ஒரு உற்சாகப் பதிவு!

நேற்று இரவுதான் இங்குள்ள ( புதுச்சேரி ) ஒரு நண்பருடன்  பழைய கதைகளை ரீபிரிண்ட் பண்ணாததையும், பழைய புத்தகங்களை அதிக விலைக்கு சிலர்  விற்பதைப் பற்றியும் நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தோம்.சில வருடங்களுக்கு முன்னர் அதிக விலையில் பழைய புத்தகங்கள் விற்பதைக் கேள்விப்பட்டு எடிட்டர் தடாலடியாக  நான்கு புத்தகங்கள்    60 ரூபாய் விலையில் வரும் என்று அறிவித்ததும். நிறைய வாசகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால், அதிக விலைக்கு பழைய புத்தகங்களை விற்கும் விற்பனையாளர்களுக்கு இச்செய்தி தலையில் இடி விழுந்த மாதிரி விழுந்தது. பின்னர் 70 காப்பி கூட முன் பதிவு ஆகாததால் மும்மூர்த்திகளையும் பழைய ஹீரோக்களையும் பரண் மேல் போடுவதாக எடிட்டர் அறிவித்ததும், மீண்டும் பழைய புத்தகங்களுக்கு முன்பை விட அதிக கிராக்கி ஏற்பட்டு இன்னும் கூடுதலான விலைக்கு விற்கப்பட்டன. எடிட்டரின் இந்த தடாலடி முடிவால் பழைய புத்தகங்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் மனதில் பாலை வார்த்து விட்டார். ஆனால், 


நிறைய பேர் கிராபிக் நாவலை வாங்க (படிக்கவும்) மறுத்தும் பிடிவாதமாக நான் போடுவேன்  என்றும், விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கலாம், பிடிக்காதவர்கள் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை என்று இந்த விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்கும் எடிட்டர், ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒரேடியாக பழைய ஹீரோக்களை பரண் மேல் தூக்கிப் போடும் அவசியமென்ன? என்று தான் புரியாமல் இருந்தது. கிராபிக் நாவலில் உள்ள அதே உறுதியை (விருப்பப்பட்டவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்) ஏன் இந்த ரீபிரிண்ட் விஷயத்தில் உறுதியாக நிற்க மாட்டேன்கிறார் என்பதை தான் நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்,  இன்று காலையில் எடிட்டரின் பதிவைப் பார்த்தால்? 


மீண்டும் மும்மூர்த்திகள் மற்றும் பழைய ஹீரோக்கள் ரீபிரிண்ட்டில் வருவதை தெரிவித்துள்ளார். இது அனவருக்கும் ( ஒரு சிலரைத் தவிர) மகிழ்ச்சியான விஷயமே. காலம் கடந்து இந்த முயற்சியை எடுத்திருந்தாலும் இந்த சந்தோஷமான முடிவிற்காக அனைத்து நண்பர்களின் சார்பாக எடிட்டர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2015  ஜனவரியில், சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நான்கு ரீபிரிண்ட்கள் வெளியிடப் போவதாக எடிட்டர் அறிவித்துள்ளார். பல முன்னணி ஹீரோக்களின் படையெடுப்பு தொடங்கவுள்ளது. அதைப் பற்றிய  சில படங்கள்..

     

Comments

 1. அதிரடியான பதிவு... அட்டைப்படங்கள் அனைத்தும் மறுபதிப்புகளாக வந்தால் பெரு மகிழ்ச்சியடைவேன்!!

  ReplyDelete
  Replies
  1. வரும் என்றே நம்புவோம் சார்.

   Delete
 2. எடிட்டர் அறிவிப்பு ஓகேதான் சந்தோஷம்தான், ஆனால் 50 ரூபாய்க்கு ஒரு கதை என்பது மட்டும் வருத்தம் அளிக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சார். இந்த அறிவிப்பு சென்ற வருடத்தில் வெளிவந்திருந்தால் 60 ரூபாய்.க்கு நான்கு கதைகள் கொண்ட ஒரு புத்தகம் கிடைத்திருக்கும்.

   Delete
  2. ஆம், விலை ரூ 50 கொஞ்சம் ஓவர் தான். மறுபதிப்பு கதைகளுக்கு புது கதைகளில் இருக்கும் செலவுகளில் ராயல்டி, மொழிபெயர்ப்பு போன்ற செலவுகள் இல்லை. ஒரு பக்கத்திற்கு இரண்டு panel தான் என்றால் பக்கங்களை விரயம் செய்வதாகப் படுகிறது.

   Delete
 3. nanbarea apadieye muthu comics ill reprinting varatha puthagagalai velli ittal puthagha viyabrarigal kurivargal arumiyana pathivu nanbare

  ReplyDelete
  Replies
  1. முத்து காமிக்ஸில் வெளிவராத பட்டியலை வெளியிட வேண்டுமென்றால் பல பதிவுகள் போட வேண்டியிருக்கும் நண்பரே.

   Delete
 4. பழைய புத்தகம் திரும்ப பதிப்பதில் சந்தோஷம். ஆனால் 20புத்தகம் மட்டூமே வருவது வருத்தமே.!

  ReplyDelete
  Replies
  1. இந்த வருடம் 20 என்பது சந்தோஷமான விஷயம், அதனை கொண்டாடுவோம்.

   Delete
  2. ஆமாம் நண்பரே. ஒட்டு மொத்தமாக பரணுக்குப் போகாமல் ஒன்றிரண்டாவது கிடைக்கின்றதே என்பதை நினைத்து சந்தோஷப் படுங்கள்.

   Delete
 5. சூப்பர் ஜி! எனக்கு இந்த வைரஸ் x கதை படிக்க ஆசை. நமது ஆசிரியர் மனது வைத்தால் நன்று! தொடரட்டும் நமது கருப்பு வெள்ளை நாயகர்களின் மறுபதிப்பு.

  உங்களை போன்ற பல நண்பர்களின் மறுபதிப்பு விவாதம்கள் வீண் போகவில்லை.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய ஆசையை எடிட்டர் விரைவில் பூர்த்தி செய்வார் என்றே நம்புகிறேன் நண்பரே. உங்களை அல்ல நம்மைப் போன்ற நண்பர்களின் விவாதங்கள் வீண் போகவில்லை.

   Delete
 6. @ ப்ரூனோ ப்ரேசில்

  உங்கள் ரசனைக்கேற்ற மறுபதிப்பு வரிசை அருமை.ஒரு சின்ன சந்தேகம் ஒரு கதை ஒரு புத்தகமா ? இரு கதை ஒரு புத்தகமா ?
  இதழ் 1 என உள்ள விளம்பரத்தில் இரண்டுகதை உள்ளதே...

  ReplyDelete
  Replies
  1. எனது ரசனைக்கேற்ற வரிசை இது அல்ல நண்பரே. மறுபதிப்பு நாயகர்களின் கதைகளில் இரண்டு கதைகளின் முகப்பு அட்டை படங்களை தொகுத்துள்ளேன். அவ்வளவு தான். ஒரு இதழில் ஒரு கதைதான் வருகிறது.

   Delete
  2. கல் நெஞ்சன்,சார்லி,சிஸ்கோகிட்,இரட்டையர்,ரிப்கெர்பி,
   மாண்ரேக் ,பிலிப் காரிகன் என வெளிவர வாய்ப்பு குறைவான பட்டியல் பார்த்ததும் அப்படி தோன்றியது...நண்பரே..!

   Delete
  3. மறுபதிப்பே பண்ணாத கதைகள் நிறையவே உள்ளது. அவை அனைத்தும் வெளிவந்தால் சந்தோஷம் தான் நண்பரே.

   Delete
 7. ஒரே பயம்... இதுலயும் எடிட்டர் புதிய மொழிபெயர்ப்பு பண்ணாமல் போகணும் என்பதுதான் அல்லவே...:(

  ReplyDelete
  Replies
  1. அப்படி நிகழாது என்றே நம்புவோம் நண்பரே.

   Delete
 8. Replies
  1. உம்ம் ... நன்றி நண்பரே:)

   Delete
 9. படங்களை மிகவும் ரசித்து வாசித்தேன் சார்.....மறுபதிப்புகள் என்னை பொறுத்த வரை.....மிக...மிக....சூப்பரான செய்தி.மிக அருமையான பதிவு. வாழ்த்துகள் .கலீல் சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி திருமாவளவன் சார்.

   Delete
 10. கிராபிக் நாவல் என்பது என்ன நண்பரே?

  ReplyDelete
  Replies
  1. இதற்கான பதிலை நண்பர் கார்த்திக் சோமலிங்கா அழகாக விவரித்துள்ளார்சமீப காலத்தில் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே ஒரு பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் கேள்வி இது! உண்மையில் அதை வரையறுப்பது சற்று கடினம்தான். மேலே சொன்னது போல கனத்த கதையம்சம் கொண்ட காமிக்ஸ்கள் சில சமயம் கிராபிக் நாவல்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரே ஒரு பிரபல நாயகனை மட்டும் சுற்றி அமையும் தனித் தனி காமிக்ஸ் கதைகள் அல்லது தொடர்கள் போலன்றி 'எவனோ ஒருவனின்' கதை சொல்லும் தனிப்படைப்புகளும் கிராபிக் நாவல்கள் என்றே அழைக்கப்படுகின்றன! ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தனித்துவமான ஒவ்வொரு காமிக்ஸ் படைப்பும் ஒரு கிராபிக் நாவல்தான் - அவற்றில் சில தெளிவான சித்திரங்களை கொண்டிருக்கும், சில கதைகளோ நேர்த்தியான ஓவியங்களுடன் தீட்டப்பட்டிருக்கும், இன்னும் சிலவோ குழந்தைகள் கிறுக்கும் படங்களை விட மோசமான சித்திர அமைப்பை கொண்டிருக்கும். சுருக்கமாக சொல்வதானால், பொதுவான எந்தவொரு வரைமுரைகளுக்குள்ளும் அடைக்க முடியாத கதைகளையும், சித்திரங்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு காமிக்ஸும் ஒரு கிராபிக் நாவலே! :

   Delete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்