தொடரும் சரவெடிகள்
சென்னை புத்தகத் திருவிழாவில் பங்கு பெரும் அனைத்து  நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். சென்ற வருடத்தைப் போன்று குண்டு (nbs) புத்தகம் இம்முறை  இடம் பெறாதது மிகுந்த வருத்தமே. அடுத்து நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இக்குறை நீங்கும் என நம்புகிறேன். இம்மாதம் நான்கு ஒல்லி பிச்சான் புத்தகங்கள் அருமையான அட்டை படங்களுடன் வெளிவந்துள்ளது.


புத்தகத்தின்  நடுவே பின் அடிக்கபடாமல்   வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பல வருடங்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள ப்ரூனோ பிரேசிலின் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இவரைப் போல் காணாமல் போனவர்கள் மீண்டு (ம்) வந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். மறுமதிப்பாக வெளிவந்துள்ள பயங்கரப் புயல் & கமான்சே கதைகள் எதிர் பார்த்த மாதிரியே நன்றாக வந்துள்ளது. ஆனால்,  இந்த மூன்று புத்தகங்களின் திருஷ்டிப் பரிகாரமாக தோர்கல் வந்துள்ளது. பல இடங்களில் வழக்கம் போல டல்லாக அச்சாகியுள்ளது. இவை தவிர தொடரும்
லக்கியின் படலம் இரண்டு சிறு கதைகள் filler page - ஆக வெளிவந்துள்ளது.

இறுதியாக சன்ஷைன் கிராபிஃக் நாவலின் லோகோ (மொக்கையான) மாற்றத்திற்கான காரணத்தை தெளிவு படுத்தாமல் விட்டது ஏமாற்றத்தை தந்துள்ளது . 

பின் குறிப்பு  ;

இம்மாதம் வெளிவந்துள்ள  நான்கு புத்தகங்களும் நாளை மாலைக்குள் புதுவையில் உள்ள  வழக்கமாக விற்பனை செய்யும் கடைகளில்
கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...
                                                                          இன்று (12. 01. 2014) தினகரன் வசந்தம்  நாளிதழில்  வெளிவந்துள்ள காமிக்ஸ்  எப்படி உருவாகிறது? என்ற  கட்டுரை உங்கள் பார்வைக்காக... 
Comments

 1. தொடரட்டும் அசத்தல் பதிவுகள்!

  ReplyDelete
 2. பொங்கல் நல்வாழ்த்துகள் சார் !

  ReplyDelete
 3. லோகோ மாற்றத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்தாமல் விட்டது ஏமாற்றமே!

  பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 4. superb post friend.Next month 3 or 4 book?

  ReplyDelete
  Replies
  1. காலத்தின் கால் சுவடுகளில் & காவியில் ஒரு ஆவி ஆகிய இரண்டு புத்தகங்கள் மட்டும் வெளிவரும் நண்பரே...

   Delete
 5. vanganna vanakkangannaa! pathivu super nanbare!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்