நியுயார்க்கில் மாயாவி
1970- களில் சித்திரக் கதைகளை வாசித்த அனைத்து சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் இரும்புக்கை மாயாவி நன்கு பரிச்சயமானவர். மாயாவியின் இரும்புக் கரம் மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் முழுவதும் மறைந்து, இரும்புக்கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இந்த அபூர்வ சக்தியைக் கொண்டு, பல விசித்திர ஜந்துக்களையும், பல விசித்திர வில்லன்களையும் அழித்து, நாட்டை பல முறை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். ஆனால்? ஆரம்பக் காலத்தில் இரும்புக் கை மாயாவியே நாட்டிற்கே பெரும் அச்சுருத்தலாக விளங்கியுள்ளார். அதன் கதை தான் இந்த நியுயார்க்கில் மாயாவி ...புரபஸர் பாரின்ஜரின் ஆய்வுக் கூட, விபத்தொன்றில் சிக்கிக் கொள்ளும், அவரது உதவியாளர் கிராண்டேலுக்கு(மாயாவி) எதிர்பாராத விதமாக அரூரபமாகும் சக்தி கிடைக்கப் பெறுகிறது. அதன் சக்தியைக் கொண்டு, உலகை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, முதலில் ஒரு வங்கியை கொள்ளையடித்தும், பின்னர் தொடர் விபத்துக்களை, நிகழச் செய்தும், அதன் மூலமாக பொது மக்களையும், அரசாங்கத்தையும் அதிர்ச்சியடையச் செய்கிறார் மாயாவி. இறுதியாக தனது அற்புத ஆற்றலை உலகிற்கு நிரூபிப்பதற்காக, நியுயார்க் நகரில் மிகச் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, பனிரெண்டு மணி நேரத்திற்குள் நகரத்தை தகர்க்கப் போவதாக அரசாங்கத்தை மிரட்டுகிறார்.அரசாங்கமும் உடனடியாக நகர மக்களை வெளியேற்றி விட்டு, ராணுவம் மூலமாக மாயவியை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சிக்கின்றனர். நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்குத் தேவையான மின்சாரத்தையும் மாயாவிக்கு கிடைக்காமல் செய்கின்றனர். இதற்கிடையே மாயாவியை நன்கு அறிந்தவர் புரபஸர் பாரின்ஜர். எப்படியாவது மாயாவியின் செயலைத் தடுத்து, நியுயார்க் நகரை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக. இன்ஸ்பெக்டர் லின்ச்சுடன் நியுயார்க் வந்து சேர்கிறார். வெடிகுண்டு வெடிக்க, குறுகிய கால அவகாசமே இருக்கும் தருணத்தில், மாயாவியின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, வெடிகுண்டின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சிக்கிறார் புரபஸர் பாரின்ஜர். வெடிகுண்டையும், மாயாவியையும் கண்டு பிடித்து, நியுயார்க் நகரை அழிவிலிருந்து புரபஸர் காப்பற்றினாரா?மின்சாரம் கிடைக்காமல் மாயாவி நியுயார்க் நகரை விட்டு தப்பிச் சென்றாரா?  என்பதே கதை.இந்த விறு விறுப்பான சித்திரக் கதையை உருவாக்கியவர்கள் –

கென் பல்மர் & ஜீசஸ் ப்ளாங்கோ.

Comments

 1. சிறப்பான கதைச்சுருக்கம். என்னை பொருத்தவரை இதுதான் மாயாவியின் Best கதை :).

  ReplyDelete
 2. Pathivu arumai!
  Innum niraiya kathaikalai pathri eluthunkal!..

  ReplyDelete
 3. Very Nice Post. Best wishes...

  ReplyDelete
 4. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு படித்தது! என்னிடம் இந்த புக் இருக்கிறதா என நினைவில்லை! அந்நாளில் ரொம்ப ரசித்தாய் நினைவு!!

  ReplyDelete
 5. மிக மிக நேசித்த நேசிக்கும் காமிக்ஸ் இது நண்பரே! பதிவுக்கு நன்றி. அடிக்கடி வாங்க!

  ReplyDelete
 6. அருமையான பதிவு நண்பரே,
  மிக அரிதான புத்தகம்.
  பதிவிற்கு நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்