முகமற்ற கண்கள்


வில்லியம் வான்ஸின் சித்திரங்களில் க்ரெக் (லுயி அல்பர் என்ற புனைப்பெயரில்)அவரின் கதையுடன் 1970-களில் வெளிவந்த ஒரு சித்திரத் தொடர் முதலைப்படை.

தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஒரு இரகசிய பிரிவின் அதிரடி படை: முதலைப் படை. இந்த படையின் தலைவர் கலோனல் எல் (காமெடி கர்னல் இல்லீங்க!). கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில்.

படையின் உறுப்பினர்கள் பற்றி சிறிய அறிமுகம்.

ப்ரூனோ ப்ரேசில் கமாண்டர். மின்னல் வேக செயல்திறன் கொண்டவர் (என்னை போலவே)

கௌச்சோ மோரல்ஸ் முன்னாள் ரௌடி. சிறைச்சாலையின் வெளிப்புறம் மட்டுமின்றி உள்புறமும் நல்ல பழக்கம் அண்ணாச்சிக்கு.

விப் ரபேல் (அல்லது) ஜுடி சாட்டையடி வீராங்கனை. சர்க்கஸில் காட்டு மிருகங்களை சாட்டையை வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தவர் இப்போது நாட்டு மிருகங்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவர்.

டெக்ஸாஸ் அண்ணாச்சி ஒரு கௌபாய். டமால் டூமில் பேர்வழி.

பில்லி ப்ரேசில் இவரும் அதிரடி படை காரர். கமாண்டர் ப்ரூனோவின் தம்பி.

நாடோடி ஆள் பார்க்க ஜிப்சி அடிச்சா எதிரிகள் கப்சிப்.

இந்த சித்திர தொடர்கள் வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கதையே முகமற்ற கண்கள். திகில் காமிக்ஸில் பாக்கெட் சைஸில் வெளிவந்த புத்தகம். கதைக்கு வருவோம்.


முதலைப்படையின் பரம எதிரிகளில் ஒருவரான மேடம் சொர்ணா அக்கா (ச்சும்மா தமாசுக்கு) முதலைப் படை உறுப்பினர்களில் ஒருவரான விப் ரபேலை கடத்தி ஹிப்னாட்டிஸம் மூலம் அவளை ப்ரூனோ ப்ரேசிலை கொல்ல திட்டம் போடுகிறாள். ( பின்குறிப்பு ஹிப்னாடிசம் என்பது தேர்தல் வாக்குறுதி போல. திரும்ப திரும்ப சொல்லும்போது மனதில் அப்படியே படிந்து விடும். அப்படியே நம்பி விடுவோம்) ஏறக்குறைய அந்த திட்டம் நிறைவேறும்போது, கமாண்டர் ப்ரேசில் அதனை தடுத்து எதிரிகளை முறியடிப்பதுதான் கதை.முதலைப் படையின் கதைகளில் ஆக்ஷன் காட்சிகள்தான் பிரதானம். அவற்றை ஒவியர் சிறப்பான முறையில் வடிவமைத்திருப்பதே இத்தொடர்களின் வெற்றிக்கு காரணம்.

Comments

 1. நண்பரே,

  மிகவும் ஜாலி மூடில் இந்தப் பதிவைத் தயாரித்திருக்கிறீர்கள் என்பது தெளிவு. சிறப்பான பதிவு நண்பரே.

  ReplyDelete
 2. நண்பரே அருமையான பதிவு. ஸ்கானிங் படங்களும் அபாரம். தொடரட்டும் தங்கள் காமிக்ஸ் சேவை.

  ReplyDelete
 3. வித்தியாசமான நடையுடன் கூடிய இந்த பதிவு நன்றாக இருக்கிறது.
  முதலை பட்டளாம் போன்ற கதைகளை நமக்கு அறிமுகப்படுத்திய லயன் காமிக்ஸ்க்கு நாம் நன்றி செலுத்தியே ஆக வேண்டும்.

  ReplyDelete
 4. LOVELY,JOLLY POST. UR ROCKING BOSS.

  ReplyDelete
 5. என்னுடைய மின்னஞ்சலுக்கு வரமுடியுமா ?

  ravi.antone@gmail.com
  செந்தழல் ரவி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்