Posts

Showing posts from 2013

2013 ஒரு கண்ணோட்டம்

Image
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவராதா என்றிருந்த காலம் மாறி,  படிக்கக் கூட அவகாசம் தராமல் அடுத்தடுத்து நிறைய புத்தகங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளது. இது வரவேற்கத்தக்க சூழல்தான், இருந்தாலும், எண்ணிக்கையால் மட்டும் வாசகர்களை திருப்தி படுத்த முடியாது. அவர்களின் ரசனையறிந்து. தரத்துடன் புத்தகங்கள் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஜனவரியில் வெளிவந்த நெவர் பிஃபோர் ஸ்பெஷலில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் டிசம்பரில் நான்கு இதழ்களுடன் நிறைவு பெற்றுள்ளது. அதன் விவரங் கள்...       1. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் ( முத்து காமிக்ஸ் ) ஜனவரி  - 2013  முத்து காமிக்ஸின் 40- ம் ஆண்டு சிறப்பு மலர். லார்கோ வின்ச்,  வேய்ன் ஷெல்டன், டைகர், சிக்பில், ஜில் ஜோர்டான், ஜான் ஸ்டீல், மாடஸ்டி, மாயாவி போன்ற நாயகர்களுடன் வெளிவந்து மிகவும் வரவேற்பைப் பெற்ற இதழ்.               2. சிகப்பாய் ஒரு சொப்பனம் ( லயன் காமிக்ஸ் ) ஜனவரி - 2013 .   டெக்ஸ் வில்லரின் வித்தியாசமான, பாணியில் வெளிவந்து வாசகர்களிடம் மிகவும் வரவேற்பைப் பெற்ற இதழாகும்.              

2014 அட்டவணையும்- சில கருத்துக்களும்.

Image
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள 2014 அட்டவணை பலருக்கு ஏமாற்றத்தையே தரக் கூடியதாக அமைந்துள்ளது. 2014- ல் வெளிவருவதாக சொன்ன திகில் நகரில் டெக்ஸ், மர்ம மனிதன் மார்ட்டீன், சி.ஐ.டி ராபின், டேஞ்சர் டயபாலிக் , ஜெஸ்லாங் போன்ற கதைகளுக்கு இந்த வருடமும் கல்தா கொடுக்கப் பட்டுள்ளது. கார்ஸனின் கடந்த காலம் கதை வெளிவந்து சில வருடங்கள் தான் ஆகிறது. அதுவும் கருப்பு, வெள்ளையில் வெளிவந்த இதழ் அனேகம் பேரிடமும் இருக்கக் கூடியது, அதை திரும்பவும் கருப்பு வெள்ளையில்   (வண்ணத்தில் போடாமல்) போடுவது ஏனென்று புரியவில்லை.  அதே போல் பூம் பூம் படலம், நிழல் 1 நிஜம் 2 கதையும் சமிபத்தில் வெளிவந்த கதைதான், இதற்கு பதில் மினி லயனில் வெளிவந்துள்ள புரட்சித்தீ, பயங்கரப் பயணம், நீலப்பேய் மர்மம், ராஜா ராணி ஜாக்கி, விண்வெளியில் ஒரு எலி, மாயத்தீவில் அலிபாபா, வெள்ளைப் பிசாசு, நடுக்கடலில் எலிகள், ஒரு நாணயப் போராட்டம், கொள்ளைக்கார கார் போன்று கிடைக்காத அரிய கதைகளை வண்ணத்தில் மறுபதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருந்திருக்கும்,  கமான்சே கதையையும், ப்ளு