லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு ஒரு வாசகன் கடிதம்

மதிப்பிற்குரிய திரு, எஸ் விஜயன் அவர்களுக்கு,
அச்சு காகிதத்தின் திடீர் விலை உயர்வால் தாங்கள் எங்களுக்கு வைத்துள்ள மூன்று Options
1) விலையேற்றலாமா?
2) பக்கங்களை குறைக்கலாமா?
3) சைஸை குறைக்கலாமா?
இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் புத்தகத்தின் விலையை ரூபாய் 15 என்று உயர்த்தி விட்டு சில பக்கங்களை கூடுதலாக சேர்த்து வெளியிடலாம். அல்லது சைஸை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் வழக்கமான பக்கங்களுடன் வெளியிடலாம். எக்காரணத்தை முன்னிட்டும் பக்கங்களையோ, சைஸையோ குறைப்பதை தாங்கள் தவிர்த்து விடவும்.
தற்போதைய அனைத்து வார இதழ்களும், மாத இதழ்களின விலையேற்றத்தையும் மற்ற விலைவாசி உயர்வையும் அனைவருமே அறிவார்கள். ஆதலால், தாங்களும் தயங்காமல் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ப்ரூனோ ப்ரேசில்

Comments

 1. ஆசிரியர் ஐயா,

  திருவாளர் முதலை கூறியது போல செய்திடுங்கள் இல்லையேல் வேனில் முதலைப்பட்டாளம் வந்திடும்.

  விலையக்கூட்டுவதுடன் நில்லாது விறுவிறுப்பான அம்சங்களையும்,புதிய கதைகளையும் அறிமுகப்படுத்துங்கள்.

  ReplyDelete
 2. அன்பரே,

  நான் உங்களின் கருத்தை வழி மொழிகிறேன்.

  ஏற்கனே இதை பற்றி ஒரு வோட்டெடுப்பு நடந்து கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

  விரைவில் இந்த வோட்டேடுப்பின் முடிவுகள் ஆசிரியர் எஸ் விஜயன் சாருக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

  விலைஎற்றம் வரவேற்கத்தக்கதே.மேலும், விலையை ஏற்றி பல புதிய மாற்றங்களை கொண்டு வரலாம்.

  ருபாய் 15 என்று விலையை வைத்து 132 பக்கங்களில் புத்தகத்தை கொண்டு வந்தாலும் தவறில்லை. இதன் மூலம் நீங்கள் சிங்கத்தின் சிறு வயதில் போன்ற பகுதிகளை ஒவ்வொரு இதழிலும் கொணரலாம்.

  பல இரும்புக்க் கை மாயாவி'ன் சிறுகதைகள் வெளிவராமல் உள்ளன. அவற்றையும் நீங்கள் ஒவ்வொரு இதழிலும் கொண்டு வரலாமே?

  ReplyDelete
 3. ப்ருனோ: என் எண்ணமும் இதே தான், இதே விஷயத்தை மைய கருத்தாக கொண்டு என்னுடைய வலை பதிவிலும் ஒரு இடுக்கை இட்டுளேன்.

  http://comicology.blogspot.com/2008/11/lion-comics-205-tex-willer-nov.html

  Rafiq Raja
  Comicology

  ReplyDelete
 4. ப்ருனோ,

  மூன்றாவதாக உள்ள சாய்சே புத்தக அளவு அதிகரிப்பு என்று இருக்க வேண்டும். அவர் அளவு குறைப்பதாக எங்கேயும் குறிப்பிடவில்ல்யே?

  ReplyDelete
 5. From The Desk Of Rebel Ravi:

  சிறப்பான ஒரு கண்ணோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பதிவு இது. பாராட்டுக்கள்.

  தொடருங்கள் உங்கள் காமிக்ஸ் பயணத்தை.

  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  ReplyDelete
 6. தமிழ் காமிக்ஸ் பிதாமகர், திரு. ச. விஜயன், முதல் முறையாக வலை உலகத்தில், அவர் கருத்தை பதிந்து உள்ளார்... அதை படிக்க இங்கே சுட்டவும் http://comicology.blogspot.com/2008/11/lion-comics-205-tex-willer-nov.html

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

  ReplyDelete
 7. முதலை பட்டாளமே,

  பிரம்மாதம். இது போன்ற பயனுள்ள இடுகைகளை தான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.

  தொடருங்கள் உங்கள் பணியை. வாழ்த்துக்கள்.

  செயல் வீரர் செழியன்.

  ReplyDelete
 8. From The Desk Of Rebel Ravi:
  Sir,

  kindly post a new topic. we are waiting.

  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  ReplyDelete
 9. அன்புடையீர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு பிரத்யேக தமிழ் வலைபூ கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது http://ranicomics.blogspot.com

  வருகை தந்து, தங்கள் மேன்மையான கருத்துக்களை பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.

  ReplyDelete
 10. காமிக்ஸ் உலக நண்பர்களே,

  தமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.

  சற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.

  அன்புடன்,

  உலக காமிக்ஸ் ரசிகன்.

  Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

  ReplyDelete
 11. Vijayan Sir,
  You may increase the price to Rs.15 and if possible increase the number of pages also. If a person is ready to spend Rs.10 for a comic book,he will definitely be willing to spend Rs.15 also.So you need not hesitate to increase the price.
  Please do not decrease the size or the number of pages.
  -G.Nithish.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

கம்பேக் ஸ்பெஷல் முதல்...

லயன் காமிக்ஸ் லிஸ்ட்