எரிமலை தீவில் பிரின்ஸ்

சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனான லம்பார்டியும் கொலைக்கு சிறிதும் அஞ்சாத அவனது இரு கூட்டாளிகளான ஸ்டீபன் மற்றும் ஹம்மிங்ஸ் ஆகிய மூவரும் பிரின்ஸிக்கு சொந்தமான கழுகு கப்பலை கடத்தி செல்கின்றனர். அருகிலிருக்கும் தீவுகளில் ஒன்றான கோர்க்காவில் எரிமலை வெடித்து தீவே அழியப் போவதாக அரசாங்கம் விடுத்த எச்சரிக்கைய கேட்டு தீவு மக்கள் அனைவரும் கப்பல்களில் ஏறித் தப்ப முயல்கிறார்கள். இந்த நிலையில் அத்தீவிற்கு வந்தடையும் கடத்தல் பேர்வழிகள் தீவு மக்களை பிணைக் கைதிளாக்கி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்து தீவிலிருந்து தப்பிக்க திட்டமிடுகிறார்கள். அரசாங்கமும் இவர்களுடைய கோரிக்கைகளுக்கு பணிந்து அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருகிறது, இதனிடையே சுயநலம் காரணமாக கடத்தல் பேர்வழிகளுக்குள் கலகம் ஏற்பட இதில் தலைவன் பலியாகிவிடுகிறான் எஞ்சியிருக்கும் இவருக்குள் மோதல் ஏற்படுகிறது. பல இன்னல்களை கடந்து அங்கு வந்து சேரும் பிரின்ஸ்சும் மோதலில் கலந்து கொள்ள நேரிடுகிறது இந்த நேரத்தில் எரிமலையும் பயங்கரமாக வெடித்து கொதிக்கும் குழம்பாக தீவையே முற்றுகையிட பாய்ந்தோடி வருகிறது. எதிரிகளிடமும் தீக்கு...