சாகச வீரர் சார்லி சாயர்

1943- ம் வருடம் ராய் கிரேன் என்பவர். சார்லி சாயர் என்கிற சித்திரக்கதை பாத்திரத்தை உருவாக்கினார். சார்லி சாயரின் இயற்பெயர்- ஜான் பஸ் சாயர் என்பதாகும். இவருக்கு கிறிஸ்டி ஜேம்சன் என்கிற மனைவியும், பெப்பர் சாயர் என்கிற மகனும், ராஸ்கோ ஸ்வீனே என்கிற நண்பரும் உள்ளனர். யதார்த்தமான சித்திரக் கதைகள் மூலமாக பல வாசகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.


மிகச் சிறந்த சாகச வீரரான சார்லி சாயர். இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், கடற்படை விமானியாக, பசிபிக் பெருங்கடலில் நடந்த யுத்தத்தில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு எண்ணைய் நிறுவனத்தில் பழுது பார்க்கும் நிபுணராக பணியாற்றினார்.


1950 –ல் மீண்டும் கப்பற்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, 1960-ம் ஆண்டில் நடந்த வியட்நாம் போரில் கலந்து கொண்டவர். போருக்குப் பின்னர் தனியார் துப்பறிவாளராக மாறி, பல வழக்குகளை, தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார்.1974- ம் வருடம் முதல், முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு சார்லி சாயர் அறிமுகமானார். அதன் பின்னர் இந்திரஜால் காமிக்ஸ்,ராணி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், மூலமாகவும் வெளிப்பட்டுள்ளார்.


தமிழில் வெளிவந்துள்ள சார்லி சாயரின் சித்திரக்கதைகளின் தலைப்புக்கள்- முத்து காமிக்ஸ்.


1.கடத்தல் ரகசியம் 2.சிறை மீட்டிய சித்திரக் கதை 3.குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் 4.இஸ்தான் புல் சதி 5.பேய்த் தீவு ரகசியம் 6.திக்குத் தெரியாத தீவில் 7.வெடிக்க மறந்த வெடி குண்டு 8.ஒரு நாள் மாப்பிள்ளை 9.யார் அந்த அதிர்ஷ்டசாலி 10.சார்லிக்கொரு சவால் 11.இரத்த வாரிசு 12.ஒரு கைதியின் கதை.


இந்திரஜால் காமிக்ஸ்.

1.கழுகுக் கூடு 2.பேய் மனை 3.ராஜாளி ராஜா வயல் 4.கம்பி நீட்டிய கள்ளி 5.அதிபதி கொலைச் சதி 6.எத்தனுக்கு எத்தன் 7.அணுகுண்டு அடாவடியர்
8.பழி சுமந்த பரம சாது 9.கந்தர்வ தீவினிலே 10.வல்லாயுத சடுகுடு
11.அறுந்த நரம்புகள்

ராணி காமிக்ஸ்.

1.நான் யார்?

மேகலா காமிக்ஸ்

1.நடுக்கடலில்

மினி லயன்

1.ஒரு கள்ளப் பருந்தின் கதை 2.ஒரு காவலனின் கதை

இவை தவிர  ...

1.பேய்த் தீவு ரகசியம், 2.சிறை மீட்டிய சித்திரக் கதை மறு பதிப்பாகவும் வெளிவந்துள்ளன.

Comments

 1. அதிரடி மன்னன் சுனில் - அடப்பாவிகளா!!! :)

  ReplyDelete
 2. வித்தியாசமான ஓவியங்கள் மற்றும் கதைக்களனுடன் விளங்கும் சார்லி கதைகள் எப்போதும் என் favorite தான்

  ReplyDelete
 3. சார்லி பற்றிய விவரமான பதிவு. "சிறை மீட்டிய சித்திரகதை" எப்பவுமே ஞாபகத்தில் இருக்கிற சூப்பர் கதை

  ReplyDelete
 4. சிறந்த பதிவு . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. ஆள் இல்லா தீவில் ஒரு பறவை கழுத்தில் கயிறு கட்டி மீன் பிடித்து சாப்பிடுவார்களே அது என்ன கதை?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கேட்டிருந்த புத்தகத்தின் பெயர் - திக்குத் தெரியாத தீவில்...
   அதில் தான் சார்லி , கார்மராண்ட் என்னும் பறவையை கொண்டு மீன் பிடிப்பார் ...

   Delete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்