Posts

வேதாள மாயாத்மா

Image
                                       சித்திரக்கதைகளில் வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவியை அறியாதவர்கள் இருப்பது கடினமே! 1936 - ம் ஆண்டில் லீ ஃ பாக் என்பவரால் வேதாளர் உருவாக்கப்பட்டவர். உலகம் முழுவதும் உள்ள    பல சித்திரக்கதை நாயகர்களுக்கு மத்தியில் இன்றும் அளவிட முடியாத வாசகர்களை பெற்றுள்ளார். 25 க்கும் மேற்பட்ட மொழிகளில் இவரின் சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளன. தமிழில் இந்திரஜால் காமிக்ஸ், வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் குமுதம், மாலைமலர், இன்னும் சில நாளேடுகளில் தொடராகவும் வெளிவந்துள்ளார்.  1975 – ம் ஆண்டில் வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸில்   வெளிவந்த வேதாளரின் கதைகளில் ஒன்றான கப்பல் கில்லாடிகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். படித்து விட்டு உங்கள் எண்ணங்களை மறவாமல் தெரியப்படுத்துங்கள். நன்றி!        ...

கானக வீரன் டார்ஜான் - 2

Image
மேலை நாடுகளில் புகழ் பெற்ற சித்திரக்கதைகளில் டார்ஜான் கதைகளும் ஒன்றாகும். தமிழில் ரத்னா காமிக்ஸ், வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ், ரத்ன பாலா, என ஒரு சில இதழ்களில் டார்ஜான் கதைகள் வெளிவந்திருந்தாலும் ஏனோ டார்ஜான் கதைகள் தமிழில்   அவ்வளவாக பிரபலமாகவில்லை. தமிழில் வெளிவந்துள்ள டார்ஜான் கதைகளில் ஒன்றை ஏற்கனவே இங்கே தொகுத்துள்ளேன்.  இரண்டாவதாக வைரக் கடத்தல்காரர்களை இன்று தொகுத்துள்ளேன், படித்து விட்டு உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள், மற்றும் கண்மணி காமிக்ஸில் வெளிவந்திருந்த எம்ஜியார் சித்திரக்கதைகள் விரைவில்  புத்தகங்களாக ( மறுபதிப்பாக ) வெளிவரப்போவதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். புத்தக வடிவில் வருவது எனக்கும் மகிழ்ச்சியே.   அதனால் தான் எம்ஜியார் (கண்மணி) காமிக்ஸின் மூன்றாவது இதழை இங்கே தொகுக்கப்படவில்லை. நன்றி…           பின் குறிப்பு - இம்மாதம் (ஆகஸ்ட்) வெளிவந்துள்ள லய...