வன்மேற்கின் நாயகன் - ப்ளுபெர்ரி
வன்மேற்கில் சித்திரக்கதை நாயகர்கள் ஏராளமானோர்கள் இருந்தாலும், அதில் தனித்து தெரிபவர் ப்ளுபெர்ரி. 1963 – ம் வருடம் ஜீன் மைக்கேல் சார்லியர் ப்ளுபெர்ரி என்ற சித்திரக்கதை பாத்திரத்தை உருவாக்கினார். இயற்பெயர் – மைக்கேல் ஸ்டீவன் டோனோவன், எதிர்பாராத ஒரு கொலைப்பழியிலிருந்து தப்பிப்பதற்காக ப்ளுபெர்ரி என்ற புனைப்பெயரை வைத்துக் கொண்டார். பின்னர், அந்தப் பெயரே அவரைக் கவர்ந்திட ப்ளுபெர்ரி என்ற பெயரே நிஜப்பெயராக பின்னாளில் நிலைத்து விட்டது. பரட்டை என்ற இன்னொரு (செல்ல) பெயரும் இவருக்கு உண்டு. செல்வச் சீமானான ப்ளுபெர்ரி ஆரம்பத்தில் இனவெறியராக இருந்தவர். பின்னர், இராணுவத்தில் குழலுதுபவராக சேர்ந்து பல வீர சாகஸங்கள் புரிந்து, பின்னாளில் லெப்டினென்ட்டாகவும், மார்ஷலாகவும் பதவி வகித்தவர். இந்த காலகட்டத்தில் இனவெறிக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கினார். துப்பாக்கி சுடுவதிலும், குதிரை சவாரி செய்வதிலும், ஒற்றைக்கு ஒற்றை சண்டையிடுவதிலும் கைதேர்ந்தவர். தொழில்முறை சூதாடியும் கூட், இதனால் ஏற்படும் கைகலப்பினால், பலமுறை சிறைவாசம் கண்டவர். இவரது சகாக்களான ஜிம்மி &...