Monday, December 24, 2012

புதுவை, புத்தகக்கண்காட்சி-2012


24.12.2012 திங்கள்கிழமை இன்று புதுவை எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில், இந்த வருடத்தில் வெளிவந்துள்ள லயன் & முத்து காமிக்ஸின்  ஸ்பெஷல் இதழ்களான 1.முத்து சர்ப்ரைஸ் ஸ்பெஷல் 2.லயன் நியுலுக் ஸ்பெஷல் 3.லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் 4.ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷல் 5.சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் 6.தங்கக் கல்லறை போன்ற புத்தகங்கள் ஸ்டால் எண்-39,ல் (இலக்கியம் புத்தக நிலையம் ) விற்பனைக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.                 
 (பின் குறிப்பு )                                                                                                                                     இந்த மாதம்(டிசம்பர்) வெளிவந்துள்ள ரிப்போட்டர் ஜானியின் மரணத்தின் நிசப்தம் (முத்து காமிக்ஸ்) புத்தகம்,

இந்த வாரத்திற்குள் புத்தகக் கண்காட்சியிலும்,கடைகளிலும் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ...                                  

Wednesday, November 28, 2012

துப்பறியும் வீரர் ரிப் கிர்பி
                                                                       
ப்ளாஷ் கார்டன், ஜங்கிள் ஜிம், பிலிப் காரிகன் போன்ற பிரபல சித்திரக் கதை நாயகர்களை உருவாக்கிய அலெக்ஸ் ரேமாண்ட். ரிப் கிர்பி எண்ணும் சித்திரக் கதை பாத்திரத்தை 1946-ம் ஆண்டு உருவாக்கினார். 
தனியார் துப்பறிவாளரான ரிப் கிர்பி, பல சவாலான வழக்குகளை, தனது அபார துப்பறியும் திறமையால் வெற்றி கண்டுள்ளார். நேரடிச் சண்டையிலும், துப்பாக்கி சுடுவதிலும் சிறந்து விளங்குபவர். கோல்ப் விளையாடுவது இவரது பிடித்தமான விளையாட்டாகும்.  
இவரது உதவியாளர் டெஸ்மாண்ட், ரிப் கிர்பியின் வலதுகரமாக உடன் இருந்து வருபவர். சிறந்த சமையல் கலை நிபுணராகவும் பணி புரிபவர். ரிப் கிர்பியின் உற்ற தோழி ஹனி டோரியன் ஆவார்.      
 1974 – வருடம் முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு ரிப் கிர்பி அறிமுகமானார். அதன் பிறகு மாலை மதி, இந்திரஜால், லயன், ராணி, மினி லயன், போன்றவற்றிலும் ரிப் கிர்பியின் சித்திரக் கதைகள் வெளி வந்துள்ளன. 
தமிழில் வெளிவந்துள்ள ரிப் கிர்பியின் சித்திரக் கதைகளின்  தலைப்புக்கள்!  முத்து காமிக்ஸ் – 
1.புதையல் வேட்டை 2.ரோஜா மாளிகை இரகசியம் 3.கொலை வழக்கு மர்மம்  4.பகல் கொள்ளை 5.மூன்று தூண் மர்மம் 6.பட்லர் படுகொலை 7.கள்ள நோட்டுக் கும்பல் 8.கடல் ராணி 9.விசித்திர குரங்கு 10.பிரமிட் ரகசியம் 11.கற்கோட்டைப் புதையல் 12.காணாமல் போன வாரிசுகள் 13.சூரிய சாம்ராஜ்யம் 14.யார் அந்தக் கொலையாளி 15.கையெழுத்து மோசடி 16.மரணக் குகை 17.நாலுகால் திருடன் 18.வழிப்பறிக் கொள்ளை 19.வாரிசு யார்? 20.ரெயின்போ விடுதி 
மாலை மதி காமிக்ஸ்-  
1.சுட்டவன் யார்? 2.இரண்டாவது தாடி 3.தோற்பதற்காகவே சூதாடிய மோசக்காரி 4.நாலுகால் போக்கிரி 5.கருப்பு முத்து 6.வேஷக்காரி 7.பாதி நோட்டு 8.காணாமற் போன கவர்ச்சி நட்சத்திரம் 
இந்திரஜால் காமிக்ஸ்- 
1.பழங்கலை நகரில் பகல் மயக்கம்  2.மாயமா? மர்மமா? 3.தங்கத் தாயத்து 4.கழுதையின் அடிச்சுவட்டிலே 5.அபேஸ் அல்பி 6.மர்ம மாளிகை 7.வாழும்பா பொக்கிஷம் 8.புதையல் தீவில் புரட்டு வேலை 9.மெழுகுப் பொறி 10.எறி மீன் விளைத்த புதையல் 11.கன்னி மாயக் கன்னி    
ராணி காமிக்ஸ் – 
1.வாராயோ வைர நெக்லஸ்  2.பூதம் காத்த புதையல்
மினி லயன் காமிக்ஸ்- 
1.காசில்லா கோடிஸ்வரன்  2.மாயஜால மோசடி
லயன் காமிக்ஸ்- 
 
1.பொக்கிஷம் தேடிய பிசாசு 2.opreation அலாவுதீன் 3.மரண மாளிகை 4.பாலைவன சொர்க்கம் 5.கானகக் கோட்டை 6.பலி கேட்ட புதையல் 7.வேங்கை வேட்டை 8.மரண மயக்கம் 9.ஒரு வெறியனைத் தேடி 10.வைரச் சிலை மர்மம் 11.இரத்தக் கரம் 12.கம்ப்யூட்டர் கொலைகள் 13.பனியில் ஒரு நாடகம் 14.தேவதையைத் தேடி 15.மன்மதனை மன்னிப்போம் 16.மாயமாய் போன மணாளன் 17.ப்ளாக் மெயில்  
18.கருப்பு விதவை 19.கன்னித்தீவில் ஒரு காரிகை  
இவைகள் தவிர தினமணிக் கதிர், குமுதம், தினத்தந்தி போன்ற நாளிதழ்களிலும் ரிப் கிர்பியின் சித்திரக் கதைகள் 
தொடர்கதைகளாக வெளிவந்துள்ளன.     

Friday, October 19, 2012

பாண்டிச்சேரியில் லயன் காமிக்ஸ்


பாண்டிச்சேரி (அ) புதுச்சேரி காமிக்ஸ் வாசகர்களுக்கு ஒரு இனிய செய்தி. இம் மாதம் (அக்டோபர் 2012 ) முதல் லயன் காமிக்ஸ் குழுமம் வெளியிடும் அனைத்து காமிக்ஸ் இதழ்களும், சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) இதழ் முதல். 

இனி காலந்தவறாமல் புதிய  லயன் & முத்து  காமிக்ஸ்கள் இதழ்கள் அனைத்தும் 

கீழே குறிப்பிட்டுள்ள கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

1. சிந்து சௌமியா டிரேடர்ஸ் 
எண்- 43 . ஏர்போர்ட் ரோடு 
 (குளினி ஸ்கூல் அருகில்) 
லாஸ்பேட்
 புதுச்சேரி - 8  
சிந்து சௌமியா ட்ரேடர்ஸ்

2.M.V. ஸ்டோர் 
எண் - 117
 மகாத்மா காந்தி ரோடு  
புதுச்சேரி-1 
M.V. Store3. அப்துல் ஹாமிது 
எண் - 144 மிஷன் வீதி ( நேரு வீதி சந்திப்பு) 
புதுச்சேரி -1 
Abdul Hameed Shop

மேலும் படிக்க மட்டும்  விரும்பும் வாசக, வாசகிகள் லாஸ்பேட்டையில் நடராஜ் லெண்டிங்  லைப்ரரியில் நமது லயன் & முத்து காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

Nadaraj Lending Library


நட்ராஜ் லெண்டிங் லைப்ரரி
64, பாரதியார் வீதி,
அசோக் நகர்,
லாஸ்பேட், புதுச்சேரி 8
(J.T.S. பஸ் ஸ்டாப் அருகில்)

Focus Book Shop.
204, Mission Street,
Pondicherry 605 001.

Friday, July 27, 2012

விண்வெளிப் பிசாசு - A Super Hero Spider Adventure

The crook from outerspace எண்ணும் அயல் நாட்டு சித்திரக்கதை தமிழில்,
1986- வருடம் திகில் காமிக்ஸில்  தொடராக (18-பாகம்) வெளிவந்தது, அப்போதைய காலகட்டத்தில் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சித்திரக் கதையாகும், இச்சித்திரக் கதையை முழுப் புத்தகமாக வெளியிட்டால்? சிறப்பாக இருக்கும்-
வேற்றுக் கிரகத்திலிருந்து பூமியை நோட்டமிட வந்திருந்த விண்வெளிப் பிசாசு ஒன்று, தற்செயலாக நீதிக் காவலன் ஸ்பைடர், விசித்திரன் என்கிற எத்தனோடு மோதிக் கொள்ளும் காட்சியைக் காண நேர்கிறது, அதில் ஆர்வம் கொண்ட விண்வெளிப் பிசாசு. இருவரையும் தனது விண்கலத்திற்கு கடத்திச் சென்று, இருவருடைய மனத்திரை மூலமாக. பூமியில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது. 
நினைத்த நேரத்தில், நினைத்த உருவத்திற்கு மாறும். அற்புத ஆற்றல் படைத்த அந்தப் பிசாசு. மேலும் பூமியில் வாழ்ந்த முன்னால் கொடியவர்களான ஜெஸ்ஸி ஜேம்ஸ்- பில்லி- ஜெங்கிஸ்கான்- ஹெர்குலஸ்- அல்-லூபரியான் போன்றவர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொண்டு- அவர்களைப் போன்ற தோற்றத்தில் தன்னை உருமாற்றிக் கொண்டு பூமியில் அட்டகாசம் புரியத் தொடங்குகிறது. 


  
ஒவ்வொரு கொடியவர்களின் உருவத்தில் தோன்றும் போதெல்லாம் விண்வெளிப் பிசாசின் அட்டகாசங்களை முறியடித்து, அதன் திட்டங்களை தோல்வியுறச் செய்கிறான் ஸ்பைடர். பூமியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து முறியடித்து வரும் ஸ்பைடரை, தனது அற்புத ஆற்றல் படைத்த கதிர் வீச்சீனால், ஸ்பைடரை ராட்சஸ அளவிற்கு வளரச் செய்து தனது அடிமையாக்கிக் கொள்கிறது விண்வெளிப் பிசாசு- பூமியைக் காப்பாற்ற போராடி வந்த ஸ்பைடும், விண்வெளிப் பிசாசின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொள்ள,  தொடர்ந்து  பூமியில்  தனது கைவரிசைக் காண்பிக்கத் தொடங்குகிறது அந்தப்பிசாசு.   அவன் பிடியிலிருந்து ஸ்பைடர் மீண்டானா?

 விண்வெளிப் பிசாசின் பிடியிலிருந்து பூமியை ஸ்பைடர்  மீட்டானா? 

இச்சித்திரக் கதையை உருவாக்கியவர்கள்- ஜெர்ரி சீகல்& ரிக் பன்.  
   

Wednesday, June 27, 2012

முத்து காமிக்ஸ் லிஸ்ட்1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி

2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி

3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி

4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி

5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்

6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி

7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்

8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ

10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி

11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்

12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ

13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்

15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ

16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி

17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்

18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ

19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ

21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்

22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி

23. கொலைக்கரம் - ஜானி நீரோ

24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ

25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி

26. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்

27. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்

28. புதையல் வேட்டை - ரிப் கெர்பி

29. C. I .D. லாரன்ஸ் - லாரன்ஸ் & டேவிட்

30. கடத்தல் ரகசியம் - சார்லி

31. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ

32. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி

33. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ

34. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் & டேவிட்

35. காணாமல் போன கைதி - ஜானி நீரோ

36. ஜானி இன்  ஜப்பான் - ஜானி நீரோ

37. ரோஜா மாளிகை ரகசியம் - ரிப் கெர்பி

38. ஒற்றன் வெள்ளை நரி - ஜார்ஜ்

39. குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் - சார்லி

40. மைக்ரோ அலைவரிசை -848 - ஜானி நீரோ

41. 10 டாலர் நோட்டு - ஜார்ஜ்

42. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி

43. நெப்போலியன் பொக்கிஷம் - ஜார்ஜ்

44. கொள்ளைக்கார பிசாசு - இரும்புக்கை மாயாவி

45. மடாலய மர்மம் - காரிகன்

46. வைரஸ் - X - காரிகன்

47. ரயில் கொள்ளை - சிஸ்கோ

48. விசித்திர வேந்தன் - கில்டேர்

49. காணாமல் போன கலைப்பொக்கிஷம் - காரிகன்

50. தீவை மீட்டிய தீரன் - மிஸ்டர் பென்

51. இஸ்தான்புல் சதி - சார்லி

52. கொலை வழக்கு மர்மம் - ரிப் கெர்பி

53. பேய்த்தீவு ரகசியம் - சார்லி

54. கல் நெஞ்சன் - கில்டேர்

55. திக்குத் தெரியாத தீவில் - சார்லி

56. வெடிக்க மறந்த வெடிகுண்டு - சார்லி

57. கடலில் தூங்கிய பூதம் - காரிகன்

58. முகமூடி வேதாளன் - வேதாளர்

59. பகல் கொள்ளை - ரிப் கெர்பி

60. ஜும்போ - வேதாளர்

61. இரத்த வெறியர்கள் - சிஸ்கோ

62. பில்லி சூனியமா? பித்தலாட்டமா? - காரிகன்

63. இருளின் விலை இரண்டு கோடி - மாண்ட்ரெக்

64. மூன்று தூண் மர்மம் - ரிப் கெர்பி

65. விண்வெளி வீரன் எங்கே? - வேதாளர்

66. தீ விபத்தில் திரைப் படச்சுருள் - காரிகன்

67. விசித்திரக் கடற் கொள்ளையர் - வேதாளர்

68. பேய்க்குதிரை வீரன் - சிஸ்கோ

69. பழி வாங்கும் பாவை - காரிகன்

70. பட்லர் படுகொலை - ரிப் கெர்பி

71. மர்மத் தலைவன் - மாண்ட்ரெக்

72. ஆவியின் கீதம் - சிஸ்கோ

73. ராட்சத விலங்கு - வேதாளர்

74. பனித்தீவின் தேவதைகள் - காரிகன்

75. முகமூடிக் கள்வர்கள் - வேதாளர்

76 கள்ள நோட்டுக்  கும்பல் - ரிப் கெர்பி

77. குறும்புக்கார சுறாமீன் - மாண்ட்ரெக்

78. வான்வெளி சர்க்கஸ் - காரிகன்

79. முத்திரை மோதிரம் - வேதாளர்

80. யார் குற்றவாளி? - சிஸ்கோ

81. விண்ணில் நீந்தும் சுறா - மாண்ட்ரெக்

82. பனிமலை பூதம் - காரிகன்

83. விசித்திர குரங்கு - ரிப் கெர்பி

84. வேதாளனின் சொர்க்கம் - வேதாளர்

85. முகமூடிக்  கொள்ளைக்காரி - காரிகன்

86. சூனியக்காரியின் சாம்ராஜ்யம் - வேதாளர்

87. மிஸ்டர்  பயங்கரம் - காரிகன்

88. பிரமிட் ரகசியம் - ரிப் கெர்பி

89. கப்பல் கொள்ளையர் - வேதாளர்

90. மாண்ட்ரேக் கொள்ளைக்காரனா? - மாண்ட்ரெக்

91.கற்கோட்டை புதையல் - ரிப் கெர்பி

92. மரண வலை - காரிகன்

93. கீழ்த்திசை சூனியம் - வேதாளர்

94. காணாமல் போன வாரிசுகள் - ரிப் கெர்பி

95. விபரீத வித்தை - மாண்ட்ரெக்

96. விசித்திர மண்டலம் - காரிகன்

97. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி

98. பூ விலங்கு - வேதாளர்

99. சூரிய சாம்ராஜ்யம் - ரிப் கெர்பி

100. யார் அந்த மாயாவி - இரும்புக்கை மாயாவி


101. சர்வாதிகாரி - வேதாளர்

102. பறக்கும் தட்டு மர்மம் - காரிகன்

103. உதவிக்கு வந்த வஞ்சகன் - மாண்ட்ரெக்

104. கையெழுத்து மோசடி - ரிப் கெர்பி

105. இரண்டாவது வைரக்கல் எங்கே? - காரிகன்

106. ஆழ்கடலில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

107. கானகக் கள்வர்கள் - வேதாளர்

108. உலகே உன் விலை என்ன? - மாண்ட்ரெக்

109. யார் அந்த கொலையாளி - ரிப் கெர்பி

110. கூண்டில் தூங்கிய சர்வாதிகாரி - வேதாளர்

111. இராணுவ ரகசியம் - காரிகன்

112. கொலைக்கு விலை பேசும் கொடியவன் - மாண்ட்ரெக்

113. மரணக்குகை - ரிப் கெர்பி

114. பயங்கரவாதி டாக்டர் செவன் - காரிகன்

115. நாலூகால் திருடன் - ரிப் கெர்பி

116. வழிப்பறிக் கொள்ளை - ரிப் கெர்பி

117. விபத்தில் சிக்கிய விமானம் - இரும்புக்கை மாயாவி

118. தலை நகரா? கொலை நகரா? - காரிகன்

119. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி

120. வாரிசு யார்? - ரிப் கெர்பி

121. விபரீத விளையாட்டு - ஜான் சில்வர்

122. ஒருநாள் மாப்பிள்ளை - சார்லி

123. விண்வெளி விபத்து - இரும்புக்கை மாயாவி

124. ரவுடிக்கும்பல் - ஜான் சில்வர்

125. விண்வெளி ஒற்றர்கள் - இரும்புக்கை மாயாவி

126. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்

127. யார் அந்த அதிஷ்டசாலி - சார்லி

128. சுறாமீன் வேட்டை - ஜார்ஜ்

129. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ

130. சூதாடும் சீமாட்டி - டான்

131. கணவாய்க் கொள்ளையர் - ஜிம்மி

132. தவளை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி

133. ஃபார்முலா திருடர்கள் - லாரன்ஸ் & டேவிட்

134. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்

135. நாடோடி ரெமி - ரெமி

136. கொலைகாரக் குள்ள நரி - இரும்புக்கை மாயாவி

137. திசை மாறிய கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்

138. களிமண் மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி

139. ஃப்ளைட்-731(மறு பதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்

140. பறக்கும் பிசாசு - இரும்புக்கை மாயாவி

141. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ

142. ப்ளாக் மெயில் - இரும்புக்கை மாயாவி

143. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்

144. வான்வெளிக் கொள்ளையர் - இரும்புக்கை மாயாவி

145. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி

146. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்

147. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ

148. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்

149. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

150. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ

151. நியூயார்க்கில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

152. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்

153. மாயாவிக்கோர் மாயாவி - இரும்புக்கை மாயாவி

154. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ

155. ஃபார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்

156. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி

157. இயந்திரப் படை - இரும்புக்கை மாயாவி

158. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ

159. பாம்புத் தீவு - இரும்புக்கை மாயாவி

160. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்

161. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ

162. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி

163. இரும்புக்கை மாயாவி - இரும்புக்கை மாயாவி

164. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ

165. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்

166. கொள்ளைக்காரப் பிசாசு - இரும்புக்கை மாயாவி

167. முத்து ஸ்பெஷல் - ஜெஸ்லாங்

168. கடல் பிசாசு - லூயிஸ்

169. தலை வாங்கும் சிலை - ரோஜர் மூர்

170. மாயாவிக்கொரு சவால் - இரும்புக்கை மாயாவி

171. இரத்த இரவுகள் - ஜெஸ்லாங்

172. சைத்தான் சிறுவர்கள் - இரும்புக்கை மாயாவி

173. பயங்கரப் பனிரெண்டு - மார்ஷல்

174. ஆகாயக் கல்லறை - ஜான் சில்வர்

175. வழிப்பறிப் பிசாசு - செக்ஸ்டன் பிளேக்

176. சம்மர் ஸ்பெஷல் - ஜெஸ்லாங்

177. இரத்தப் பாதை - ஜான் சில்வர்

178. சிங்கத்தின் குகையில் - டேவிட்

179. பச்சை வானம் மர்மம் - மேடிஸன்

180. ஆழ்கடல் அதிரடி - ஜான் சில்வர்

181. கண்ணீர் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

182. துரோகியைத் தேடி - ஜான் ஸ்டீல்

183. மிஸ்டர்  ஜோக்கர் - வெஸ்லேட்

184. மனித வேட்டை - ஜான் சில்வர்

185. தேவை ஒரு தோட்டா - வெஸ்லேட்

186. சார்லிக்கொரு சவால் - சார்லி

187. பிழைத்து வந்த பிணம் - ஜார்ஜ்

188. மைக்ரோ அலைவரிசை- 848 - ஜானி நீரோ

189. மரண மச்சம் - ஜார்ஜ்

190. பரலோகப் பயணம் - லாரன்ஸ் & டேவிட்

191. புயலோடு ஒரு போட்டி - இரட்டையர்கள்

192. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ

193. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி

194. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி

195. நாச அலைகள் - இரும்புக்கை மாயாவி

196. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி

197. பயந்து வந்த பயங்கரவாதி - லாரன்ஸ் & டேவிட்

198. காற்றில் கரைந்த கரன்ஸி - மாண்ட்ரெக்

199. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்

200. மர்மச் சுரங்கம் - சிஸ்கோ


201. காலத்தோடு கண்ணாமூச்சி - மாண்ட்ரெக்

202. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி

203. ஊடு கொலைகள் - ஷெர்லக் ஹோம்ஸ்

204. எமனின் எண்- 8 - மாண்ட்ரெக்

205. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ

206. உறை பனி மர்மம் - இரும்புக்கை மாயாவி

207. கொரில்லா வேட்டை - ஜார்ஜ்

208. இரத்த வாரிசு - சார்லி

209. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்

210. பேய்த்தீவு ரகசியம் - சார்லி

211. மிஸ்டர் சில்வர் - சில்வர்

212. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி

213. தலைவாங்கும் தலைவன் - மாண்ட்ரெக்

214. திசை மாறிய சுரங்கம் - ஷெர்லக் ஹோம்ஸ்

215. கொலைகாரக் கபாலம் - ஜார்ஜ்

216. மயான மாளிகை - ஷெர்லக் ஹோம்ஸ்

217. விசித்திரக் கொள்ளையர் - மாண்ட்ரெக்

218. சிங்கத்திற்கொரு சவால் - ஜார்ஜ்

219. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி

220. பழி வாங்கும் பனி - ஜேம்ஸ்பாண்ட்

221. கொலையுதிர் காலம் - மாண்ட்ரெக்

222. ஒரு கைதியின் கதை - சார்லி

223. மோசடி மன்னன் - ஜார்ஜ்

224. கொலை வள்ளல் - ஜான் சில்வர்

225. பச்சை நரிப் படலம் - ஜெஸ்லாங்

226. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர் 

227. நடு நிசிப் பயங்கரம் - மாண்ட்ரெக்

228. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி

229. மரணத்தின் முகம் - ஜெஸ்லாங்

230. மாண்டு போன நகரம் - ஜான் ஸ்டீல்

231. ஒரு வீரனின் கதை - பில் ஆடம்ஸ்

232. ஜானி இன் பாரிஸ் - ஜானி நீரோ

233. பாதாள பாசறை - மாண்ட்ரெக்

234. C. I. D லாரன்ஸ்(மறுபதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்

235. சூதாடும் சூறாவளி - ஜேம்ஸ்பாண்ட்

236. யார் அந்த மாயாவி(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி

237. கல்லறையில் ஒரு கவிஞன் - ஜெஸ்லாங்

238. காணாமல் போன ஜோக்கர் - டிரேக்

239. தவளை மனிதர்கள்(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி

240. புயல் படலம் - டைனமைட் ரெக்ஸ்

241. ஒரு மாந்திரீகனின் கதை - டாமி

242. தங்கக் கல்லறை - 1 - கேப்டன் டைகர்

243. தங்கக் கல்லறை - 2 - கேப்டன் டைகர்

244. பனியில் ஒரு பிணம் - சி.ஐ.டி. ராபின்

245. ரவுடி ராஜ்யம் - அலெக்ஸாண்டர்

246. பென்குயின் படலம் - ஜார்ஜ்

247. நரகத்தின் நடுவில் - சி.ஐ.டி. ராபின்

248. விசித்திர வில்லன் - பெர்ரி மேஸன்

249. குற்ற வருஷம் - 2000 - ரிப்போர்ட்டர் ஜானி

250. இரும்புக்கை எத்தன் - கேப்டன் டைகர்

251. திகில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி

252. ஒரு மர்ம இரவு - ஷெர்லக் ஹோம்ஸ்

253. பரலோகப் பாதை - கேப்டன் டைகர்

254. வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்

255. மரணத்தின் நிறம் கறுப்பு - பெர்ரி மேஸன்

256. மின்னல் ஜெர்ரி - ஜெர்ரி

257. இருளின் தூதர்கள் - ரிப்போர்ட்டர் ஜானி

258. ஹாரர் ஸ்பெஷல  - கருப்புக்கிழவி

259. மின்னும் மரணம் - கேப்டன் டைகர்

260. மாயக் குள்ளன் - மாண்ட்ரெக்

261. திகில் கனவு - ரிப்போர்ட்டர் ஜானி

262. மைடியர் மம்மி - சி.ஐ.டி. ராபின்

263. நள்ளிரவு நாடகம் - மாண்ட்ரெக்

264. வைர வேட்டை - சைமன்

265. சாத்தானின் சாட்சிகள் - ரிப்போர்ட்டர் ஜானி

266. உறைந்த நகரம் - ப்ரூனோ பிரேசில்

267. துரத்தும் தோட்டா - வெஸ்லேட்

268. திரில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி

269. கொலை அரங்கம் - ஜான் ஸ்டீல்

270. சிலந்தியோடு சதுரங்கம் - சி.ஐ.டி. ராபின்

271. காற்றில் கறைந்த பாலர்கள் - மாண்ட்ரெக்

272. புயல் பெண் - சி.ஐ.டி. ராபின்

273. பறக்கும் பாவைப் படலம் - ஜேம்ஸ்பாண்ட்

274. சிறையில் ஒரு புயல் - கேப்டன் டைகர்

275. நிழலும் கொல்லும் - ஜேம்ஸ்பாண்ட்

276. எத்தர் கும்பல் - 8 - மாண்ட்ரெக்

277. திகில் டெலிவிஷன் - ரிப்போர்ட்டர் ஜானி

278. மரண மண் - வெஸ்லேட்

279. பழி வாங்கும் புகைப்படம் - ஜார்ஜ்

280. சிவப்புத் தலை சாகசம் - ஷெர்லக் ஹோம்ஸ்

281. பழிவாங்கும் பிசாசு - சி.ஐ.டி. ராபின்

282. டாலர் வேட்டை - ஜார்ஜ்

283. திசை திரும்பிய தோட்டா - கேப்டன் டைகர்

284. ஆழ் கடல் அதிசயம் - மாண்ட்ரெக்

285. மரண ரோஜா - ஜார்ஜ்

286. ஜன்னலோரம் ஒரு சடலம் - சி.ஐ.டி. ராபின்

287. தோட்டா தலைநகரம் - கேப்டன் டைகர்

288. கொலைப் பொக்கிஷம் - சி.ஐ.டி. ராபின்

289. மீண்டும் முதலைகள் - ப்ரூனோ பிரேசில்

290. யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ

291. குள்ள நரிகளின் இரவு - ப்ரூனோ பிரேசில்

292. அமானுஷ்ய அலைவரிசை - மார்ட்டின்

293. சரித்திரத்தை சாகடிப்போம் - மார்ட்டின்

294. இரத்தக் கோட்டை - கேப்டன் டைகர்

295. மேற்கே ஒரு மின்னல் - கேப்டன் டைகர்

296. தனியே ஒரு கழுகு - கேப்டன் டைகர்

297. மெக்சிகோ பயணம் - கேப்டன் டைகர்

298.புதையல் பாதை - ரேஞ்சர் ஜோ

299. செங்குருதிப் பாதை - கேப்டன் டைகர்

300. புயல் தேடிய புதையல் - கேப்டன் டைகர்


301. திசை திரும்பிய பில்லி சூன்யம் - ரிப்போர்ட்டர் ஜானி

302. மரண ஒப்பந்தம் - சி.ஐ.டி. ராபின்

303. பேழையில் ஒரு வாள் - மார்ட்டின்

304. காலத்திற்கொரு பாலம் - மார்ட்டின்

305. மரண மாளிகை - ரிப்போர்ட்டர் ஜானி

306. ஒரு திகில் திருமணம் - ஜார்ஜ்

307. காற்றில் கரைந்த கதாநாயகன் - ரோஜர் மூர்

308. சித்திரமும் கொல்லுதடி - சி.ஐ.டி. ராபின்

309. கதை சொல்லும் கொலைகள் - ஜான் ஸ்டீல்

310. பொன்னில் ஒரு பிணம் - மார்ட்டின்

311. நொறுங்கிய நாணல் மர்மம் - ஜூலியன்

312. நிழல் எது? நிஜம் எது? - மாண்ட்ரெக்

313. விண்ணில் ஒரு குள்ள நரி - ஜார்ஜ் 

314. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல் 

315. சிகப்புக் கன்னி மர்மம்- ஜெரோம்

316.தற்செயலாய் ஒரு தற்கொலை- ஜெரோம்

317. ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷல்

318. தங்கக் கல்லறை (மறுபதிப்பு)

319. மரணத்தின் நிசப்தம்- ரிப்போட்டர் ஜானி

320. நெவர்  ஃபிபோர் ஸ்பெஷல்

321. துரத்தும் தலைவிதி - லார்கோ வின்ச்

322. இரத்தத் தடம் - கேப்டன் டைகர்

323. ஆதலால் அதகளம் செய்வீர் - லார்கோ வின்ச்

324. ஒரு சிப்பாயின் சுவடுகளில் -  நிகோ

325. சாக மறந்த சுறா - ப்ரூனோ பிரேசில்

326. நினைவுகளைத் துரத்துவோம் - ரிப்போர்டர் ஜானி

327. காலத்தின் கால் சுவடுகளில் - சாகஸ வீரர் ரோஜர்

328. அட்லாண்டாவில் ஆக்ரோஷம் - கேப்டன் டைகர்

329. கப்பலுக்குள் களேபரம் - ப்ளூகோட் பட்டாளம்

330. வேட்டை நகரம் வெனீஸ் - லார்கோ

331. காதலிக்கக் குதிரையில்லை -  ப்ளூகோட் பட்டாளம்

332. ஒரு நிழல் நிஜமாகிறது - லார்கோ

333. சிறைக்குள் ஒரு சடுகுடு - ப்ளூகோட் பட்டாளம்

334. நிழலோடு நிஜ யுத்தம் - மாடஸ்டி ப்ளைஸி

335. நயகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)

336. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)

337. பெய்ரூட்டில் ஜானி - ஜானி நீரோ (மறுபதிப்பு)

338. வேங்கைக்கு முடிவுரையா? ( கேப்டன் டைகர் )

339. எத்தர்களின் எல்லை ( சி.ஐ.டி. ராபின் )

340. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)

341. ஃப்ளைட் - 731 - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)

342. டாலர் ராஜ்யம் - லார்கோ வின்ச்

343. மின்னும் மரணம் ( கேப்டன் டைகர் ) (மறுபதிப்பு)

344. விண்ணில் ஒரு வேங்கை ( லாரா )

345. மலைக்கோட்டை மர்மம்  (மறுபதிப்பு) - ஜானி நீரோ

346. கனவின் குழந்தைகள் - மார்ட்டீன்

347. விடுதலையே உன் விலை என்ன? ( கிராபிக் நாவல் )

348. தங்கம் தேடிய சிங்கம் - ப்ளூகோட் பட்டாளம்

349. துணைக்கு வந்த தொல்லை - ஜில் ஜோர்டான்

350. மாறிப்போன மாப்பிள்ளை - சிக்பில்

351. ஏழு நாட்களில் எமலோகம் - கர்னல் கிளிப்டன்

352. விடிய விடிய விஞ்ஞானி - லியானார்டோ

353. இதுவொரு ஊதா உலகம் - ஸ்பர்ப்

354. உறைபனி மர்மம் - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)                                      

355. காலனின் காலம் - ரிப்போர்டர் ஜானி                                                                          

356. சிறைப்பறவைகள் - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)                                

 357. சாகாவரத்தின் சாவி - தோர்கல்                                                                                

 358. மஞ்சள் நிழல் - சாகஸ வீரர் ரோஜர்                                                                        

 359. மூளைத்திருடர்கள்  - ஜானி நீரோ (மறுபதிப்பு)                                                        

 360. பாதைகளும் பயணங்களும் - யுத்தக்கதை                                                              

361. மூன்றாவது உலகம் - தோர்கல்                                                                                      

362. மரணத்தின் முத்தம் - மாடஸ்டி பிளைஸி

363. சூ மந்திரி காலி ( மதியில்லா மந்திரி)                                                                      

364. பாம்புத்தீவு -   இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)

365. சட்டமும் சுறுக்குக் கயிறும் (மாடஸ்டி ப்ளைஸி)

366. மஞ்சள் பூ மர்மம் (லாரன்ஸ்&டேவிட்) மறுபதிப்பு

367. நில் சிரி திருடு ( கர்னல் கிளிப்டன் )

368. கடன் தீர்க்கும் நேரமிது ( லார்கோ வின்ச்)

369. நாச அலைகள் -  இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)

370. தேவதையைக் கண்டேன் (ஸ்மர்ப்ஸ்)

371. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ (மறுபதிப்பு)

372. நின்று போன நிமிடங்கள் - ஜூலியா

373. என் பெயர் டைகர் - டைகர் (கலர்)

374. என் பெயர் டைகர் - டைகர் (ப்ளாக் & ஒயிட்)

375. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)

376. இனி எல்லாம் மரணமே - மார்ட்டின்

377. சுட்டி பயில்வான் பென்னி - பென்னி

378. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)

379. காணமல் போன கைதி - ஜானி நீரோ (மறுபதிப்பு)

380. கான்க்ரீட் கானகம் - லார்கோ வின்ஞ் (மறுபதிப்பு)

381. ஒரே ஒரு ஊரிலே - ஸ்மர்ப்ஸ்

382. வேதாள வேட்டை - ராபின்

383. ஜீனியஸ் உறங்குவதில்லை - லியார்னடோ

384. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் (மறுபதிப்பு)

385. வானம் தந்த வரம் - ஸ்மர்ப்ஸ்

386. சத்தமின்றி யுத்தம் செய் - ட்யுராங்கோ

387. நானும் சிப்பாய் தான் - ப்ளூகோட் பட்டாளம்

388. இயந்திரத்தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)

389. என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு - மதியில்லா மந்திரி

390. C.I.D லாரன்ஸ் - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)

391.கழுகு மலைக் கோட்டை (மாடஸ்டி) மறுபதிப்பு

393. மிஸ் அட்டகாசம் (பென்னி)

394. கொலைக்கரம் (ஜானி நீரோ) மறுபதிப்பு

395. சதுரங்கத்திலொரு சிப்பாய் (லார்கோ வின்ஞ்)

396. கர்னலுக்கொரு சிறுத்தை (கிளிப்டன்)

397. தலைகேட்ட தங்கப் புதையல் (லாரன்ஸ்) மறுபதிப்பு

398. ஒரு சிலந்தியின் வலையில் (ரிப்போர்ட்டர் ஜானி)

399. தங்க விரல் மர்மம் (ஜானி நீரோ) மறுபதிப்பு

400. விடை கொடு ஷானியா ( ஷானியா)

401. சில்வர் ஸ்பெஷல் (ஜான் சில்வர்)

402. இரத்தக் கோட்டை (கேப்டன் டைகர்) மறுபதிப்பு

403. டாக்டர் பொடியன் (ஸ்மர்ப்)

404. கனவு மெய்பட வேண்டும் (தோர்கல்)

405. ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார் (சிக்பில்)

406. மிஸ்ட்ரி ஸ்பெஷல் (மார்ட்டீன்)

407. லேடி S (ஷானியா)

408. விண்ணில் ஒரு பொடியன் (ஸ்மர்ப்)

409. மர்மத்தீவில் மாயாவி (மாயாவி) மறுபதிப்பு

410. கடவுளரின் தேசம் (தோர்கல்)

411. சேற்றுக்குள் ஒரு சடுகுடு (ப்ளூகோட் பட்டாளம்)

412. மரமக் கத்தி (ரோஜர்) மறுபதிப்பு

413. வேட்டையாடு விளையாடு - ஸ்மர்ப்

414. தோட்டா தலைநகரம் - கேப்டன் டைகர் (மறுபதிப்பு)

415. பூமிக்கொரு போலீஸ்காரன் (லேடி எஸ்)

416. நண்பனுக்கு நாலுகால் (சிக்பில்)

417. கொலைகாரக் காதலி (சிக்பில்) மறுபதிப்பு)

418. மெல்லத் திறந்தது கதவு (மார்ட்டின்)

419. மவுனமாயொரு இடி முழக்கம் (ட்யுராங்கோ)
விடு பட்ட சித்திரக் கதைகள் - 


1. திசை மாறிய கப்பல்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ் & டேவிட் 

2.இரண்டாவது வைரக்கல் எங்கே ? (மறுபதிப்பு) - காரிகன் 

3. காணாமல் போன கைதி (மறுபதிப்பு) - ஜானி நீரோ 

4. பார்முலா திருடர்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ்& டேவிட் 


Monday, May 14, 2012

நியுயார்க்கில் மாயாவி
1970- களில் சித்திரக் கதைகளை வாசித்த அனைத்து சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் இரும்புக்கை மாயாவி நன்கு பரிச்சயமானவர். மாயாவியின் இரும்புக் கரம் மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் முழுவதும் மறைந்து, இரும்புக்கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இந்த அபூர்வ சக்தியைக் கொண்டு, பல விசித்திர ஜந்துக்களையும், பல விசித்திர வில்லன்களையும் அழித்து, நாட்டை பல முறை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். ஆனால்? ஆரம்பக் காலத்தில் இரும்புக் கை மாயாவியே நாட்டிற்கே பெரும் அச்சுருத்தலாக விளங்கியுள்ளார். அதன் கதை தான் இந்த நியுயார்க்கில் மாயாவி ...புரபஸர் பாரின்ஜரின் ஆய்வுக் கூட, விபத்தொன்றில் சிக்கிக் கொள்ளும், அவரது உதவியாளர் கிராண்டேலுக்கு(மாயாவி) எதிர்பாராத விதமாக அரூரபமாகும் சக்தி கிடைக்கப் பெறுகிறது. அதன் சக்தியைக் கொண்டு, உலகை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, முதலில் ஒரு வங்கியை கொள்ளையடித்தும், பின்னர் தொடர் விபத்துக்களை, நிகழச் செய்தும், அதன் மூலமாக பொது மக்களையும், அரசாங்கத்தையும் அதிர்ச்சியடையச் செய்கிறார் மாயாவி. இறுதியாக தனது அற்புத ஆற்றலை உலகிற்கு நிரூபிப்பதற்காக, நியுயார்க் நகரில் மிகச் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, பனிரெண்டு மணி நேரத்திற்குள் நகரத்தை தகர்க்கப் போவதாக அரசாங்கத்தை மிரட்டுகிறார்.அரசாங்கமும் உடனடியாக நகர மக்களை வெளியேற்றி விட்டு, ராணுவம் மூலமாக மாயவியை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சிக்கின்றனர். நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்குத் தேவையான மின்சாரத்தையும் மாயாவிக்கு கிடைக்காமல் செய்கின்றனர். இதற்கிடையே மாயாவியை நன்கு அறிந்தவர் புரபஸர் பாரின்ஜர். எப்படியாவது மாயாவியின் செயலைத் தடுத்து, நியுயார்க் நகரை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக. இன்ஸ்பெக்டர் லின்ச்சுடன் நியுயார்க் வந்து சேர்கிறார். வெடிகுண்டு வெடிக்க, குறுகிய கால அவகாசமே இருக்கும் தருணத்தில், மாயாவியின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, வெடிகுண்டின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சிக்கிறார் புரபஸர் பாரின்ஜர். வெடிகுண்டையும், மாயாவியையும் கண்டு பிடித்து, நியுயார்க் நகரை அழிவிலிருந்து புரபஸர் காப்பற்றினாரா?மின்சாரம் கிடைக்காமல் மாயாவி நியுயார்க் நகரை விட்டு தப்பிச் சென்றாரா?  என்பதே கதை.இந்த விறு விறுப்பான சித்திரக் கதையை உருவாக்கியவர்கள் –

கென் பல்மர் & ஜீசஸ் ப்ளாங்கோ.

Wednesday, April 11, 2012

சாகச வீரர் சார்லி சாயர்

1943- ம் வருடம் ராய் கிரேன் என்பவர். சார்லி சாயர் என்கிற சித்திரக்கதை பாத்திரத்தை உருவாக்கினார். சார்லி சாயரின் இயற்பெயர்- ஜான் பஸ் சாயர் என்பதாகும். இவருக்கு கிறிஸ்டி ஜேம்சன் என்கிற மனைவியும், பெப்பர் சாயர் என்கிற மகனும், ராஸ்கோ ஸ்வீனே என்கிற நண்பரும் உள்ளனர். யதார்த்தமான சித்திரக் கதைகள் மூலமாக பல வாசகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.


மிகச் சிறந்த சாகச வீரரான சார்லி சாயர். இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், கடற்படை விமானியாக, பசிபிக் பெருங்கடலில் நடந்த யுத்தத்தில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு எண்ணைய் நிறுவனத்தில் பழுது பார்க்கும் நிபுணராக பணியாற்றினார்.


1950 –ல் மீண்டும் கப்பற்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, 1960-ம் ஆண்டில் நடந்த வியட்நாம் போரில் கலந்து கொண்டவர். போருக்குப் பின்னர் தனியார் துப்பறிவாளராக மாறி, பல வழக்குகளை, தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார்.1974- ம் வருடம் முதல், முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு சார்லி சாயர் அறிமுகமானார். அதன் பின்னர் இந்திரஜால் காமிக்ஸ்,ராணி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், மூலமாகவும் வெளிப்பட்டுள்ளார்.


தமிழில் வெளிவந்துள்ள சார்லி சாயரின் சித்திரக்கதைகளின் தலைப்புக்கள்- முத்து காமிக்ஸ்.


1.கடத்தல் ரகசியம் 2.சிறை மீட்டிய சித்திரக் கதை 3.குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் 4.இஸ்தான் புல் சதி 5.பேய்த் தீவு ரகசியம் 6.திக்குத் தெரியாத தீவில் 7.வெடிக்க மறந்த வெடி குண்டு 8.ஒரு நாள் மாப்பிள்ளை 9.யார் அந்த அதிர்ஷ்டசாலி 10.சார்லிக்கொரு சவால் 11.இரத்த வாரிசு 12.ஒரு கைதியின் கதை.


இந்திரஜால் காமிக்ஸ்.

1.கழுகுக் கூடு 2.பேய் மனை 3.ராஜாளி ராஜா வயல் 4.கம்பி நீட்டிய கள்ளி 5.அதிபதி கொலைச் சதி 6.எத்தனுக்கு எத்தன் 7.அணுகுண்டு அடாவடியர்
8.பழி சுமந்த பரம சாது 9.கந்தர்வ தீவினிலே 10.வல்லாயுத சடுகுடு
11.அறுந்த நரம்புகள்

ராணி காமிக்ஸ்.

1.நான் யார்?

மேகலா காமிக்ஸ்

1.நடுக்கடலில்

மினி லயன்

1.ஒரு கள்ளப் பருந்தின் கதை 2.ஒரு காவலனின் கதை

இவை தவிர  ...

1.பேய்த் தீவு ரகசியம், 2.சிறை மீட்டிய சித்திரக் கதை மறு பதிப்பாகவும் வெளிவந்துள்ளன.