Posts

Showing posts from April, 2014

கானக வீரன் டார்ஜான்

Image
 ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் வெற்றி பெற்ற டார்ஜான் கதைகள் ஏனோ தமிழில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஒரு சில காமிக்ஸ் பத்திரிக்கைகள் மட்டும் டார்ஜான் சித்திரக்கதைகளை தமிழில் வெளியிட்டுள்ளனர். அதில் உள்ள ஒரு கதை உங்கள் பார்வைக்காக.   பின் குறிப்பு...               இம் மாதத்து புத்தகங்கள் இன்று மாலை முதல் வழக்கமாக விற்பனையாகும் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.                                                                                

சீக்ரெட் ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ்

Image
                                                                  ராணி காமிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த திரு, எஸ். ராமஜெயம் அவர்கள் அந்நிறுவனத்திலிருந்து விலகிய பின்னர் அவர்  ரகசிய உளவாளி ஜேம்ஸ் பாண்டுக்கு என்று தனியாக சீக்ரெட் ஏஜெண்ட்  ஜேம்ஸ் பாண்ட்   காமிக்ஸ் என்ற பெயரில் ( தமிழ் & ஆங்கிலம்)  1988 – ல் ஆரம்பித்தார். தொடர்ந்து ( தமிழில் ) ஆறு இதழ்கள் மட்டும் வெளிவந்ததோடு இந்த இதழும் நிறுத்தப்பட்டு விட்டது. அவர் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியலையும் & முகப்பு அட்டை படங்களையும், வெளிவந்த வருடத்தையும் கீழே தொகுத்துள்ளேன். 1                         1.    அதிரடி உளவாளி ( மே, 1988 ) 2                       2.    ராக்கெட் ரகசியம் ( ஜூன், 1988 ) 3                      3.    சீனப் புதிர்        ( ஜூலை, 1988 ) 4                      4.    மர்மக் கோட்டை    ( ஆகஸ்ட், 1988 ) 5                   5.    பறக்கும் குண்டு   ( செப்டம்பர், 1988 ) 6    6.    பாலைவனப் போர்   ( அக்டோபர், 1988 )             

இம்மாத புதிய புத்தகங்கள்

Image
                                             மே மாத வெளியீடுகள்!   சில கருத்துக்கள்:  ஹாட் n கூல் ஸ்பெஷல் - பார்ட் 2 போல இம்மாதக் கதைகள்  வந்துள்ளது. ஒன்று அதிரடியிலும் மற்றொன்று காமெடியிலும்  கலக்கக் கூடியது. இதற்கு முன்பு வெளிவந்திருந்த லக்கிலுக்  கதைகளை விட இம்மாதம் வெளிவந்துள்ள எதிர் வீட்டீல் எதிரிகள்  கதை பரவாயில்லை ரகமாக உள்ளது. அடுத்த மாத வரவுகளில்  டெக்ஸ் வில்லர் கதையும் மறுபதிப்பாக வெளிவரும்  முகமற்ற கண்கள் ( ப்ரூனோ பிரேசில்) கதையும் எதிர்பார்க்க  வைக்கின்றது. தோர்கல் கதைக்கு பதில் xiii mystry வரிசையில்  வந்துள்ள ஸ்டீவ் ரோலாண்டின் காலனின் கைக்கூலியை வெளியிட்டுருக்கலாம். இக்கதையை தள்ளிப் போட்டது  வியப்பளிக்கிறது. சூப்பர் சிக்ஸ் அறிவிப்புகள் ஏனோ அதிக  ஆர்வத்தை கிளரவில்லை! 30 ஆண்டு மலர் கதை செலக்‌ஷன்  ஒகே தான். ஆனால் அதில் ரின் டின் கேன் கதை செலெக்‌ஷனைத்  தவிர. மற்ற அனைத்து கதைகளும் சூப்பர் ரகமே. இதற்கு முன்பு வெளிவந்திருந்த கம்பளத்தில் கலாட்டா & ஒரு கழுதையின் கதை   ஆகியஇரண்டு சிக்பில் கதைகளுமே