பின் குறிப்பு - அடுத்த வருடம் வரவிருக்கும் புத்தகங்கள் ஒகே ரகம் தான். டெக்ஸ் வில்லருக்கு அதிக இடம் ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிதான். டைகர் கதைகளை இனி வரும் காலங்களில் பிரித்து போடாமல் முடிந்தளவு ஒரே இதழாக வெளியிட முயற்சித்தால்?, மீண்டும் அனைத்து வாசகர்களையும் டைகர் கவர வாய்ப்புண்டு. இதே போன்று கமான்சே கதைகளும் இன்னும் ஏறக்குறைய பத்து கதைகளுக்கு மேல் உள்ளதால் அவருடைய கதைகளையும் இரண்டு, இரண்டாக போட்டு முடித்தால், எஞ்சியிருக்கும் கதைகளிலும், வாசகர்களிடமும் ஒருவித தொய்வு ஏற்படாமல் இருக்கக்கூடும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த டேஞ்சர் டயபாலிக்கை ஒரேடியாக ஓரங்கட்டியதுதான் வியப்பளிக்கிறது. இறுதியாக வந்த அவருடைய இரண்டு கதைகளும் நன்றாகவே இருந்தன. ஜில் ஜோர்டான், மற்றும் நிறைய கிராபிக் நாவலுக்கு வாய்ப்பளிக்கும் போது, ஜெஸ் லாங் நாயகருக்கும் இடையில் ஒரு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம். வித்தியாசமான துப்பறிவாளர் நான்கைந்து கதைகளில் வெளிவந்திருந்தாலும், அவருடைய கதைகள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தன. ...