Posts

Showing posts from August, 2019

பைகோ கிளாசிக்ஸ்!

Image
  பைகோ பிரசுரம் : பூந்தளிர் , பூந்தளிர் அமர் சித்திரக்கதைகள் ஆகிய இதழ்களை வெளியிட்டதோடு இல்லாமல் , உலக நாடுகளில் உள்ள பழம்பெரும் இலக்கியங்களைச் சித்திரக்கதையாக வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தது ! சமூகத்தில் விஞ்ஞானக் கருத்துக்களை விளையாட்டாக விளக்கும் புதுமையும் புரட்சியுமான , இந்தியாவிலேயே முதன்முதலாகப் படங்கள் மூலம் அறிவியல் விஷயங்களைப் போதிக்கும்  சை ஃபன் என்ற மாதமிருமுறை பத்திரிக்கையை ஆங்கிலத்திலும் , ஹிந்தியிலும் வெளியிட்டு வருகிறது . இவற்றுக்குக் குழந்தைகளிடையே கிடைத்த வரவேற்புதான் பைகோ கிளாசிக் உருவானதற்கான காரணத்தை விளக்குகிறது !  சைஃபன் காமிக்ஸ் (உதாரணப் படங்கள்)          ஆங்கிலம் , ஹிந்தி , மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட இவ்விதழ் 1987 செப்டம்பர் மாதம் முதல் தமிழில் வெளியானது . இதழ்களில் தொடர்கதைகளாக வந்தவற்றைத் தொகுத்து வெளியிடும் மரபினைப் போல் , சித்திரக்கதை வடிவம் தமிழுக்கு அறிமுகமான பின்பு , தமிழில் வெளியான புனை கதைகள் சித்திரக்கதைகளாக மாற்றம் பெறத் தொடங்கின . சான்றாக தமிழ்வாணன் எழுத