2015 ஒரு கண்ணோட்டம்






















பின் குறிப்பு -

அடுத்த வருடம் வரவிருக்கும் புத்தகங்கள் ஒகே ரகம் தான். டெக்ஸ் வில்லருக்கு அதிக இடம் ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிதான். டைகர் கதைகளை இனி வரும் காலங்களில் பிரித்து போடாமல் முடிந்தளவு ஒரே இதழாக வெளியிட முயற்சித்தால்?, மீண்டும் அனைத்து வாசகர்களையும் டைகர் கவர வாய்ப்புண்டு. இதே போன்று கமான்சே கதைகளும் இன்னும் ஏறக்குறைய பத்து கதைகளுக்கு மேல் உள்ளதால் அவருடைய கதைகளையும் இரண்டு, இரண்டாக போட்டு முடித்தால், எஞ்சியிருக்கும் கதைகளிலும், வாசகர்களிடமும் ஒருவித தொய்வு ஏற்படாமல் இருக்கக்கூடும். 

நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த டேஞ்சர் டயபாலிக்கை ஒரேடியாக ஓரங்கட்டியதுதான் வியப்பளிக்கிறது. இறுதியாக வந்த அவருடைய இரண்டு கதைகளும் நன்றாகவே இருந்தன. ஜில் ஜோர்டான், மற்றும் நிறைய கிராபிக் நாவலுக்கு வாய்ப்பளிக்கும் போது, ஜெஸ் லாங் நாயகருக்கும் இடையில் ஒரு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம்.  வித்தியாசமான துப்பறிவாளர் நான்கைந்து கதைகளில் வெளிவந்திருந்தாலும், அவருடைய கதைகள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தன.

இவரைப் போன்று ப்ரூனோ பிரேசிலுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். இவருடைய வெளிவராத கதையான sarabande a sacramento கதையை வெளியிட்டிருக்கலாம். அல்லது மர்மச் சவப்பெட்டிகள் கதையை மீண்டும் மறுபதிப்பு செய்திருக்கலாம்.  மாடஸ்டி கதைகள் மீண்டும் வருவது ஒகே தான். ஆனால், தனித்தனியாக இரண்டு இதழாக  வெளியிடாமல், இரண்டு கதைகளையும் ஒரே இதழில் வெளியிட்டால் நன்றாக ( ரொம்ப ) இருக்கும். இரண்டு இதழ்கள் இந்த மங்கைக்கு கொஞ்சம் ஓவர் டோஸ்.      புதிய வரவான பவுன்ஸர் வரவேற்கப்பட வேண்டிய நபரே. ஆனால், 
முதலில் ஒரு கதையில் அறிமுகப்படுத்தி விட்டு, வாசகர்களிடம் எவ்வித வரவேற்பைப் பெறுகிறார் என்பதைப் பார்த்து விட்டு அடுத்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம், அல்லது இரத்தப்படலம் ( one shot ) கதைகள் இன்னும் 
பல உள்ளன. அதில் ஒன்றிரண்டு வெளியிட முயற்சித்திருக்கலாம்.

அடுத்த வருட 12 மறுபதிப்பு பட்டியலில் ஸ்பைடர் கதைகளில் ஒன்றான விண்வெளிப் பிசாசு ( திகில் காமிக்ஸில் தொடராக வெளிவந்த கதை. இதுவரை மறுபதிப்பாகவும் வெளிவராத கதை) கதையும் வெளிவந்தால் அனைத்து ஸ்பைடர் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.            இதை போன்று இரும்புக்கை மாயாவி கதைகளில் ஒன்றான ஒற்றைக்கண் மர்மம் ( முத்து காமிக்ஸ் வாரமலரில் தொடராக வெளிவந்தது. இதுவும் இதுவரை மறுபதிப்பே செய்யப்படாத கதை ) இக்கதையையும் மறுபதிப்பு செய்தால் நிறைய படிக்காத, பார்த்திராத வாசகர்களுக்கு இக்கதை புதியதாகவும் இருக்கும். லாரன்ஸ் & டேவிட் கதைகள் பலவற்றை பல தடவை  மறுபதிப்பு செய்திருந்தாலும், காணமல் போன கடல் ( லயன் காமிக்ஸில் வெளிவந்தது ) இன்னும் மறுபதிப்பு செய்யப்படாமல் உள்ளது. இக்கதையும் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும். மற்றும் மஞ்சள் பூ மர்மம், பிளைட் 731 , தலைகேட்ட தங்கப்புதையல், சிறைப்பறவைகள், போன்ற கதைகள் எப்போது மறுபதிப்பாக  வெளிவந்தாலும் சலிக்கத் திகட்டாத கதைகளே. இவ்வருடத்துடன் ( 2015 ) இந்த நால்வருக்கும் ( ஸ்பைடர் & மாயாவி & ஜானி  நீரோ & லாரன்ஸ் & டேவிட் ) சற்று ஓய்வு ( நிரந்திர ஓய்வு அல்ல ) அளித்து  விட்டு, 2016 – ல் மற்ற கதை நாயகர்களான 
ரிப் கெர்பி, காரிகன், சார்லி சாயர் ,  விங் கமாண்டர் ஜார்ஜ், வேதாளர், மாண்ட்ரெக், சிஸ்கோ கிட் போன்றோர் கதைகளை மீண்டும் மறுபதிப்பு 
செய்ய முயற்சிக்கலாம், 


உதாரணத்திற்கு  கொலை வழக்கு மர்மம், வைரஸ் - x    , குரங்கு தேடிய கொள்ளையர் புதையல், நெப்போலியன் பொக்கிஷம், மர்மத் தலைவன், ஜூம்போ, முகமூடி வேதாளன், மடாலய மர்மம், ரோஜா மாளிகை இரகசியம், இருளின் விலை இரண்டு கோடி, வெடிக்க மறந்த வெடிகுண்டு, திக்குத் தெரியாத தீவில், இஸ்தான்புல் சதி, காணாமல் போன கலைப்பொக்கிஷம்,     10 டாலர் நோட்டு, கடத்தல் இரகசியம், ரயில் கொள்ளை, யார் குற்றவாளி,   ரத்த வெறியர்கள், பேய்க்குதிரை வீரன் போன்ற எண்ணற்ற சிறந்த கதைகள் இவர்களின் கதைகள் உள்ளன. அதில் சிலவற்றை மீண்டும்  மறுபதிப்பாக வெளியிட முயற்சித்துப் பார்க்கலாம்.                

Comments

  1. ஐயா,

    அருமையான பதிவு.

    ஆனால் மறுபதிப்புக்கான உங்களது பரிந்துரைகளில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள.

    ReplyDelete
    Replies
    1. எந்த விஷயத்தில் தான் சிக்கல்கள் இல்லை ஜி. எடிட்டர் மனது வைத்தால் எல்லாமே நிறைவேற்றப் படலாம்.

      Delete
  2. agree with your view on reprints. can u upload editors hot lines.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. எடிட்டரிடம் நேரிலும். தொலைபேசியிலும் இது போன்ற பல விஷயங்களை எடுத்துக்கூறியாகி விட்டது. பொருத்திருந்து பார்ப்போம்.

      Delete
  3. @ ப்ரூனோ ப்ரேசில்

    அருமையான அலசல்கள். நியாயமான கோரிக்கைகள். பலர் பார்த்திராத காமிக்ஸ்களை, பலபல ஆயிரத்திற்கு வாங்க தேடிக்கொண்டிருக்கும் அந்த பட்டியலை படித்ததும் எனக்கே 'ஜுவ்' என உள்ளது. கேட்டுவைத்த உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது நண்பரே...!

    நீங்கள் ஏஜெண்ட் என்பதால் ஒரு சந்தேகம் 2015 அட்டவணை கடையில் வாங்குபவர்களுக்கும் வழங்கப்படுமா...அல்லது சந்தாதாரர்களுக்கு மட்டுமா...?

    ReplyDelete
    Replies
    1. 2015 அட்டவணை சந்தாதாரர்களுக்கும். கடையில் வாங்குபவர்கள் அனைவருக்கும் உண்டு நண்பரே.

      Delete
  4. உங்கள் கருத்துகள் எனக்கும் உவப்பானவையே.உண்மையில் டயபோலிக் கதைகளின் சித்திரங்கள் கண்களுக்கு திகட்டாத விருந்தே...ஆனால் அக்கதைகளுக்கு வரவேற்பில்லை என்பது வருத்தமே....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்