பூந்தளிர் அமர் சித்திரக்கதை
புராண, இதிகாசக் கதைகள்
மூலம் இந்தியச் சித்திரக்கதை வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சிகண்ட இதழ் என்று
பூந்தளிர் அமர் சித்ரகதையைக் குறிப்பிடலாம். உலக அளவில் இந்தியச் சித்திரக்கதைகளுக்கான
அடையாளத்தையும் இக்கதைகள் கொண்டுள்ளன.
1984 இல் ‘பைகோ நிறுவனம்’ (Paicco) அமர் சித்ர கதைகளின் கதைகளுக்கான உரிமம் பெற்றுத் தமிழில் வெளியிட்டனர். அவை ‘பூந்தளிர் அமர் சித்திரக்கதைகள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளன.
இன்றும் மக்களிடையே பாரதப் பண்பாட்டை, வளரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் அடையாளத்தை இச்சித்திரக்கதைகள் பெற்றுத் தந்துள்ளன. அதனால் இன்றுவரை புத்தகச் சந்தையில் பூந்தளிர் அமர் சித்ர கதைக்கு குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. உலக நாடுகளிடையே இந்தியச் சித்திரக்கதைக்கான அடையாளத்தைத் தாங்கி இருப்பவை இச்சித்திரக்கதைகள் ஆகும். 1984 ல் தொடங்கிய இவர்களது சித்திரக்கதை பயணம் செப்டம்பர் 1989 வரை மட்டுமே நீடித்துள்ளது! அவர்கள் வெளியிட்டுள்ள கதைகளில் தலைப்புகளும், (பட்டியல்) அதனுடைய முகப்பு அட்டைகளும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன! இவைகளைப் பற்றிய கேள்வி, வினாக்கள் இருப்பின் கமெண்ட்டில் தெரியப்படுத்தவும் _ நன்றி
பின் குறிப்பு
107 - வது புத்தகம் அவர்களே வெளியிடவில்லை! அதனால் அது மட்டும் வெறுமனே இருக்கும்!
பார்வதி சித்திரகதை வரிசைக்கு நன்றிகள் பல. தொடருங்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதொகுப்புக்கு நன்றிகள் பல.
ReplyDeleteஉங்களின் கடின முயற்சிக்கு தலை வணங்குகிறேன் .
ஆனால் இதில் உள்ளத்தில் ஒன்றைக் கூட பார்த்ததில்லை.
படித்ததில்லை.
ஏன் அட்டையில் அதன் விலை குறிப்பிடப்படவில்லை?
நான் 1984 முதல் 1989 வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் தான் இருந்தேன்.
பொன்னி காமிக்ஸ் ராணி காமிக்ஸ் பைக்கோ கிளாஸிக்ஸ் தெரிந்த நான் இதனை எப்படி அறியாமல் விட்டேன் என்று தெரியவில்லை.
ஆனால் அந்த காலகட்டம் காமிக்ஸ் வாங்க வேண்டும் என்றால் சொத்தை தான் விக்க வேண்டியிருக்கும். ஏனெனில், ஏகப்பட்ட காமிக்ஸ். அதுமட்டுமில்லாமல், அணில் அண்ணா & இளையராஜா ஆகியோர் எழுதிய மாயாஜால கதைகள் வேறு. திரைப்படத்திக்கே கட்டணம் வெறும் ரூபாய் 1 அல்லது இரண்டு தான் இருக்கும்.
இதில் உள்ளதில் நண்பர் சுரேஷ் சந்த் அவர்களின் உதவியால் மகாபாரத கதைகளை மட்டும் படித்துள்ளேன் .
ReplyDeleteThank you bro, excellent work, appreciate your comics enthusiasm
ReplyDelete