Posts

புரட்சித் தலைவன் பிரின்ஸ்

Image
க்ரனாடா தீவின் செல்வந்தரான பிரான்ஜென் பணபலம், படைபலம் என அனைத்தையும் கொண்ட ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறான். அங்கு வசிக்கும் ஏழை விவசாயிகளின் நிலங்களை தன்னுடைய ஏற்றுமதி தொழிலுக்காக சொற்ப விலை கொடுத்து பறித்துக் கொள்கிறான். பிரான்ஜென்னால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் எமிலியோ என்ற நபரின் தலைமையில் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கி அவனை எதிர்கின்றார்கள். புரட்சிப் படை தலைவன் எமிலியோவை தந்திரமாக சிறை பிடிக்கிறான் ப்ரான்ஜென். இந்த சூழ்நிலையில் கழுகு கப்பல் பழுதடைந்த காரணத்தினால் க்ரனாடா தீவிற்கு வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் எதிர்பாராத விதமாக புரட்சிப் படை முகாமிற்கு வந்து சேர்கின்றார்கள். ப்ரான்ஜென்னுக்கு எதிராக போராடும் அவர்களின் உண்மைநிலையை கண்டு புரட்சிப் படைக்கு தலைமை ஏற்று எதிரிகளோடு மோதுகிறார் பிரின்ஸ். பிரின்ஸின் சாதுர்யத்தால் எதிரிகளின் படைகளையும் ப்ரான்ஜென்னின் சூழ்ச்சியையும் முறியடித்து அவனிடம் இழந்த அனைத்து மக்களின் நிலங்களையும் இறுதியில் மீட்டு தருவதே கதை. பிரின்ஸ் கதைகளில் சற்று மாறுபட்ட விதத்தில் கௌபாய் பாணியில் இந்த சித்திரக் கதையை உருவாக்கி...

ஆப்பிரிக்காவில் பிரின்ஸ்

Image
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லம்பாஸியில் உள்நாட்டு கலவரங்கள் வெடிக்க, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வடங்கோக்கள் என்னும் புரட்சியாளர்களால் நகரமே நாசமாகிறது. புரட்சி கும்பலின் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கொலைவெறியுடன் கொன்று குவிக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் திணறிக் கொண்டிருக்கும் அவல நிலை. இதற்கிடையே புரட்சியாளர்களிடமிருந்து துணிச்சலாக தப்பிக்க முயல்கின்றனர் ரயான் குடும்பத்தினர். சண்டையிட்டுக் கொண்டே லம்பாஸி நகரை விட்டு சிறிய விமானத்தில் இரு குழந்தைகளுடன் தப்பித்து செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக எதிரிகளின் கண்ணில் விமானம் தென்பட அதை சுட்டு சேதப்படுத்துகின்றார்கள். பழுதடைந்த விமானத்தோடு அடர்ந்த முட்காட்டின் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர். தங்களை சுற்றிலும் விஷ முட்கள் சூழ்ந்திருப்பதை கண்டு மரணத்தின் விளிம்பில் உதவிக்காக காத்துக் கிடக்கின்றனர். ரயான் குடும்பத்தினரை மீட்பதற்காக யாருமே செல்ல தயங்கும் ஆபத்துகள் நிறைந்த கானகத்திற்கு மனித நேயம் மிக்க தீரர்களான பிரின்ஸ் மற்றும் பார்னே துணிச்சலாக செல்லத் துணிகிறார்...

தலை வாங்கிய குரங்கு - டெக்ஸ் வில்லர் சாகஸம்

Image
துப்பாக்கி வீரரான டெக்ஸ் வில்லர், ரேஞ்சர் உளவுப் பிரிவில் தலை சிறந்த ஏஜெண்டாக திகழ்பவர் . செவ்விந்திய இனத்தில் உள்ள ஒரு பிரிவான  நவஜோ என்ற இனத்தின் தலைவர். வெள்ளையரான இவர் லிலித் என்ற செவ்விந்திய பெண்ணை மணந்து,  சில வெள்ளையர்களின் சூழ்ச்சி காரணமாக மனைவியை பறிகொடுத்தவர். செவ்விந்திய இனத்தையும், அடிமைகளாக அழைத்து வரப்பட்ட ஆப்பிரிக்கர்களையும் வெள்ளையர்கள்  வெறுத்தனர். டெக்ஸ் வில்லர் இவ்விரு இனங்களுக்காக தொடர்ந்து போராடுபவர். நவஜோ இனத்தவர் இவரை இரவுக் கழுகு என்றும் அழைப்பார்கள் டெக்ஸ் வில்லரின் உற்ற தோழனும், சக ரேஞ்சருமான கிட் கார்ஸன் நகைச்சுவை உணர்வு கொண்டவர். டெக்ஸ் வில்லருடன் பல சாகஸங்களில் பங்கேற்று உயிர் காப்பான் தோழன் என்பதற்கேற்ப திகழ்பவர். துப்பாக்கி சுடுவதிலும் வல்லமை பெற்றவர். டெக்ஸ் வில்லரின் வாரிசான சின்னக் கழுகு கிட் தந்தையை போலவே சாகஸ வீரர். டைகர் ஜாக் ஆபத்தான தருணங்களில் டெக்ஸ்-க்கு உதவும் செவ்விந்திய தோழன். தன்னுடைய பலங்களாக டெக்ஸ் கருதுவது இவர்கள் மற்றும் தன்னுடைய குதிரை டைனமைட் மற்றும் வின்சென்ஸ்டர். இவரின் சாகஸங்கள் இத்தாலி. ப்ரென்ஞ், ஆங்க...

அசோக்/மேத்தா காமிக்ஸ் வரிசைப்பட்டியல்

Image
லயன் காமிக்ஸ் மற்றும் இராணி காமிக்ஸ் தொடங்கிய 1984-ம் ஆண்டில்தான் மேத்தா காமிக்ஸ்-ம் தொடங்கப்பட்டது. சிறிது காலத்திற்கு பிறகு அசோக் காமிக்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் தொடர்ந்து வந்தது. தரமான காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்ட நிறுவனங்களில் மேத்தா காமிக்ஸ் நிறுவனமும் ஒன்று. இவர்கடைய நிறுவனத்தில் ஜான் சில்வர் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளனர். அச்சித்திர புத்தங்களில் வெளிவந்த இரத்தப் பிசாசு என்ற சித்திரத் தொடருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. எதன் காரணத்தினாலோ மேத்தா காமிக்ஸ் வெளிவராமலே நின்றுவிட்டது. அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளேன். 1. இரத்த விளையாட்டு (ஜான் சில்வர்) 2. கொலைக் கழகம் (ஜான் சில்வர்) 3. மரணக்கயிறு (ஜான் சில்வர்) 4. மனித வேட்டை (ஜான் சில்வர்) 5. பயங்கரத் தீவு (ஜான் சில்வர்) 6. விசித்திர பந்தயம் (ஜான் சில்வர்) 7. மரணத்தின் நிழலில் (ஜான் சில்வர்) 8. நவீனக் கொள்ளையர் (ஜான் சில்வர்) 9. புதிர்மாளிகை (லில்லி குழுவினர்) 10, பொற்சிலை மர்மம் (ஜான் சில்வர்) 11. நள்ளிரவு பிசாசு (லில்லி குழுவினர்) 12. சுரங்க வெடி மர்மம் (...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Image

முகமற்ற கண்கள்

Image
வில்லியம் வான்ஸின் சித்திரங்களில் க்ரெக் (லுயி அல்பர் என்ற புனைப்பெயரில்)அவரின் கதையுடன் 1970-களில் வெளிவந்த ஒரு சித்திரத் தொடர் முதலைப்படை. தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஒரு இரகசிய பிரிவின் அதிரடி படை: முதலைப் படை. இந்த படையின் தலைவர் கலோனல் எல் (காமெடி கர்னல் இல்லீங்க!). கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில். படையின் உறுப்பினர்கள் பற்றி சிறிய அறிமுகம். ப்ரூனோ ப்ரேசில் கமாண்டர். மின்னல் வேக செயல்திறன் கொண்டவர் (என்னை போலவே) கௌச்சோ மோரல்ஸ் முன்னாள் ரௌடி. சிறைச்சாலையின் வெளிப்புறம் மட்டுமின்றி உள்புறமும் நல்ல பழக்கம் அண்ணாச்சிக்கு. விப் ரபேல் (அல்லது) ஜுடி சாட்டையடி வீராங்கனை. சர்க்கஸில் காட்டு மிருகங்களை சாட்டையை வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தவர் இப்போது நாட்டு மிருகங்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவர். டெக்ஸாஸ் அண்ணாச்சி ஒரு கௌபாய். டமால் டூமில் பேர்வழி. பில்லி ப்ரேசில் இவரும் அதிரடி படை காரர். கமாண்டர் ப்ரூனோவின் தம்பி. நாடோடி ஆள் பார்க்க ஜிப்சி அடிச்சா எதிரிகள் கப்சிப். இந்த சித்திர தொடர்கள் வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கதையே மு...

கொலைகார கானகம்

Image
கடலோரம் அமைந்த காட்டினால் சூழப்பட்ட தீவு ஒன்றில் தீடீரென காட்டுத் தீ ஏற்படுகிறது. தீயை அணைக்க முடியாதபடி காற்று பலமாக வீசி தீயை மேலும் வேகமாக பரவசெய்கிறது. தீவில் உள்ள மக்கள் தீவின் நடுவில் சிக்கிக் கொள்ள அவர்களை மீட்பதற்காக அருகிலுள்ள அனைத்து கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்து வந்தடையும் சிறு கப்பல்களால் கூட தீவை நெருங்க முடியாத அளவு கடலெங்கும் ஊசி போன்ற பாறைகள் அரணாக அமைந்துள்ளது. மீறி செல்வோருக்கு கப்பலும், உயிரும் மீஞ்சாத நிலைமை. காப்பீடு நிறுவனங்களும் கைவிரித்து விட்ட சூழ்நிலையில், பிரின்ஸ் குழுவினரின் கழுகு கப்பலும், மேலும் இரு கப்பல்களும் துணிச்சலாக தீவு மக்களை மீட்பதற்காக செல்கின்றன. தீவில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் உபயோகமற்ற நிலையில் தீவு மக்களுக்கு உதவி வந்து கொண்டிருப்பதை தெரிவித்து, அவர்களை ஒன்று திரட்டுவதற்காக காட்டுத் தீக்குள் நுழைந்து செல்ல தயாராகிறார் கேப்டன் பிரின்ஸ். பல ஆபத்துகளை எதிர்நோக்கி செல்லும் பிரின்ஸ் தீவு மக்களிடம் பத்திரமாக சென்றடைந்தாரா? பார்னே தலைமையில் சென்ற மூன்று கப்பல்களும் விபத்தில் சிக்காமல் தீவிலிலுள்ள ...