Posts

Showing posts from October, 2013

லயன் தீபாவளி மலர் ஒரு கண்ணோட்டம்

Image
       1. தீபாவளி மலர் 1.  இரும்பு மனிதன் (ஆர்ச்சி) 2. துப்பறியும் கம்ப்யூட்டர் (துப்பறியும் கம்ப்யூட்டர் ஜானி)              லயனில் வெளிவந்த முதல் மலர், பெரிய சைஸில்,                இரு வண்ணத்தில் வெளிவந்து மகத்தான                      வெற்றி பெற்ற இதழ், வெளிவந்த வருடம் – 1984.                             2.  தீபாவளிமலர்        1. தலைவாங்கிக் குரங்கு (டெக்ஸ் வில்லர்) இந்த இதழ் மூலமாகத்தான் டெக்ஸ் வில்லர் அறிமுகமானார்.   கிட், டைகர், கார்ஸன் ஆகிய மூவரும் இல்லாமலும்,  அதிக துப்பாக்கி வெடிச்சத்தம் இல்லாமலும், அழகான  துப்பறியும் கதையாக அமைந்திருந்தது.   வெளிவந்த வருடம் – 1985.  3. தீபாவளி மலர்              பாக்கெட் சைஸில், ஆறு சித்திரக்கதைகளுடன்  வெளிவந்த இதழ்.  1.தவளை எதிரி (ஸ்பைடர்)    2.மரண இயந்திரம் (மாடஸ்டி)  3.இரத்தக் கண்ணீர் (நார்மன்)  4.திடீர் துரோகி (ஜார்ஜ்&டிரேக்)  5.ஆழ்கடல் யுத்தம் (லாரன்ஸ்&டேவிட்)  6.பனி பூதம் (ஆர்ச்சி)    வெளிவந்த வருடம் – 1986.  4.  தீபாவளி மலர்             

மாலைமதி காமிக்ஸ் லிஸ்ட்

Image
வார இதழ்களும், மாத முழுநீள   நாவல்களும்  வெளியிட்டு வந்த குமுதம் நிறுவனத்தினர், தங்களது நிறுவனத்தில் ஒன்றான மாலைமதியில் ,  உள்ளூரில்(லோக்கல்) உருவான  சித்திரக்கதைகளை மட்டும்  வெளியிட்டுக் கொண்டிருந்தபோது,  சற்று மாறுதலுக்காக 1975- ம் வருடத்தில் மேலை நாட்டுச் சித்திரக்கதைளை மாலைமதி AFI காமிக்ஸ் என்று அறிமுகப்படுத்தி வெளியிட்டனர்.  பிலிப் காரிகன்,  ரிப் கிர்பி,  ஜானி ஹாஸார்ட், சிஸ்கோ கிட் போன்ற சித்திரக்கதை நாயகர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிட்டனர். முதலில் மாதம் ஒரு முறையாகவும். பிறகு மாதம் இரு முறையாகவும் வெளிவரத் தொடங்கியது.   இதற்க்கு  போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால்  1.10. 1976-ம் வருடத்துடன் நடிகர் கடத்தப்பட்டார் என்ற இதழுடன் தங்களது காமிக்ஸ் சகாப்தத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் மாலைமதியில் முழு நீள நாவல்களை மட்டும் வெளியிடத் தொடங்கினர்.   1975  முதல் 1976 வரை வெளிவந்துள்ள மாலைமதி ( AFI)  சித்திரக்கதைகளின் தலைப்புக்களும், அதன் முகப்பு அட்டை படங்களும்.   1 .குகையில் ஒரு பெண்(சிஸ்கோ)  2 .மோசடி விடாதே(சிஸ்கோ)  3. மொராக்கோ மர்மம்(காரிகன்)  4. கொலை