Posts

சாகச வீரர் சார்லி சாயர்

Image
  1943- ம் வருடம் ராய் கிரேன் என்பவர். சார்லி சாயர் என்கிற சித்திரக்கதை பாத்திரத்தை உருவாக்கினார். சார்லி சாயரின் இயற்பெயர்- ஜான் பஸ் சாயர் என்பதாகும். இவருக்கு கிறிஸ்டி ஜேம்சன் என்கிற மனைவியும், பெப்பர் சாயர் என்கிற மகனும், ராஸ்கோ ஸ்வீனே என்கிற நண்பரும் உள்ளனர். யதார்த்தமான சித்திரக் கதைகள் மூலமாக பல வாசகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். மிகச் சிறந்த சாகச வீரரான சார்லி சாயர். இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், கடற்படை விமானியாக, பசிபிக் பெருங்கடலில் நடந்த யுத்தத்தில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு எண்ணைய் நிறுவனத்தில் பழுது பார்க்கும் நிபுணராக பணியாற்றினார். 1950 –ல் மீண்டும் கப்பற்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, 1960-ம் ஆண்டில் நடந்த வியட்நாம் போரில் கலந்து கொண்டவர். போருக்குப் பின்னர் தனியார் துப்பறிவாளராக மாறி, பல வழக்குகளை, தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1974- ம் வருடம் முதல், முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு சார்லி சாயர் அறிமுகமானார். அதன் பின்னர் இந்திரஜால் காமிக்ஸ்,ராணி காமிக்ஸ், மேகலா...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்

Image
1 கத்திமுனையில் மாடஸ்டி - மாடஸ்டி 2 மாடஸ்டி in  இஸ்தான்புல் -  மாடஸ்டி 3 எத்தனுக்கு எத்தன் - ஸ்பைடர் 4 டாக்டர் டக்கர் - ஸ்பைடர் 5 இரும்பு மனிதன் - ஆர்ச்சி 6 கபாலர் கழகம் - மீட்போர் ஸ்தாபனம் 7 பாதாளப் போராட்டம் - ஸ்பைடர் 8 கொலைப்படை - ஸ்பைடர் 9 பயங்கர நகரம் - ஜானி, ரோஜர் 10 கடத்தல் குமிழிகள் - ஸ்பைடர் 11 மரணக்கோட்டை - மாடஸ்டி 12 பழிவாங்கும் பொம்மை - ஸ்பைடர் 13 சதி வலை - ஜான் மாஸ்டர் 14 காணாமல் போன கடல் - லாரன்ஸ், டேவிட் 15 சைத்தான் விஞ்ஞானி - ஸ்பைடர் 16 உலகப் போரில் ஆர்ச்சி - ஆர்ச்சி 17 யார் அந்த மினி ஸ்பைடர் - ஸ்பைடர் 18 இஸ்தான்புல் சதி - ஜேஸன் 19 தலைவாங்கிக் குரங்கு - டெக்ஸ்வில்லர் 20 ஆப்பிரிக்க சதி - ஜார்ஜ், டிரேக் 21 மனித எரிமலை - நார்மன் 22 சதுரங்க வெறியன் - ஸ்பைடர் 23 மாஸ்கோவில் மாஸ்டர் - ஜான் மாஸ்டர் 24 தங்க வேட்டை - ஆர்ச்சி 25 கோடை மலர்-86  - ஸ்பெஷல் 26 அதிரடி வீரர் ஹெர்குலஸ் - ஹர்குலஸ் 27 பளிங்குச் சிலை மர்மம் - டெக்ஸ்வில்லர் 28 மர்ம எதிரி - ஜார்ஜ், டிரேக் 29 நீதிக்காவலன் ஸ்பைடர் - ஸ்...

புதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது !

Image
                                                                                                                வணக்கம்  நண்பர்களே! அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! பல மாதங்களாகியும் வெளிவராமல் இருந்த காமிக்ஸ் புத்தகம் , புதிய வருடத்தில் புதிய பொலிவுடன் Come back  ஸ்பெஷல் ஆக (லயன் காமிக்ஸ் ) வெளி வந்துள்ளது. இதில்  மொத்தம் 5 சித்திரக் கதைகள்  உள்ளன. 1 . ஒற்றர்கள் ஓராயிரம்  (லக்கி ...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Image

ஜான் சில்வர் - விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய இரகசிய உளவாளி .

Image
பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஓர் அங்கமான Q  பிரிவில் பணி புரியும் ஒரு ரகசிய உளவாளி ஜான் சில்வர். அவரது இயற்பெயர் ஜான் ஹவாக். ஜான் சில்வர் ஒரு தலைசிறந்த உளவாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தாலும், அவரது ஒரே இலட்சியம், தான் ஒரு தலைசிறந்த விமானியாக, புகழ்பெற வேண்டும் என்பதே ஆகும்.         ஜான் சில்வர் முதன்முறையாக டெல்டா-10 என்ற விமானத்தை இயக்கியபோது, விமானத்தில் பயணம் செய்த ஹர்ஸ், காலின்ஸ் ஆகிய இரண்டு உளவாளிகளின் கவனக்குறைவினால், விமானம் பயங்கர  விபத்துக்குள்ளாகியது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஜான் சில்வர்,  நடந்த விபத்தின் உண்மையை உணர்த்த தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய லைசன்ஸையும், வேலையையும் இழந்தார். அதன்பிறகு ஒரு துப்பறிவாளராக மாறி, நடந்தவற்றைக் கண்டுபிடித்தார். ஜான் சில்வரிடம் இருந்த அசாத்திய திறமைகளை அறிந்த 'Q' என்ற உளவு அமைப்பினர், ஜான் சில்வரின் பைலட் லைசன்சை திரும்பப் பெற்றுத்தருவதாகக் கூறி, தங்களது கடினமான பணிகளை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டனர். ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்பட்...

தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்

Image
தமிழ் காமிக்ஸ் பற்றிய கருத்துக்கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் நிறைந்திருக்கும். மேலைநாடுகளில் 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட காமிக்ஸ் ( சித்திரக்கதை ) புத்தகங்களின் பதிப்பக உரிமைகளைப் பெற்று, குமுதம், கல்கி, ராணி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன் ஆகிய நாளிதழ்களில் முதன்முதலாக தமிழில் தொடர்கதைகளாகச் சித்திரக்கதைகள் வெளிவரத் தொடங்கின.  அதன் பின்னர் 1965-ம் வருடத்திற்குப் பின் ஃபால்கன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், வித்தயார்த்தி மித்ரம் ஆகிய புத்தக நிறுவனங்கள் முழுநீள சித்திரக்கதைகளாக வெளியிட்டுள்ளனர்.                தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1965-ம் வருடம் முதல் வெளிவந்துகொண்டிருந்தாலும், 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரை தான் காமிக்ஸ்களுக்குப் பொற்காலமாக விளங்கியது.   இந்த காலகட்டத்தில் தான் புற்றீசல் போல ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன.  லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ்...