Monday, September 1, 2014

வேதாள மாயாத்மா




                                      



சித்திரக்கதைகளில் வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவியை அறியாதவர்கள் இருப்பது கடினமே! 1936 - ம் ஆண்டில் லீ ஃ பாக் என்பவரால் வேதாளர் உருவாக்கப்பட்டவர். உலகம் முழுவதும் உள்ள   பல சித்திரக்கதை நாயகர்களுக்கு மத்தியில் இன்றும் அளவிட முடியாத வாசகர்களை பெற்றுள்ளார். 25 க்கும் மேற்பட்ட மொழிகளில் இவரின் சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளன. தமிழில் இந்திரஜால் காமிக்ஸ், வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் குமுதம், மாலைமலர், இன்னும் சில நாளேடுகளில் தொடராகவும் வெளிவந்துள்ளார்.  1975 – ம் ஆண்டில் வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸில்  வெளிவந்த வேதாளரின் கதைகளில் ஒன்றான கப்பல் கில்லாடிகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். படித்து விட்டு உங்கள் எண்ணங்களை மறவாமல் தெரியப்படுத்துங்கள். நன்றி!      























பின் குறிப்பு -

வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸில் வெளிவந்துள்ள கப்பல் கில்லாடிகள்
( 1975 - ம் வருடம் செப்டம்பர் மாதத்தில், வேதாளர் கதைகளில் இரண்டாவது கதையாகவும் ) , முத்து காமிக்ஸில் விசித்திரக் கடற்கொள்ளையர்  ( 1977 - ம் வருடம் அக்டோபர் மாத இதழாக 67 - வது வெளியீடாகவும் )
ராணி காமிக்ஸில் கடல் கோட்டை ( 1994 - ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 244 வது இதழாகவும் வெளிவந்துள்ளது ) என்ற தலைப்புகளில் வெளிவந்துள்ளன. அதன் முகப்பு அட்டை படங்கள் கீழே உள்ளன.
                   
                                      

 

ஜனவரி 2015 - ல் வெளிவரப்போகும் மின்னும் மரணம் கம்ப்ளீட் சாகா, 
11 இதழைக் கொண்டு வெளிவருகிறது. 500 வண்ணப் பக்கங்களுடன் 925 விலையில் ( கூரியர் சேர்த்து) வெளிவருகிறது! முன் பதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. முன் பதிவு செய்யாத  நண்பர்கள் விரைவாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!