Posts

Showing posts from December, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Image

வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவி

Image
வேதாளர் 1936-ம் ஆண்டில் உலகப்போருக்கிடையில், மோசமான பொருளாதார சூழ்நிலையில், லீ ஃபாக்-என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கதாநாயகன். ஆப்பிரிக்க கானகத்தில் உள்ள பெங்காலியா எனும் இடத்தில் வசிக்கும் பழங்குடி மக்களையும் வன விலங்குகளையும் பலதலைமுறைகளாக காத்து வரும் பாதுகாவலர். 1600-களில் கடற்கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து பெங்காலியா காட்டில் ஒதுங்கிய கிறிஸ்டோபர் வாக்கர், பின்னர் கடற்கொள்ளையருக்கு எதிராக முதல் வேதாளராக மாறியவர். அவர் சந்ததியினரும் அவரை போலவே தீமைகளை எதிர்த்து போராட உறுதிமொழி எடுத்தவர்கள். தற்போதைய வேதாளர் செந்தாடி என்பவனை தலைமையையாய் கொண்டு இயங்கி வரும் கடற்கொள்ளையரை அடக்கி அவர்களை கொண்டே கடலோர காவற் படையை அமைத்தவர். அடர்ந்த கானகத்தில் மண்டை ஓடு குகையில் வசித்து வரும் தற்போதைய வேதாளர் 21-ம் தலைமுறையை சார்ந்தவர். அவரது பெயர் கிட் வாக்கர், மனைவி டயானா பால்மர் ஐ நா சபையில் பணிபுரிபவர். வேதாளருடைய வலது கையிலிருக்கும் கபால முத்திரை மோதிரம் எதிரிகளின் தாடைகளுக்கு நீங்காத நினைவுச் சின்னத்தை பதிக்கும். இவருடைய குதிரை ஹீரோ ஓநாய் டெவில் இரண்டும் அவருடைய நிழல்க