திட்டம் போடுகிறா...

இரும்புக் கை மாயாவி

Image
1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல். மாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானியங்கி முறையில் இயங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. சாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார். மாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் ப...

தவளை மனிதனின் முத்திரை

Image
மர்ம திரைப்பட இயக்குநர் ஹிட்காக் பாணியில்அமைந்திருக்கும் மர்மக் கதை இது. சாகச வீரர்கள் ரோஜர், பில் ஆகிய இருவரும் ஆள் அரவமற்ற காட்டுப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு மர்ம பெண் அவர்களுடைய வழியில் குறுக்கிடுகிறாள். தன்னிலை மறந்து செல்லும் அவளை, இருவரும் பின்தொடர்ந்து செல்கின்றனர். சதுப்பு நில குட்டையில் நடுவில் தவளை மனித உருவம் கொண்ட நபரை நோக்கி அப்பெண் செல்வதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். அந்த மர்ம பெண்ணை தவளை மனிதனிடமிருந்து மீட்டு, அருகிலிருக்கும் கிராமத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அந்த மர்ம பெண்? புதிதாய் அங்கு குடி வந்த வக்கீலின் மகள் ஜென்வியா என்றும், அவளது தந்தையோ நீண்ட ஆயுளோடு வாழும் மருந்தை கண்டுபிடிக்க முயல்கிறார் என்பதையும் தெரிந்து கொள்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த தவளை முகத்தோற்றம் கொண்ட மச்சலேவ் என்ற கொடியவன் அந்த ஊரையே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று குவித்தான். கொலை, கொள்ளை என அராஜகம் புரிந்து கொண்டிருந்தவனை, சில ஞானிகள் திருத்தி அவனை நல்வழிக்கு கொண்டு வந்தனர். அதன் விளை...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Image

வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவி

Image
வேதாளர் 1936-ம் ஆண்டில் உலகப்போருக்கிடையில், மோசமான பொருளாதார சூழ்நிலையில், லீ ஃபாக்-என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கதாநாயகன். ஆப்பிரிக்க கானகத்தில் உள்ள பெங்காலியா எனும் இடத்தில் வசிக்கும் பழங்குடி மக்களையும் வன விலங்குகளையும் பலதலைமுறைகளாக காத்து வரும் பாதுகாவலர். 1600-களில் கடற்கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து பெங்காலியா காட்டில் ஒதுங்கிய கிறிஸ்டோபர் வாக்கர், பின்னர் கடற்கொள்ளையருக்கு எதிராக முதல் வேதாளராக மாறியவர். அவர் சந்ததியினரும் அவரை போலவே தீமைகளை எதிர்த்து போராட உறுதிமொழி எடுத்தவர்கள். தற்போதைய வேதாளர் செந்தாடி என்பவனை தலைமையையாய் கொண்டு இயங்கி வரும் கடற்கொள்ளையரை அடக்கி அவர்களை கொண்டே கடலோர காவற் படையை அமைத்தவர். அடர்ந்த கானகத்தில் மண்டை ஓடு குகையில் வசித்து வரும் தற்போதைய வேதாளர் 21-ம் தலைமுறையை சார்ந்தவர். அவரது பெயர் கிட் வாக்கர், மனைவி டயானா பால்மர் ஐ நா சபையில் பணிபுரிபவர். வேதாளருடைய வலது கையிலிருக்கும் கபால முத்திரை மோதிரம் எதிரிகளின் தாடைகளுக்கு நீங்காத நினைவுச் சின்னத்தை பதிக்கும். இவருடைய குதிரை ஹீரோ ஓநாய் டெவில் இரண்டும் அவருடைய நிழல்க...