நான் ரசித்துப் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்.

1. சைத்தான் துறைமுகம்

சிறு முன்னுரை: வட துருவத்தில் ஆர்க்டிக் கடல். அங்கே மேரி நவம்பர் என்ற கப்பல் ரை தட்டி நிற்கிறது. அந்த கப்பலில் ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற கேப்டன் பிரின்ஸ் குழுவினர் செல்கிறார்கள். கடும் பனிப் பொழிவுகளிடையே கேப்டன் பிரின்ஸ் எதிரிகளோடு மோதுகிறார். இறுதியில் கரை தட்டிய கப்பலில் சிக்கி இருந்தவர்களை காப்பாற்றி விடுகிறார். இந்த கதைக்கு உயிரோட்டமான் சித்திரமும் அற்புதமான கதைக் களமும் சிறப்பாக அமைந்துள்ளது. எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.

2. நரகத்தின் எல்லையில்

லா-டூபாங்க் துறைமுகத்துக்கு வரும் கேப்டன் பிரின்ஸ் குழுவினர், அவர்களுடைய முன்னாள் எதிரி வாங்-லு வின் சூழ்ச்சிக்கு இரையாகி சோங்-பே என்னும் கொடிய சிறைச்சாலைக்கு அனுப்பபடுகிறார்கள். அங்கு இகோர் என்னும் கொடியவனிடம் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். பின்னர் அந்த கொடிய நரகத்திலிருந்து ஜீவ மரணப் போராட்டத்திற்கு பின்னர் தப்பித்து வருகிறார்கள். அவர்களுடைய மரணப் போராட்டங்களை மிக ஆற்புதமாக ஓவியரும், கதாசிரியரும் தெளிவான நீரோட்டமாக உருவாக்கியுள்ளார்கள். இந்த கதையும் எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று.

Comments

  1. ப்ரூனோ ப்ரேசில்,

    நீங்க எதிரியா இருந்தாலும் கடமையில் தவறாத உங்க குணத்தை நாம் மிகவும் மெச்சுகிறோம்!

    ரொம்ப நாளா காணக்கிடைக்காத சைத்தான் துறைமுகம் அட்டைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி!

    இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் சிறு வயதில் படிக்கும் போது ரொம்பவே பயமுறுத்தியது. அதிலும் பார்க்ஸை எலிகள் கடித்துக் குதறும் கட்டமும், பார்க்ஸ் எலிஜாண்டோவின் கழுத்தை முறித்துப் பழிதீர்ப்பதும் அபாரம்!

    நரகத்தின் எல்லையில் கதையில் சகதியில் மாட்டிக்கொண்ட ப்ரின்ஸ் குழுவை கொசுக்களின் கூட்டம் தாக்கும்போது நம்மையே தாக்குவதுபோன்ற உணர்வு ஏற்படும்!

    நரகத்தின் எல்லையில் புத்தகத்துடன் ஒரு இலவச இனைப்பு கொடுத்தார்களே? அது உங்களிடம் இருக்கிறதா?

    இது தவிர பற்றி எரியும் பாலைவனம், ப்ரின்ஸ் இன் ஆஃப்ரிகா கதைகளும் எனக்குப் பிடிக்கும்!

    தொடரட்டும் உமது COUNTER-TERRORISM! அடித்து தூள் கிளப்புங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. ப்ருனோ பிராசீல் அண்ணே,

    சைத்தான் துறைமுகம் கதையில் ஒரு கட்டத்தில் எலிகளே உயிரை குடிக்கும் வில்லன்களாக தோன்றும். மிகவும் கொடுஉரமான கட்டம் அது. எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் பிரின்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று ஆகும்.

    ஆனால் கேப்டன் பிரின்ஸ் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என கேட்டால், அது மேகக் கோட்டை மர்மம் என்ற லயன் காமிக்ஸில் வரும் பிரின்சின் சிறுகதையே ஆகும். இந்த கதையில் பார்வை திறனை இழந்த ஒரு நண்பர் பிரின்சை காப்பாற்றும் கட்டம் மனதை நெகிழ வைக்கும் ஒன்றாகும்.

    அதைப் போலவே, கேப்டன் பிரின்ஸ் கதைகளில் மனதை தொட்ட தருணம் எது என்று கேட்டால் அது "நதியில் ஒரு நாடகம்" என்ற கதையில் பார்னேய்வை காட்டுவாசிகளிடம் இருந்து காப்பாற்ற பிரின்ஸ் துடிக்கும் தருணமே ஆகும்.

    அன்பரே, நீங்கள் உங்கள் பணியை மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முதலை பட்டாளம் சார்,

    பிரின்ஸ் கதைன்னாலே அது ஒரு மசாலா கலவை ஆகும். கொஞ்சம் நகைச்சுவை, நட்பு, மனிதாபிமானம், கூட்டு முயற்சியின் பலம், நிறைய பாசம், சமயோசித நடவடிக்கைகள், நேர்மை, மனித மனதின் சஞ்சலங்கள் என அது ஒரு சிறப்பான கலவை.

    நீங்கள் மேலே கூறிய இரண்டு கதைகளும் மிக மிக சிறப்பானவை என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

    இன்னும், இன்னும் கொஞ்சம் பெட்டரா உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. திரு. முதலை அவர்களிற்கு,

    என்ன ஆச்சர்யம், சில நாட்களின் முன் கழகத்தலைவரிடம் உரையாடிய போது இந்த சைத்தான் துறைமுகத்தில் எலியை தகரப்பேணியினுள் விட்டு பிடிபட்டவனின் வயிற்றில் சேர்த்துக்கட்டிவிட, விடுபட வழிதேடும் எலி மென்மையான வயிற்றுப்பகுதியை குதறி துளைத்து வெளியேறியதையும் மற்றும் ஒர் ஆங்கிலப்படம் பார்த்தது போன்ற கதையமைப்பு உடையதும் ஆன இந்த நாவல் எனக்கு மிகப்பிடித்த பிரின்ஸ் கதைகளில் ஒன்று என சிலாகித்திருந்தேன், மேகக்கோட்டை கதையில் இருண்டகுகை வழி கடக்கையில் வெளவால்கள் பாறைப்பரப்புகளில் தொங்கியவாறு இருக்க பிரின்ஸ் தேடிச்செல்லும் நபரே வழிக்காட்டியாக அவர்களை அழைத்து செல்லும் ''திகில்'' கட்டம் மறக்க முடியாதது. அதே போன்று பிரான்சின் தென்கடற்கரை ஓரமாக நிகழும் கதையொன்றில் இறுதியில் பிரின்ஸின் படகே சிதறடிக்கப்படும் இக்கதையின் வேகமும் எனக்கு பிடித்த ஒன்றே. இக்கதையின் தொடர்ச்சியாகவே படகொன்றை வேண்டி பிரின்ஸ் சைத்தான் துறைமுகத்திற்கு [ porte of madness] வருகிறார் என எண்ணுகிறேன்.


    அடுத்த பதிவில் உங்களிடமிருந்து பயங்கரமான தாக்குதலை எதிர்பார்க்க்கிறேன், உற்சாகத்துட்டன் தொடருங்கள்.

    ReplyDelete
  5. Hiya,

    nice concept that you ave started. even i liked these stories. infact, now iam asking you why have you left out the other 11 issues of captain prince in this list of favourite stories?

    the meaning of this is, that almost all of the stories of captain prince are better than any of the other comics works. it is similar to ask which part of the cake you like the most? the answer is we like the entire cake itself. captain prince stories are like that only.

    ReplyDelete
  6. முதலைப் பட்டாளத் தலைவரே!

    பிரின்சின் கதைகளில் எந்தவிதமான 'ஹீரோயிசமும்' இருக்காது. மேலும் மனிதாபிமானம் கதையின் கருவில் முக்கிய இடம் பெற்று இருக்கும். வெகு இயல்பான சித்திரங்களும், விறுவிறுப்பான கதையும் பிரின்ஸ் காமிக்ஸ்-களின் தனித்தன்மைகள். பிரின்ஸ், பொடியன் ஜின், குடிகார பார்னே ஆகியோரிடையே உள்ள பாச பிணைப்பு மற்ற ஹீரோகளின் கதைகளில் காண கிடைக்காத ஒன்று!

    'தலைவரிடமிருந்து' இல்லை ... இல்லை... 'செயல் தலைவரிடமிருந்து' (எல்லோருமே தலைவராகி விட்டால் செயல் வீரர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு விடாதா?) நிறைய நிறைய எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
  7. டேய் திருட்டுப் பயலே,

    இவ்வளவு நாள் இந்த புத்தகங்களையெல்லாம் யார் கண்ணுக்கும் காட்டாம வைச்சுருந்தே இல்ல. இருடி, உனக்கு இருக்கு.

    நாளைக்கு உன் வூட்டுல ரெயிட்தான்.

    ReplyDelete
  8. ப்ரூனோ ப்ரேசில் அண்ணே,

    ஒரு நாள் கழித்து வந்து பார்த்தல் ஷெர்லக் ஹோம்ஸ் போல நதி மூலம் - ரிஷி மூலம் எல்லாம் கண்டு பிடித்து பிரின்ஸ் கதையின் பிரெஞ்சு பதிப்பக அட்டை படத்தை வெளிஇட்டு உள்ளீர்களே? அற்புதம்.

    இதுக்கு தான் தலைபாடாக அடித்து கொண்டேன். காமிக்ஸ் டாக்டரிடம் பழக வேண்டாம் என்று. பாருங்கள் நீங்களும் ஆரம்பித்து விட்டீர்கள் இந்த துபறியும் வேலையை.

    ஹும்ம்ம் இனிமேல என்னவெல்லாம் நடக்க போகுதோ? ஏற்கனவே வலைபூ ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் ஒரு மாதிரியாக வெறித்த பார்வையுடன் இருப்பதாக கவிஞ்சர் ஜோஸ் கூறி உள்ளார். எதுக்கும் கொஞ்சம் மருத்துவரை (அதாவது, நல்ல மருத்துவரை) போய் பாருங்கள் அண்ணே.

    ReplyDelete
  9. dear mudhalai pattalam,

    very nice blog. kindly update it more frequently. good concept that you have started to blog your favourite stories.

    ReplyDelete
  10. அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  11. ப்ருனோ,

    சிறப்பான வலை பூவாக இதை கொண்டு வருவது உங்கள் கடமை.

    ReplyDelete
  12. Hi people,

    I can see you guys are having a ball in here ! Too bad I'm no computer whiz.. I'd have loved to post in tamil too ! Looking at the Prince episodes of the '90s brings back wonderfuly fond memories. "Naragathin Ellaiyil" happens to be my personal favorite ! I still remember the strong gut feel I had about the success of the Prince series - though the artwork did look very "funny" way back in 1985, when we were so used to normal stuff! I'm glad my faith wasn't misplaced. Have fun ...I'll be around again soon !

    S.Vijayan (Editor)

    ReplyDelete
  13. Dear Editor Sir, good to see you making your presence in the blogsosphere, and at places where our Tamil Comcis fans normally hang-out.

    Prince stories were indeed some best comic arts and storywork released by Lion/Muthu Comics from our publications. True, your gut feeling has made many a fans cherish them in our language.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  14. Dear Friends,
    I am B.R.Imayavan,a reader of lioncomics from Dharmapuri.
    I am new to lioncomics and collecting old books.I bought some old books
    from the publishers.And, I am searching for some old books.

    1. Minnum Maranam -Captain Tiger
    2. Thanga kallarai - Part 1
    3. Thanga kallarai - Part 2
    4. Mandira Mandalam
    5. Millenium Special 2000
    6. Ratha nagaram - Lion comics
    7. Mega special - captain Tiger(Muthu comics)

    Kindly Help me to get these books.
    Also,Give me contact addresses to get old books.
    I am eagerly awaiting your reply. Thanking You.


    Regards,
    B.R.Imayavan.

    ReplyDelete
  15. Dear Friends,
    I am B.R.Imayavan,a reader of lioncomics from Dharmapuri.
    I am new to lioncomics and collecting old books.I bought some old books
    from the publishers.And, I am searching for some old books.

    1. Minnum Maranam -Captain Tiger
    2. Thanga kallarai - Part 1
    3. Thanga kallarai - Part 2
    4. Mandira Mandalam
    5. Millenium Special 2000
    6. Ratha nagaram - Lion comics
    7. Mega special - captain Tiger(Muthu comics)

    Kindly Help me to get these books.
    Also,Give me contact addresses to get old books.
    I am eagerly awaiting your reply. Thanking You.
    _________________________________________
    EMAIL : imayavandpi@gmail.com ,
    malai_chamy@rediffmail.com
    _________________________________________

    Regards,
    B.R.Imayavan.

    ReplyDelete
  16. Dear Editor and Friends,

    My opinion on Book issues is Increasing the price to Rs.12/-.
    Kindly omit other options.

    Regards,
    B.R.Imayavan

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Prince kathaikal irunthal ennakku kodukkavum.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்