விண்வெளிப் பிசாசு - A Super Hero Spider Adventure

The crook from outerspace எண்ணும் அயல் நாட்டு சித்திரக்கதை தமிழில்,
1986- வருடம் திகில் காமிக்ஸில்  தொடராக (18-பாகம்) வெளிவந்தது, அப்போதைய காலகட்டத்தில் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சித்திரக் கதையாகும், இச்சித்திரக் கதையை முழுப் புத்தகமாக வெளியிட்டால்? சிறப்பாக இருக்கும்-
வேற்றுக் கிரகத்திலிருந்து பூமியை நோட்டமிட வந்திருந்த விண்வெளிப் பிசாசு ஒன்று, தற்செயலாக நீதிக் காவலன் ஸ்பைடர், விசித்திரன் என்கிற எத்தனோடு மோதிக் கொள்ளும் காட்சியைக் காண நேர்கிறது, அதில் ஆர்வம் கொண்ட விண்வெளிப் பிசாசு. இருவரையும் தனது விண்கலத்திற்கு கடத்திச் சென்று, இருவருடைய மனத்திரை மூலமாக. பூமியில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது. 
நினைத்த நேரத்தில், நினைத்த உருவத்திற்கு மாறும். அற்புத ஆற்றல் படைத்த அந்தப் பிசாசு. மேலும் பூமியில் வாழ்ந்த முன்னால் கொடியவர்களான ஜெஸ்ஸி ஜேம்ஸ்- பில்லி- ஜெங்கிஸ்கான்- ஹெர்குலஸ்- அல்-லூபரியான் போன்றவர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொண்டு- அவர்களைப் போன்ற தோற்றத்தில் தன்னை உருமாற்றிக் கொண்டு பூமியில் அட்டகாசம் புரியத் தொடங்குகிறது. 


  
ஒவ்வொரு கொடியவர்களின் உருவத்தில் தோன்றும் போதெல்லாம் விண்வெளிப் பிசாசின் அட்டகாசங்களை முறியடித்து, அதன் திட்டங்களை தோல்வியுறச் செய்கிறான் ஸ்பைடர். பூமியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து முறியடித்து வரும் ஸ்பைடரை, தனது அற்புத ஆற்றல் படைத்த கதிர் வீச்சீனால், ஸ்பைடரை ராட்சஸ அளவிற்கு வளரச் செய்து தனது அடிமையாக்கிக் கொள்கிறது விண்வெளிப் பிசாசு- பூமியைக் காப்பாற்ற போராடி வந்த ஸ்பைடும், விண்வெளிப் பிசாசின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொள்ள,  தொடர்ந்து  பூமியில்  தனது கைவரிசைக் காண்பிக்கத் தொடங்குகிறது அந்தப்பிசாசு.   அவன் பிடியிலிருந்து ஸ்பைடர் மீண்டானா?

 விண்வெளிப் பிசாசின் பிடியிலிருந்து பூமியை ஸ்பைடர்  மீட்டானா? 

இச்சித்திரக் கதையை உருவாக்கியவர்கள்- ஜெர்ரி சீகல்& ரிக் பன்.  
   

Comments

 1. // இச் சித்திரக் கதையை முழுப் புத்தகமாக வெளியிட்டால்? சிறப்பாக இருக்கும்- //

  என்னுடைய ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் நண்பரே :))

  .

  ReplyDelete
 2. மிக மிக அருமையான கதை அது நண்பர்களே! சில ஆதிக்க சக்திகள் சூப்பர் பவரை தொடர்ந்து மறுத்தே வந்து எம்மை கடுப்பெற்றுகிரார்கள். வாழ்க சூப்பர் ஸ்டார்!

  ReplyDelete
 3. முதலை பட்டாளத்தாரே,

  அருமையான நினைவூற்றல். உண்மையில் என்னிடம் உள்ள திகில் காமிக்ஸ் கலெக்ஷன் ஓட்டையில், இத்தொடரை முழுவதும் இன்று வரை படித்ததில்லை. ஆங்கிலத்தில் உள்ளதையாவது படிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

  அப்புறம் உங்கள் அபிமான காமிக் நிறுவனத்தின் நியூ லுக் ஸ்பெஷல் பற்றி பதிவு ஒன்றும் இல்லையா ? :P

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ரபீக் ராஜா அவர்களே ..
   நமது ஆசிரியர் உள்பட நிறைய பேர் புத்தகம் வந்த உடனே அதை பதிவாக உடனே போட்டு விடுகிறார்கள். பிறகு நாமும் ஏன் அதை செய்ய வேண்டும் என்று நியூ லுக் பற்றி போட வில்லை ..

   Delete
 4. good post friend . This is apt book to republish in comics classic.Have read this story in bit and pieces . Hope editor gives the joy of reading it a full volume

  ReplyDelete
 5. Spider in color. Seeing first time. Thanks for sharing..

  ReplyDelete
 6. அற்புதமான கதை நண்பரே.காமிக்ஸ் க்ளாசிக்ஸ் ல் நாம் கோர வேண்டிய ஸ்பைடரின் முதல் கதை இதுதான் என்பது எனது எண்ணம்.அனைவரும் கோருவார்கள் என நினைக்கிறேன்,ஆசிரியர் வண்ணத்தில் விட மாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருக்கிறார் ,பின் அட்டையில் விட்ட கதையின் ஸ்கேனில் வண்ணத்தில் அற்புதமாயிருக்கிறது.ஸ்பைடர் இக்கதையில் மிக அழகாக வரையப்பட்டிருப்பார் .

  ReplyDelete
 7. பழைய நினைவுகள் என்றும் அழிவதில்லை. அறிய பதிப்பிற்கு நன்றி...

  ReplyDelete
 8. உங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும், முகவரி கீழே இணைத்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_16.html

  ReplyDelete
 9. அருமையான பகிர்வு... பாராட்டுக்கள்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

  Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

  ReplyDelete
 10. தமிழ் காமிக்ஸ்களுக்கு என்றே எக்ஸ்குளுசிவ் பாரம். இப்போது பீட்டா வில்

  http://tamilcomicsjunction.forumotion.in

  ReplyDelete
 11. nanber bruno averkalay, thikil comics list i thaganl veliyeda mudima? please.

  ReplyDelete
 12. Replies
  1. 2009 ம் வருடமே திகில் & மினி லயன் லிஸ்ட் போட்டு விட்டேன் நண்பரே .. தங்களுக்கு தெரியவில்லை என்றால் திகில் சித்திரக் கதைகள் பட்டியல் என்று தேடுங்கள் . கிடைக்கும்

   Delete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. nanbaray,kandupidithu vitten. very very THANKS.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்