Posts

முதல் வேதாளனின் கதை

Image
                                         1974-ம் வருடம் தொடங்கப்பட்ட முத்து மினி காமிக்ஸில், எட்டாவது வெளியிடாக (இறுதி புத்தகமாகவும்)  1977-ல் வெளிவந்த புத்தகம் ,   இந்த முதல் வேதாளனின் கதை. முகமூடி வேதாளன் என்றதுமே அவரது மனைவி டயானா, இரட்டைக் குழந்தைகள்,ரெக்ஸ்,குரன், ஹீரோ, டெவில், பந்தர் இனக் குள்ளர்கள், ஈடன் தீவு, கபாலக் குகை, முத்திரை மோதிரம், தங்க மணல் கடற்கரை, இரட்டைத் துப்பாக்கி, என நீண்டுச் செல்லும் கற்பனைப் பாத்திரங்கள் தான் நம்  நினைவுகளுக்கு வரக் கூடும், ஆனால்? இந்தக் கதையில் தான் முதல் வேதாளர் உருவான விதத்தை அழகாக விவரித்துள்ளனர், 400 வருடங்களுக்கு முன்னர், சிங் கடற்கொள்ளையர்களால் தாக்கப்  பட்டு, உயிர் பிழைக்க பங்கல்லா கடற்கரையில் கரை ஒதுங்கும் மனிதனை மீட்டு. அவரின் உயிரை காப்பாற்றுகின்றனர் பந்தர் இனக் குள்ளர்கள். ஆனால்? அவர்களோ வசாகா என்னும் கொடிய இனத்தவரிடம் அடிமைகளாக காலம்,காலமாக வாழ்ந்து வருகின்றனர்.  ...

பார்வதி சித்திரக் கதைகள் லிஸ்ட்

Image
உள்ளூர் படைப்பாளிகளைக் கொண்டு உருவாக்கிய பல சித்திரக் கதைகள் தினமணிகதிர்,கோகுலம், கற்கண்டு,குமுதம்,ஆனந்த விகடன்,சாவி,கல்கி,குங்குமம்,பூந்தளிர், போன்ற நாளிதழ்களில் தொடர் சித்திரக்கதைகளாக வெளி வந்துள்ளது,அதில் சில கதைகளை தேர்ந்தெடுத்து முழுநீளப் புத்தகமாக வெளியிட்டனர். பார்வதி சித்திரக்கதை நிறுவத்தினர். சிறுவர்களைக் கவரும் விதமாகவே. பல புத்தகங்களை வெளியிட்டு வந்த அவர்கள். 1995-ம் வருடத்துடன் தங்களது காமிக்ஸ் பயணத்தை நிறுத்திக் கொண்டனர். 1992 முதல் 1995-ம் வருடம் வரை அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விவரங்கள்- 1. பவழத் தீவு 2. ஓநாய்க் கோட்டை 3. மூன்று மந்திரவாதிகள் 4. சிலையைத் தேடி 5. நந்து சுந்து மந்து 6. அறிவின் விலை ஒரு கோடி 7. பலே பாலு 8. சிறுத்தைச் சிறுவன் 9. வீர விஜயன் 10. பூதத் தீவு 11. பலேபாலு-பாட்டில் பூதம் 12. கபீஷ் கதம்பம்-1 13. டயல்-100 14. ஷீலாவைக் காணோம் 15. கனவா? நிஜமா? 16. அவள் எங்கே? 17. காளியின் கலாட்டா 18. கழுகு மனிதன் ஜடாயு 19. குஷிவாலி ஹரீஷ் 20. வீராதி வீரன் 21. திகில் தோட்டம் 22. சர்க்கஸ் சங்கர்...

பதிவாய் சில நினைவுகள்

Image
புத்தக( nbs )திருவிழாவில் கலந்துகொள்வதற்காக. கார்த்திகேயன்,(காமிக்ஸ் கலாட்டா நாயகர்) பிரபாவதி(சித்திரக் கதை ஆய்வாளர்), நான்(கலீல்) ராஜகணேஷ்(வில்லர் ஃபேன்),செந்தில் குமார்(காமிக்ஸ் ரசிகன்) ஆகிய அனைவரும் ஒரு குழுவாக புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, மாலை 4 மணியளவில் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து சேர்ந்தோம்.     ஒரு வழியாக ஸ்டால் எண்-343 கண்டுபிடித்து வந்து சேர்ந்தால்? அங்கே எங்களுக்கு முன்னால் ஒரு பெரும் படையே, வரப்போகும் எடிட்டர் திரு,விஜயன் அவர்களையும், அவரது தந்தையரையும் சந்திப்பதற்காக நின்று கொண்டிருப்பதை கண்டோம். சிறிது நேரத்திற்குப் பின்னர் எடிட்டர் அவர்களும், அவரது தந்தையரும் வந்த உடன். சுற்றி நின்றிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் ஒளி வீசத் தொடங்கி.. அடங்கியதும், எடிட்டரின் தந்தை நெவர் பிஃபோர் ஸ்பெஷல்    புத்தகத்தை வெளியிட அவரது பேரன் திரு,விக்ரம் அவர்கள் பெற்றுக்கொள்ள, அந்த   மகிழ்ச்சியான தருணத்தை சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த கேமரா மூலமாகவும்,  செல்போன் மூ லமாகவும் படம் பிடிக்கத் தொடங...