Friday, November 25, 2011

ஜான் சில்வர் - விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய இரகசிய உளவாளி .

பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஓர் அங்கமான Q  பிரிவில் பணி புரியும்
ஒரு ரகசிய உளவாளி ஜான் சில்வர். அவரது இயற்பெயர் ஜான் ஹவாக்.
ஜான் சில்வர் ஒரு தலைசிறந்த உளவாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தாலும்,
அவரது ஒரே இலட்சியம், தான் ஒரு தலைசிறந்த விமானியாக, புகழ்பெற
வேண்டும் என்பதே ஆகும்.

       
ஜான் சில்வர் முதன்முறையாக டெல்டா-10 என்ற விமானத்தை இயக்கியபோது, விமானத்தில் பயணம் செய்த ஹர்ஸ், காலின்ஸ் ஆகிய இரண்டு உளவாளிகளின் கவனக்குறைவினால், விமானம் பயங்கர  விபத்துக்குள்ளாகியது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஜான் சில்வர்,  நடந்த
விபத்தின் உண்மையை உணர்த்த தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய லைசன்ஸையும், வேலையையும் இழந்தார். அதன்பிறகு ஒரு துப்பறிவாளராக மாறி, நடந்தவற்றைக் கண்டுபிடித்தார். ஜான் சில்வரிடம் இருந்த அசாத்திய திறமைகளை அறிந்த 'Q' என்ற உளவு அமைப்பினர், ஜான் சில்வரின் பைலட் லைசன்சை திரும்பப் பெற்றுத்தருவதாகக் கூறி, தங்களது கடினமான பணிகளை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டனர்.ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை
அறியாமல் 'Q' நிறுவனதின் தலைசிறந்த உளவாளிகளில் தானும் ஒருவராகப்
பணிபுரிந்து வருகிறார்.

1981- ஆம் வருடத்தில் முத்து காமிக்ஸ் மூலமாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு ஜான் சில்வர் அறிமுகமானார். அதன்பிறகு பாபா காமிக்ஸ்,
மேத்தா காமிக்ஸ், ராணி காமிக்ஸ் மூலமாகவும் வெளிப்பட்டுள்ளார்.

தமிழில் வெளிவந்துள்ள ஜான் சில்வரின் சித்திரக்கதைளின் தலைப்புகள்:

 

முத்து காமிக்ஸ்
1. விபரீத விளையாட்டு -1981
2. ரவுடிக்கும்பல் -1981
3. ஆகாயக்கல்லறை + மரண ஒத்திகை -1989
4. இரத்தப்பாதை -1989
5. யுத்த வியாபாரி-1990
6. மனித வேட்டை-1990
7. கொலை வள்ளல்-1994
                                                                ராணி காமிக்ஸ்
1. இரகசியத் தீவு-
பாபா காமிக்ஸ்
1. ராணுவ வேட்டை-1983
Add caption
மேத்தா காமிக்ஸ்

1. இரத்த விளையாட்டு-1984
2. கொலைக் கழகம்-1984
3. மரணக் கயிறு-1984
4. மனித வேட்டை-1984
5. பயங்கரத் தீவு-1984
6. விசித்திரப் பந்தயம்
7. மரணத்தின் நிழலில்-1984
8. நவீனக் கொள்ளையர் -1984
9. பொற்சிலை மர்மம்
10. சுரங்கவெடி மர்மம்-1985
11. இரும்புக் கை-1985
12. மரணக்களம்
13. கல் நெஞ்சன்-1985
14. ஆழ்கடல் திருடன்
15. வைரக் கொள்ளை
16. மர்மத் தீவு
17. மரண வைரம்-1986
18. பழி தீர்க்கும் உளவாளி -1986
19. போலி சுல்தான்
20. மைக்ரோ பிலிம் மர்மம்-1986
21. ரகசிய ஃபைல்-1986
22. கடத்தல் மர்மம்-1986
23. இரத்தக் கறைகள்-1986
Friday, October 14, 2011

தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்தமிழ் காமிக்ஸ் பற்றிய கருத்துக்கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் நிறைந்திருக்கும். மேலைநாடுகளில் 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட காமிக்ஸ் (சித்திரக்கதை) புத்தகங்களின் பதிப்பக உரிமைகளைப் பெற்று, குமுதம், கல்கி, ராணி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன் ஆகிய நாளிதழ்களில் முதன்முதலாக தமிழில் தொடர்கதைகளாகச் சித்திரக்கதைகள் வெளிவரத் தொடங்கின.  அதன் பின்னர் 1965-ம் வருடத்திற்குப் பின் ஃபால்கன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், வித்தயார்த்தி மித்ரம் ஆகிய புத்தக நிறுவனங்கள் முழுநீள சித்திரக்கதைகளாக வெளியிட்டுள்ளனர்.

 


            தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1965-ம் வருடம் முதல் வெளிவந்துகொண்டிருந்தாலும், 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரை தான் காமிக்ஸ்களுக்குப் பொற்காலமாக விளங்கியது.  

இந்த காலகட்டத்தில் தான் புற்றீசல் போல ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன.  லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், திகில் காமிக்ஸ், முத்து மினி காமிக்ஸ், வாசு காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் காமிக்ஸ், சக்தி காமிக்ஸ், ரேகா காமிக்ஸ், பிரியா காமிக்ஸ்,ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ், மலர் காமிக்ஸ், காக்ஸ்டன் காமிக்ஸ், ரத்னா காமிக்ஸ், சோலை காமிக்ஸ், எழில் காமிக்ஸ், கஸ்தூரி காமிக்ஸ், சூர்யா காமிக்ஸ், பிரியதர்ஷினி காமிக்ஸ், ஸ்டார் காமிக்ஸ், ஐஸ்பெர்க் காமிக்ஸ், பார்வதி காமிக்ஸ், அணில் அண்ணா காமிக்ஸ், மதி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், தேசமலர் காமிக்ஸ், முயல் காமிக்ஸ், அமர்சித்ரா காமிக்ஸ், லஷ்மி காமிக்ஸ், ராஜா காமிக்ஸ், லீலா காமிக்ஸ், ஸ்வீட்பேபி காமிக்ஸ், பாபா காமிக்ஸ், மாயாவி காமிக்ஸ் இன்னும் பல தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து காமிக்ஸ் வாசகர்களுக்குக் கொண்டாட்டமாக இருந்த காலம்.

துப்பறியும் கதைகள், கௌபாய் கதைகள், காமெடி கதைகள், விண்வெளிக் கதைகள், திகில் கதைகள், மாயாஜாலக்கதைகள், சாகசக்கதைகள், க்ரைம் கதைகள், யுத்தக்கதைகள் எனப் பலவித கதைகள் காமிக்ஸ் புத்தகங்களாக வெளிவந்ததால் எதை வாங்குவது எதைப் படிப்பது என்று வாசகர்கள் திக்குமுக்காடிய காலகட்டமும் கூட.
      அப்போதைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவாக இருந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்த காரணத்தினால், படிக்கும் வாசகர்களும் அதிகமாகிக்கொண்டே இருந்தனர்.  நிறைய வாசகர்கள் படித்த இதழ்களைச் சேகரிக்கவும் தொடங்கினர். ( இன்றும் நிறைய வாசகர்கள் பழைய காமிக்ஸ் புத்தகங்களை  பொக்கிஷம் போல் சேமித்து வைத்துள்ளனர்.  நிறைய புதிய வாசகர்கள் பழைய புத்தகங்களைத் தேடிக்கொண்டும் அதிக விலைகொடுத்து வாங்கிக்கொண்டும் இருக்கின்றனர்.)

            
           தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் எட்டாத உயரத்தில் இருந்த நிலை மாறி 1995 ஆம் வருடத்திற்குப் பிறகு இதன் நிலையோ தலைகீழாக மாறிவிட்டது.  புயலில் சிக்கிக் காணாமல் போன மாதிரி நிறைய புத்தக நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன.  லயன் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ் இந்த இரண்டு புத்தகங்கள் மட்டும் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.  அதுவும் வருடத்திற்கு ஆறு புத்தகங்கள் வருவதே அபூர்வமாக உள்ளநிலையில் உள்ளது.


            இந்த நிலைக்கு காமிக்ஸ் புத்தகங்கள் குறைந்தது, வாசகர்கள் குறைந்தது, விற்பனை மந்தமான காரணங்களை ஆராய்ந்தால்? இன்டர்நெட், செல்போன்,வீடியோ கேம்கள், கார்ட்டூன் சேனல்கள், மக்கள் ஆங்கில மோகத்திற்குத் தாவியது, புதிய வாசகர்கள் இல்லாதது, என பலவித குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம்.   ஆனால் இவை மட்டும் புத்தகங்கள் குறைந்துபோக காரணங்கள் அல்ல.  புத்தகப் பதிப்பாளர்களிடம் சரியான திட்டமிடுதல் இல்லாதது மாதந்தோறும் புத்தகமே வெளிவராதது, விளம்பரங்கள் எதுவும் இல்லாதது, சரியான தேதிகளில் புத்தகம் கடைகளில் கிடைக்காதது, புதிய முயற்சிகள் இல்லாதது, நிறைய வாசகர்கள் புத்தகமே சரியாக கிடைக்காத ஏமாற்றத்தினால் படிப்பதையே நிறுத்திவிட்டது.  இதுபோன்ற காரணங்களால் தான் விற்பனை மந்தமானதே தவிர, புதிய வாசகர்கள் இல்லாத காரணத்தினால் மட்டுமல்ல என்பதை புத்தகப் பதிப்பாளர்கள் உணர வேண்டும்.  
            
              உதாரணத்திற்கு 2009 ஆம் வருடம் சென்னையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.  அதில் யாருமே எதிர்பார்க்காத விதமாக அனைத்து புத்தகங்களும் விற்றுத்தீர்ந்தன.  சிறுவர்களும் பெரியவர்களும் வயது வித்தியாசமின்றி தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிச் (அள்ளிச்) சென்றனர்.  
            
         லயன் காமிக்ஸ் நிறுவனத்தார் (பிரகாஷ் பப்ளிஷர்ஸ்) முதன்முறையாக 420 பக்கங்களுடன் லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல் என்ற புத்தகத்தை 100/- ரூபாய் விலையில் வெளியிட்டனர்.  வெளிவந்த உடனே அவர்களே எதிர்பாராத விதமாக அனைத்து இதழ்களும் விற்றுத்தீர்ந்து சாதனைப் படைத்துள்ளது.  அதன் பின்னர் கௌபாய் ஸ்பெஷல், லயன் ஜாலி ஸ்பெஷல் என்ற புத்தகத்தை அதே 100/-  ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளனர்.  இதுவும் விற்றுத்தீர்ந்ததும் அதிரடியாக 840 பக்கங்களுடன் 200/- ரூபாய் விலையில் கலெக்டர்ஸ் ஸ்பெஷல் (இரத்தப்படலம்1-18) என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்தினர். புத்தகம் வெளிவருவதற்கு முன்பே 800-க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.  கலெக்டர்ஸ் ஸ்பெஷல் புத்தகம் வெளிவந்து கடைகளுக்குச் செல்லாமலே விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். புதிய வாசகர்கள் யாவரும் இல்லாமலா? இவைகள் சாத்தியமானது? இதை புத்தகப் பதிப்பாளர்கள் சிந்தித்து மீண்டும் புதிய முயற்சிகளோடும், தரமான கதைகளாகவும் மாதம் தவறாமல் புத்தகத்தை வெளியிட்டு சரியான தேதிகளில் கடைகளில் கிடைக்குமாறு செய்தால்? புத்தகத்திற்கென்று கூடுதல் கவனம் செலுத்தினால்? இந்தத் துறையில் மீண்டும் பழையபடி முத்திரைப் பதிக்கலாம்.
 
            
  தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவோ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தாலும், தமிழ் காமிக்ஸ் புத்தகத்திற்கு என்றென்றும் தனி மவுசு உண்டென்பதைப் பதிப்பாளர்கள் உணர வேண்டும்.   முன்பு போல் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் நிறைய வெளிவராதா? என்று ஏங்கிக்கொண்டிருக்கும் வாசகர்கள் இன்னும் ஏராளமானவர்கள் உள்ளனர்.   தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் என்றும் நசிந்துவிடாமல் இன்னும் ஏராளமான புதிய புத்தகங்கள் முன்புபோல் வெளிவரவேண்டும் என்பதே அனைவரது ஆவலாகவும் உள்ளது.  மீண்டும் மலரவேண்டும் காமிக்ஸ் பொற்காலம்.Sunday, August 28, 2011

மரண வைரங்கள் - கேப்டன் பிரின்ஸ் சாகசம்


1986-ம் வருடம் திகில் கோடை மலரில் வெளிவந்த சித்திரக் கதை இது.  கதாசிரியர் மற்றும் ஒவியர் ஹர்மான் மற்றும் க்ரேக் இருவரின் கூட்டு முயற்சியில் உருவான பல சித்திரக் கதைகள் வெற்றி பெற்றுள்ளன.  அந்த வரிசையில் வெளிவந்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்று.
 இனி கதை

மரயாளி என்ற பகுதியை சேர்ந்த ராபர்ட் கோரல்ஸ் அந்த பகுதியின் மிகப் பெரிய பண்ணை அதிபராக இருப்பவர்.  தமது நிலங்களில் விளையும் காபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர்.  ராபர்ட்டின் மகன்களில் இருவரான ஜாய், ஜோஸ் ஆகிய இருவரும் தங்களது பண்ணை நிலங்களில் ஏராளமான பச்சை நிறக் கற்கள் (வைரங்கள்) கிடைப்பதாக கருதி பண்ணை நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெடி வைத்து அழிக்க முயல்கின்றனர்  
 மகன்களில் விரோதப் போக்கை தடுப்பதற்காகவும் பண்ணையின் அழிவைத் தடுப்பதற்காகவும் பிரின்ஸ் குழுவினரின் உதவியை நாடுகிறார் ராபர்ட்.  இதற்கிடையில் டூக்ஸே என்னும் கொடியவன் பண்ணையின் அழிவை தான் தடுப்பதாக கூறிக் கொண்டு மோரல்ஸ் குடும்பத்தினருடன் அடாவடியாக பேரம் பேசுகிறான். பேரத்தினால் கோபமடையும் மோரல்ஸ் குடும்பத்தினர் டூக்ஸே-வை அடித்து துரத்துகின்றனர்.  

 தப்பி ஒடிய டூக்ஸே மோரல்ஸ் குடும்பத்தை பழிவாங்குவதற்காக தனது அடியாட்களுடன் காத்திருக்கிறான்.  இதற்கிடையில் ஜாய் ஜோஸ்-ஐ சந்தித்து பண்ணையின் அழிவை தடுப்பதற்காக பிரின்ஸ் தலைமையில் ஒருகுழுவாக (ஐந்து நபர்) ஆபத்துகள்  நிறைந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்களின் வருகையை எதிர்பார்த்திருக்கும் டூக்ஸே, தந்திரமாக பிரின்ஸ் குழுவினரை பார்வையை பறிக்கும் மணல் பகுதியினுள் முடக்கி கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல நினைக்கிறான்.  
 காந்த துகள்கள் மணலில் ஏராளமாக கலந்திருப்பதால் வெயிலின் கடுமை அதிகமாக அதிகமாக பார்ப்பவர்களின் கண்கள் செயலிழந்து பிறகு உயிரை பறிக்கும் தன்மை பெற்ற மணல்பகுதி அது.  மணலின் கொடுமை தாங்கிக் கொள்ள முடியாமல் தப்பி வருவர்களை சுட்டுக் கொல்ல தனது அடியாட்களுடன் காத்திருக்கிறான் டூக்ஸே.  
                                    
 உயிரை பலிவாங்கும் மணல், கொடியவன் டூக்ஸே, ஆகிய இரு பேராபத்திலிருந்தும் பிரின்ஸ் குழுவினர் உயிருடன் மீண்டனரா? ராபர்ட்டின் மகன்களிடமிருந்து பண்ணை நிலங்களின் அழிவை தடுத்தனரா என்பதே கதை.Sunday, July 17, 2011

கார்ஸனின் கடந்த காலம்

டெக்ஸ் வில்லர் கதைகள் என்றாலே டமால், டூமில் சமாச்சாரங்கள் மட்டுமே அதிகம் நிறைந்திருக்கும். கார்ஸனின் கடந்த காலம் சித்திரக் கதையில் வழக்கத்திற்கு மாறாக கார்ஸனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அன்பு, நேசம், நட்பு, வீரம் என அனைத்து சிறப்பம்சங்களும் கதையோடு கலந்து தரப்பட்டிருக்கும்.  ஆக் ஷனுக்கும், விறுவிறுப்புக்கும் குறைவே இல்லாத கதை.  இதன் வெற்றிக்கு ஒவியமும், முக்கிய காரணமாக அமைந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சித்திரக் கதை ஆகும்.  எனக்கும் பிடித்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்றாகும்.  இனி கதை.
அமெரிக்க மாநிலத்தில் உள்ள டக்ஸன் நகருக்கு வரும் கார்ஸனை ஒரு மர்ம நபர் கொல்லமுயற்சிக்கிறான்.  அவனை வீழ்த்திடும் கார்ஸன் அவனிடமிருந்து ஒரு துண்டு விளம்பரத்தை கண்டு எடுக்கிறார்.  அதில் ரே க்ளம்மன்ஸ் என்ற நபரின் சவ அடக்க ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு அப்பாவிகளுக்கு அழைப்பு இருப்பதை கண்டு, உடனே மான்டானா பகுதிக்கு விரைந்து செல்கிறார் கார்ஸன்.    இரு தினங்களுக்கு பின் கார்ஸனை தேடி டக்ஸன் நகருக்கு வரும் டெக்ஸ் வில்லரும் அவரது மகனும் கார்ஸன் மான்டனா பகுதிக்கு சென்றிருப்பதை உள்ளூர் நகர ஷெரீப்பிடம் கேட்டறிந்து கொண்டு அவர்களும் மான்டனாவிற்கு செல்கின்றனர்.   செல்லும் வழியில் 25 வருடங்களுக்கு முன் மான்டனாவில் நடந்த கதையை தனது மகனிடம் கூறிக் கொண்டே சொல்கிறார் டெக்ஸ் வில்லர்.


அப்போதைய மான்டனாவில் நிறைய தங்கச் சுரங்கங்கள் இருந்தன. தங்கத்திற்காக நிறைய மக்கள் மான்டனாவில் குவிந்தனர்.  இதனால் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்தன  தங்கம் சேமிப்பவர்களை கண்டறிந்து அவர்களை இரக்கமே இல்லாமல் கொன்று தங்கத்தை கொள்ளையடித்தனர் அப்பாவிகள் என்றழைக்கப்படும் கொலைவெறியர்கள்.அப்பாவிகள் கூட்டத்தை பிடிப்பதற்காக ரேஞ்சரான கார்ஸன் மான்டனாவிற்கு வந்து சேர்கிறார்.  வந்த இடத்தில் நகர ஷெரீப்பான ரே க்ளம்மன்ஸ் கார்ஸனுக்கு நெருங்கிய நண்பராகிறார்.  இதற்கிடையே கார்ஸன் ரேஞ்சர் என்ற விபரம் தெரியாத அப்பாவிகள் கூட்டத்தினர் தங்களுடைய கொள்ளை முயற்சியை தொடர்கின்றனர்.  இதற்காக காத்திருந்த கார்ஸன் அவர்களுடைய முயற்சியை முறியடித்து பலரை சிறையில் தள்ளுகிறார்.  அப்பாவிகள் கூட்டத்தின் தலைவன் தனது நெருங்கிய நண்பனும், நகர ஷெரீப்புமான ரே க்ளமன்ஸ் தான் என்பதை கண்டறிந்து அவனையும் கைது பண்ண முயற்சிக்கிறார்.  இதனை அறிந்த ரே க்ளமன்ஸ் கொள்ளையடித்த தங்கத்துடன் தப்பி விடுகிறான்.  சிறையிலிருந்த அப்பாவிகள் கூட்டத்தினரை நகர மக்கள் ஒன்றுசேர்ந்து தூக்கிலிட்டு கொன்று விடுகின்றனர்.  எஞ்சியிருக்கும் சிலர் மான்டனாவை விட்டே தப்பிச் சென்று விடுகின்றனர்.

 25 வருடங்களுக்கு பின் அப்பாவிகள் கூட்டத்தில் எஞ்சியிருக்கும் அனைவரும் ரே க்ளமன்ஸை பழி வாங்குவதற்காக பூன் என்ற கொள்ளைக் காரன் தலைமையில் மான்டானா பகுதியில் ஒன்று சேர்கின்றனர்.  இதனை அறியாத ரே க்ளமன்ஸின் மகளான டோனா எதிரிகளிடம் வந்து மாட்டிக் கொள்கிறாள்.

கொள்ளையடித்த தங்கத்தை கொண்டு வந்து தந்தால் மகளை மீட்டுச் செல்லலாம் என்று கோரிக்கை வைக்கின்றனர் எதிரிகள்.  மகளை மீட்கும் முயற்சியில் தங்கத்துடன் செல்ல துணிகிறான் ரே.  அவனுக்கு உதவ கார்ஸனும் உடன் செல்கிறார்.   இவர்களுடன் டெக்ஸ் வில்லரும், அவரது மகனும் இணைந்து கொண்டு எதிரிகளை வீழ்த்த முயற்சிக்கின்றனர்.

இவர்களுடைய அதிரடி தாக்குதலால் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டு இறுதியில் ரே க்ளமன்ஸும் எதிர்பாராத விதமாக எதிரிகளின் தோட்டாவுக்கு பலியாகி விடுகிறான்.  மீட்கப்பட்ட தங்கத்தையும், டோனாவையும் ரேயின் மனைவியான லினாவிடம் ஒப்படைத்து விட்டு தங்கள் வழியில் செல்கின்றனர் டெக்ஸ் குழுவினர்.
Thursday, June 23, 2011

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]
2.பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர் ![கௌபாய் ]
3.மந்திரியைக் கடத்திய மாணவி  [ஜேம்ஸ் பாண்ட் ]
4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]
5.காதலியை விற்ற உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ]
6.நாலாவது பலி [கௌபாய் ]
7.சுறா வேட்டை  [ஜேம்ஸ் பாண்ட் ]
8.மர்ம முகமூடி [கௌபாய் ]
9.மந்திரத் தீவு  [ஜேம்ஸ் பாண்ட் ]
10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]
11.மிஸ்டர் ABC  [ஜேம்ஸ் பாண்ட் ]
12.மின்னல் வீரன் [கௌபாய் ]
13.அழகிய ஆபத்து  [ஜேம்ஸ் பாண்ட் ]
14.விசித்திர விமானம் [ ஜுலி ]
15.மர்ம ராக்கெட்  [ஜேம்ஸ் பாண்ட் ]
16.மரணப் பரிசு [கார்ஸன் ]
17.கடல் கொள்ளை  [ஜேம்ஸ் பாண்ட் ]
18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]
19.டாக்டர் நோ  [ஜேம்ஸ் பாண்ட் ]
20.ராட்சத பல்லி [நிக்,டான்] 
21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
22.இரும்பு மனிதன்  [இந்திரஜித் ]
23.இரத்தக் காட்டேரி  [ஜேம்ஸ் பாண்ட் ]
24.புரட்சி வீரன் [கௌபாய் ]
25.எரி நட்சத்திரம்   [ஜேம்ஸ் பாண்ட் ]
26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]
27.கவச உடை  [ஜேம்ஸ் பாண்ட் ]
28.பழிக்குப் பழி [கௌபாய் ]
29.கதிர் வெடி  [ஜேம்ஸ் பாண்ட் ]
30.மரக் கோட்டை [கார்ஸன்]
31.மனித பலூன் [டைகர் ]
32.ஷெரிப் ஆவி [கௌபாய் ]
33.நரபலி [பீமா]
34.அழகி வீட்டுக் கொலை [ஆசாத்]
35.பொன் தேவதை  [ஜேம்ஸ் பாண்ட் ]
36.ஒற்றர் படை [கௌபாய் ]
37.மீன் படை [டைகர்]
38.கொள்ளைக் கூட்டம் [ஆசாத்] 
39.கடல் பூதம்  [ஜேம்ஸ் பாண்ட் ]
40.மேஸ்திரி கொலை [கௌபாய் ]
41.நடிகை சுரேகா [ஆசாத்]
42.ஜெயில் கைதி [கௌபாய் ]
43.மர்ம விபத்து [டைகர்]
44.மந்திர மண்டலம் [நிக்,டான்]
45.கொலைகாரக் கொரில்லா  [ஜேம்ஸ் பாண்ட் ]
46.பர்மாவில் பாட்சா [டைகர்] 
47.மிஸ்டர் K  [ஜேம்ஸ் பாண்ட் ]
48.கூர்க்கா வீரன் [இராணுவக் கதை ]
49.இயந்திர மனிதன் [டைகர்]
50.பூனைத் தீவு [டேவிட் ]
51.வைரச் சுரங்கம்  [புரூஸ்லீ   ]
52.புரட்சிப் பெண் ஷீலா [ ஷீலா]
53.சீன உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ]
54.பீரங்கிக் கோட்டை [ஜூலி]
55.கார் பந்தயம்  [புரூஸ்லீ ]
56.நடுக் கடலில் [நெல்சன்]
57.எகிப்திய மம்மி [தியோ ]
58.காஷ்மீரில் 007[ஜேம்ஸ் பாண்ட் ]
59.கடல் கன்னி [ஜேம்ஸ் பாண்ட் ]
60.உயிர் காத்த வீரன் [கார்சன் ]
61.திசை மாறிய கப்பல்  [புரூஸ்லீ ]
62.மரண தண்டனை [ஆசாத்]
63.உல்லாசக் கப்பல்  [ஜேம்ஸ் பாண்ட் ]
64.மரணப் பயணம் [டைகர்]
65.ரகசிய மாநாடு I [ஜேம்ஸ் பாண்ட் ]
66.ரகசிய மாநாடு II [ஜேம்ஸ் பாண்ட் ]
67.சட்ட விரோதி [கௌபாய் ]
68.மர்ம வீரன் [பில்லி]
69.துப்பறியும் பெண் [ராயன்]
70.ஓர் இரவு  [கௌபாய் ] 
71.ராஜாளி ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
72.திமிங்கல கப்பல் [நெல்சன்]
73.மணக்கும் அபாயம் [ஜேம்ஸ் பாண்ட் ]
74.துரோகி  [கார்சன் ]
75.பாம்புப் பாடகி [ஜேம்ஸ் பாண்ட் ]
76.விஷ ஊற்று [கௌபாய் ]
77.போதை மருந்து  [ஜேம்ஸ் பாண்ட் ]
78.சூதாட்ட விடுதி [கௌபாய் ]
79.தொடரும் அபாயம் [ ஜானி ]
80.பாம்புக்கடவுள் [ஆசாத் ]    
81.பனிமலைப் பிணம்   [ஜேம்ஸ் பாண்ட் ]
82.கோழைக் கேப்டன் [கௌபாய் ]
83.ஜனாதிபதி கொலை [ராயன்]
84.இரு ஷெரீப்கள் [கௌபாய் ]
85.பெட்ரோல் அதிபர் [ஜேம்ஸ் பாண்ட் ]
86.புத்தாண்டு விருந்து [இன்ஸ்பெக்டர் ஈகிள் ]
87.ராட்சதப் பறவை [ஜேம்ஸ் பாண்ட் ]
88.இதயக் கனி [கௌபாய் ]
89.இசைப் பெட்டி [ஜேம்ஸ் பாண்ட் ]
90.படகோட்டி [ஜேம்ஸ் பாண்ட் ]
91.தலை மட்டும் [ஜேம்ஸ் பாண்ட் ]
92.மர்ம ரோஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
93.கொள்ளையர் ராஜ்ஜியம் [ஜேம்ஸ் பாண்ட் ]
94.பாதி இரவில் ஒரு பறக்கும் தட்டு [ஜேம்ஸ் பாண்ட் ]
95.பத்தாவது இரவு [ஜானி ]
96.புரட்சிக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
97.துடிக்கும் துப்பாக்கி [தில்லான்]
98.பாயும் புலி [பில்லி] 
99.மொட்டைத் தலை ஒற்றன் [ஜேம்ஸ் பாண்ட் ]
100.வேட்டை நாய் [தில்லான்]

101.நள்ளிரவு 12 மணி [ஜேம்ஸ் பாண்ட் ]
102.கொலைகார கேப்டன் [ராயன்]
103.பறக்கும் எதிரி [ஜேம்ஸ் பாண்ட் ]
104.துப்பாக்கி மங்கை[பக் ஜோன்ஸ்]
105.இரகசிய கொள்ளைக்காரன்[கௌபாய் ]
106.சதிகார சாமியார்[கௌபாய் ]
107.நிழல் மனிதன்[லேடி ஜேம்ஸ் பாண்ட் ஜோன்]
108.சூப்பர் கார் [தியோ ]
109.பூனைக் கண் மனிதன்[நிக் , டான்]
110.இரும்பு மனிதன்[கிட் கார்சன்]
111.கில்லாடிக்கு கில்லாடி [பில்லி] 
112.இரத்தப் பலி [தில்லான்] 
113.ஒற்றனுக்கு ஒற்றன் [ஜேம்ஸ் பாண்ட் ]
114.மண்டை ஓட்டு மர்மம் [பீமா] 
115.கப்பலைக் காணோம்[ஜேம்ஸ் பாண்ட் ]  
116.விமானத்தில் வெடிகுண்டு [ஜானி ]
117.வேட்டைக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
118.கொலைகார நகரம் [கௌபாய் ]
119.கவர்ச்சி நடிகை [ ஜானி ]
120.துப்பாக்கி வீரன் [சிஸ்கோ]
121.காட்டில் விழுந்த விமானம் [ கில்டேர்]
122.குத்துச் சண்டை வீரன் [பீட்டர் ]
123.முரட்டுக் காளை[பில்லி] 
124.கொலைகாரக் கூட்டம்[நிக்,டான் ]
125.பேய் மனிதன் [சிஸ்கோ]
126.மர்மக் கடிதம் [ ஜானி ]
127.கோட்டைக்குள் குத்துவெட்டு [கிட் கார்சன்]  
128.நான் யார் [சுனில் ]
129.அழகி வேட்டை [சிஸ்கோ]
130.குழந்தைக்காக [தில்லான்] 
131.குள்ளநரியில் ஒரு கள்ளநரி[ஜானி ]
132.பேய்த் தீவு [நிக்,டான்]
133.பெண் C.I.D [ மாடஸ்டி ]
134.பணப் பெட்டி மறைந்த மர்மம் [சிஸ்கோ]
135.வல்லவனுக்கு வல்லவன் [கௌபாய்]
136.மர்மக் கொள்ளைக்காரன்[தில்லான்] 
137.மர்மக் கோட்டை [ மாடஸ்டி ]
138.புதையல் வேட்டை [ராய்]
139.ரெயில் கொள்ளை [சிஸ்கோ]
140.வயிரக் கண் பாம்பு [மாடஸ்டி  ]
141.இரகசிய போலிஸ் 000 [மாயாவி ]
142.மாய உலகில் மர்ம மனிதர்கள் [பிளாஷ் கார்டன் ]
143.பேய்க் காடு[மாயாவி ]
144.புதையல் வேட்டையில் பூகம்பம் [மாடஸ்தி ]
145.இருண்ட உலகின் இரும்பு மனிதன்[பிளாஷ் கார்டன் ]
146.இரத்தக் காட்டேரி [மாயாவி ]
147.வெடி குண்டு மாளிகை [மாண்ட்ரேக் ]
148.மண்டை ஓட்டு மாளிகை  [மாயாவி ]
149.துப்பாக்கிப் பெண் [ஜோன்  ]150.அவள் தொடுத்த அம்பு [மாயாவி ]
151.செவ்வாய் கிரகத்து மனிதன்[பிளாஷ் கார்டன் ]
152.தங்கத் துப்பாக்கி [ஜேம்ஸ் பாண்ட் ]
153.உளவுக் கப்பல் [மாடஸ்தி ]
154.ஆழ்கடலுக்கு அடியில்  [மாயாவி ]
155.இரத்தம் குடிக்கும் பேய் [ஹாரர்]
156.விசித்திரப் பறவைகள்  [மாயாவி ]
157.வாராயோ வைர நெக்லஸ் [ரிப் கிர்பி ]
158.முதலைத் தீவு  [மாயாவி ]
159.எத்தனுக்கு எத்தன் [கௌபாய் ]
160.மாய முரசு  [மாயாவி ]
161.மோகினி பேய் [மாண்ட்ரேக் ]
162.சூனியக் கிழவி  [மாயாவி ]
163.கடல் கோட்டை [ராபர்ட் ]
164.தப்பி ஓடிய கைதிகள்  [மாயாவி ]
165.வாத்தியாருக்கு வாத்தியார் [ஜேம்ஸ் பாண்ட் ]
166.மாணவியைக் காணோம்  [மாயாவி ]
167.பெண் புலி [கௌபாய் ]
168.நெருப்பு கக்கும் கழுகு  [மாயாவி ]
169.மயக்கும் மோகினி [மாண்ட்ரேக் ]
170.அதிரடிப் பெண்  [மாயாவி ]
171.மர்மத் தீ [கௌபாய் ]
172.சிலந்தி வலை  [மாயாவி ]
173.கடல் நகரம் [பிளாஷ் கார்டன் ]
174.பனிக் கரடி [ஜேம்ஸ் பாண்ட் ]
175.கறுப்புப் பிசாசு [துப்பறியும் நாய் டைகர் ]
176.கடத்தப்பட்ட நடிகை [மாயாவி ]
177.முரட்டுப் பெண் [ஜேம்ஸ் பாண்ட் ]
178.பழி வாங்கும் கொரில்லா  [மாயாவி ]
179.மரண அறை [மாண்ட்ரேக் ]
180.அறை எண் 7 [மாயாவி ]  
181.வில்லனுக்கு வில்லன் [கௌபாய் ]
182.குதிரை வேட்டை [மாயாவி ]
183.கடல் அரக்கன் [பிளாஷ் கார்டன் ]
184.உயிர் குடிக்கும் மலை [மாயாவி ]
185.செவ்விந்திய வீரன் [கௌபாய் ]
186.வெள்ளை இளவரசி [மாயாவி ]
187.அபாயக் குரல் [பிளாஷ் கார்டன்]
188.மீன் மனிதன் [மாயாவி ]
189.சதிகாரர் நகரம் [மாயாவி ]
190.கோடாரிக் கொம்பன் [கௌபாய் ]
191.யானைப் பையன் [மாயாவி ]
192.மர்மக் கல்லறை [கௌபாய் ]
193.தங்கத் தீவு [கார்த் ]
194.மரணக் கடல்  [மாயாவி ]
195.பழி வாங்கும் நாய்கள் [கௌபாய் ]
196.மாயமாக மறைந்த விமானம் [மாயாவி ]
197.பாலைவனப் புயல் [ கார்த் ]
198.கடத்தப் பட்ட இளவரசி [மாயாவி ]
199.அபாயக் கோள்[விண்வெளிக் கதை]
200.விசித்திர  குள்ளர்கள் [மாயாவி ]
201.மர்ம மாளிகை [கார்த்]
202.அதிரடிச் சிறுவன்  [மாயாவி ]
203.பாலைவனப் போர் [கௌபாய் ]
204.காட்டிலே கலாட்டா [மாயாவி ]
205.இரத்த வெறி [கௌபாய் ]
206.மரணக் குகை [மாயாவி ]
207.சூனியக்காரி [பிளாஷ்]
208.கடலில் கவிழ்ந்த கப்பல் [மாயாவி ]
209.முகமூடி கொள்ளைக்காரன் [கௌபாய் ]
210.நள்ளிரவுக் கொள்ளை [மாயாவி ]
211.கொலைகாரக் கும்பல் [கார்த்]
212.காட்டு மனிதன் [மாயாவி ]
213.கை மாறிய பெட்டி [மாடஸ்டி]
214.வன மோகினி[மாயாவி ]
215.மனித வேட்டை [பிளாஷ் கார்டன்]
216.கடல் புதையல் [மாயாவி ]
217.மர்மப் பெட்டி [மாடஸ்டி]
218.புலி வேட்டை  [மாயாவி ]
219.மாயச் சிலை [மாடஸ்டி]
220.கடத்தல் கூட்டம்  [மாயாவி ]
221.கவச மனிதர்கள் [பிளாஷ் கார்டன்]
222.வைரக் கொள்ளை [மாயாவி ]
223.கள்ள நோட்டுக் கும்பல் [ஜோ]
224.கோட்டைக்குள் வேட்டை  [மாயாவி ]
225.புலிப் பெண் [கார்த்]
226.காரில் வெடிகுண்டு  [மாயாவி ]
227.மாய வாள்[பிளாஷ் கார்டன்]
228.கடத்தல் வேட்டை  [மாயாவி ]
229.முகமூடிப் பெண் [மாடஸ்டி]
230.அபாயப் பயணம்  [மாயாவி ]
231.வால் நட்சத்திரம் [கார்த்]
232.வங்கிக் கொள்ளை  [மாயாவி ]
233.பனிமலை மனிதன்[பிளாஷ் கார்டன்]
234.பேய் தீவு   [மாயாவி ]
235.அடிமைப் பெண் [கார்த்]
236.கொலைகாரக் குள்ளன்  [மாயாவி ]
237.கொலை மிரட்டல் [மாடஸ்டி]
238.தலை வெட்டிக் கூட்டம்  [மாயாவி ]
239.மரணக் குகை [பிளாஷ் கார்டன்]
240.காட்டுக்குள் புதையல்  [மாயாவி ]
241.பொற்காசுப் புதையல் [கார்த்]
242.மாய முத்திரை  [மாயாவி ]
243.நண்டு மனிதன் [கார்த்]
244.கடல் கோட்டை  [மாயாவி ]
245.மரணப் பாதையில் [கௌபாய் ]
246.சூனியக்காரன்  [மாயாவி ]
247.பட்டிணத்தில் டைனோசர் [பிளாஷ் கார்டன்]
248.கள்ளனுக்கு கள்ளன்  [மாயாவி ]
249.குள்ளர் குகை [ஜானி & பீட்டர்]
250.பேய்க் கோட்டை [மாயாவி ]
251.தங்க வேட்டை [கௌபாய் ]
252.அபாயக் கப்பல் [மாயாவி ]
253.இரும்புக்கை  மனிதன் [கௌபாய் ]
254.வானவெளி அரக்கன் [மாயாவி ]
255.மனிதக் குரங்கு [பிளாஷ் கார்டன்]
256.மோசடி கூட்டம் [மாயாவி ]
257.பறக்கும் தட்டு [பிளாஷ் கார்டன்]
258.தங்க மணல் [மாயாவி ]
259.பூதம் காத்த புதையல் [ரிப் கிர்பி ]
260.கம்பி நீட்டிய கைதிகள் [மாயாவி ]
261.வேட்டைக்காரன் [மாயாவி ]
262.கொலைகாரப் படை [மாயாவி ]
263.எலும்புக்கூடு [மர்மக் கதை]
264.கப்பல் கொள்ளையர் [மாயாவி ]
265.அபாயக் கைதிகள் [மாயாவி ]
266.மாய முத்திரை [மாயாவி ]
267.உயிர் குடிக்கும் மாயச் சிலை [மாயாவி ]
268.மீண்டும் டைனோசர் [மாயாவி ]
269.கடல் புதையல் [ ஜான் & பீட்டர் ]
270.தீயில் எரியும் பெண் [மாயாவி ]
271.தங்கக் கொள்ளை [கெளபாய்]]
272.கூலிப் படை [மாயாவி ]
273.உடைந்த விமானம் [பிளாஷ் கார்டன்]
274.இரும்புக் கூண்டு [மாயாவி ]
275.கொலைகாரன் கோட்டை [கௌபாய் ]
276.கப்பல் கொள்ளையர் [மாயாவி ]
277.காணாமல் போன ராக்கெட் [மாயாவி ]
278.வேட்டைக்காரன்  [மாயாவி ]
279.துப்பாக்கிப் பெண் [கௌபாய் ]
280.மரணப் புகை  [மாயாவி ]
281.குதிரை வீரன் [கௌபாய் ]
282.மர்மச் சிலை  [மாயாவி ]
283.யார் அந்த முகமூடி [கௌபாய் ]
284.கொலைகாரக் குரங்கு  [மாயாவி ]
285.வஞ்சக எதிரி   [மாயாவி ]
286.போலிக் கடிதம்  [மாயாவி ]
287.எரிமலை மிருகங்கள் [பிளாஷ் கார்டன்]
288.கார் குண்டு  [மாயாவி ]
289.மரண நிழல் [கரும் புலி ]
290.பாம்பு பெண்  [மாயாவி ]
291.கூலிப் படை [பிளாஷ் கார்டன்]
292.எங்கே இளவரசி?  [மாயாவி ]
293.கள்ளனுக்குள் குள்ளன் [கௌபாய் ]
294.இளவரசனைக் காணோம்  [மாயாவி ]
295.தங்கத் தீவு  [மாயாவி ]
296.கொலைவெறிக் கூட்டம்  [மாயாவி ]
297.மர்மக் கடிதம்  [மாயாவி ]
298.மர்மக் கும்பல்  [மாயாவி ]
299.ஆவி உலகம் [கரும் புலி]
300.இரட்டைக் கொலையாளி  [மாயாவி ]
301.இரகசியப் பயணம் [ஜானி]
302.கொலைகார ராணி [மாயாவி ]
303.அதிரடி அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
304.வேதாள மரம் [மாயாவி ]
305.புலிப் பெண் [ரீனா ]
306.யார் பையன் [மாயாவி ]
307.இளவரசியைத் தேடி[மாடஸ்டி]
308.இரட்டைத் துப்பாக்கி [மாயாவி ]
309.மாயக்காரி [மாயாவி ]
310.அபாய நகரம் [மாயாவி ]
311.நாயைத் தேடி [சிஸ்கோ]
312.உயிர் காக்கும் முத்திரை   [மாயாவி ]
313.வீரச் சிறுவன் [தோர்கல்]
314.மரணப் பள்ளத்தாக்கு  [மாயாவி ]
315.நடக்கும் சிலை[ மர்மக் கதை ]
316.உயிர் குடிக்கும் செடி [மாயாவி ]
317.கத்திக்கு கத்தி [கௌபாய் ]
318.வழிப்பறிக் கொள்ளைக்காரன் [மாயாவி ]
319.கடல் நகரம் [விண்வெளிக் கதை]
320.பேய் வீடு [மாயாவி ]
321.இரட்டை எதிரிகள் [கௌபாய் ]
322.இரத்தக் காட்டேரி [மாயாவி ]
323.கொலை கும்பல் [கரும் புலி]
324.கடலில் மிதந்த இளவரசி [மாயாவி ]
325.வீர வாள்[கார்த்]
326.தங்க வேட்டை[மாயாவி ]
327.கில்லாடி வீரன் [கௌபாய் ]
328.தேர்தலில் கொள்ளைக்காரன் [மாயாவி ]
329.டைனோசர் உலகம் [விண்வெளிக் கதை]
330.மொட்டைத்தலை மந்திரவாதி [மாயாவி ]
331.கழுகு மனிதன் [கழுகு மனிதன் ]
332.சுறா வேட்டை [மாயாவி ]
333.தலை வெட்டி மன்னன் [மாயாவி ]
334.பேய் மனிதன் [மாயாவி ]
335.இரகசியச் சாவி [கோல்பி ]
336.தங்க மலை இரகசியம் [மாயாவி ]
337.வெடி குண்டு கும்பல் [ரீட்டா ]
338.இரத்தம் குடிக்கும் சிறுத்தை [மாயாவி ]
339.ரோபோட் நகரம் [கார்த்]
340.விசித்திரத் தீவு [மாயாவி ]
341.லேடி C.I.D [ செல்லி ]
342. ரவுடி ராஜா [மாயாவி ]
343.பாலைவனக் கொள்ளை [கௌபாய் ]
344.சிங்கச் சிறுவன் [மாயாவி ]
345.கோவில் கொள்ளையர்கள் [கரும் புலி]
346.யார் அந்த சிறுவன் [மாயாவி ]
347.குதிரை வீரன் [கௌபாய் ]
348.இரகசியச்சிலை [மாடஸ்டி]
349.மரணப் பள்ளத்தாக்கு [தில்லான்]
350.அபாய நகரம் [மாடஸ்டி]

351.ராஜாத் தீவு  [டைசன்]
352.காணாமல் போன கப்பல்[மாடஸ்டி]
353.நடிகையைத் தேடி [தில்லான்]
354.கடத்தல் தவளை [மாடஸ்டி]
355.கப்பல் வேட்டை [கரும் புலி]
356.இரகசிய லாக்கர்[மாடஸ்டி]
357.இருண்ட நகரம்[மாயாவி ]
358.பேய்க் குதிரை [ ரீனா ]
359.புதை குழி [தில்லான்]
360.மரணக் கிணறு [விண்வெளிக் கதை]
361.இராட்சத மனிதன்[மாயாவி ]
362.மரண விளையாட்டு [அக்னிபுத்ரா ]
363.கொலைகாரக் கைதி [தில்லான்]
364.மர்மக் குகை [விண்வெளிக் கதை]
365.இரகசிய பங்களா[மாடஸ்டி]
366.அபாயக் கதிர் [அக்னிபுத்ரா]
367.வீரப்பன் [டைசன்]
368.கொள்ளையர் குகை[தில்லான்]
369.மனித வேட்டை [மாடஸ்டி]
370.கொலைகார ரோபோட் [ஜேம்ஸ் பாண்ட் ]
371.மாய துப்பாக்கி[அக்னிபுத்ரா]
372.கார் வேட்டை [ ரீனா ]
373.முரட்டுக் குதிரை [தில்லான்]
374.கொள்ளையர் படை[கரும் புலி]
375.கடத்தல்காரர்கள் [மாடஸ்டி]
376.யார் குற்றவாளி [மாயாவி ]
377.மாயக் கோட்டை [அக்னிபுத்ரா]
378.இரட்டையர்கள் [தில்லான்]
379.இரகசிய பயணம்[விண்வெளிக் கதை ]
380.பறக்கும் தட்டு [கரும் புலி]
381.கடத்தல் டைனோசர்  [மாயாவி ]
382.ஓநாய் மனிதன் [கரும் புலி]
383.மரண இரவு  [மாயாவி ]
384.சிறைக் கைதிகள் [அக்னிபுத்ரா]
385.இரகசியப் பெட்டி [மாடஸ்டி ]
386.பாலைவனத் தீவு [கரும் புலி]
387.மரண விளையாட்டு [மாடஸ்டி ]
388.மாய வலை[கழுகு மனிதன்]
389.கில்லாடிக்கு கில்லாடி [தில்லான்]
390.பாம்புக் கோட்டை [மந்திரக் கதை]
391.வெடி குண்டு [மாயாவி ]
392.மர்மப் பந்து [அக்னிபுத்ரா]
393.கில்லாடிப் பெண் [தில்லான்]
394.எலி மனிதன் [டைசன்]
395.கொள்ளையர் படை [மாடஸ்டி ]
396.இராட்சதப் பறவை [டைசன்]
397.அதிரடிப் படை [ ஜோன்ஸ் ]
398.இரகசியத் தீவு [ஜான் ]
399.கரடிக் கோட்டை [கரும் புலி]
400.மர்மப் பூனை [துப்பறியும் கதை]
401.மயக்கும் மோகினி [அக்னிபுத்ரா]
402.டும் ..டும்..டும்..டும்  [மாயாவி ]
403.ரவுடிக்கு ரவுடி [மாடஸ்டி ]
404.பழி வாங்கும் பாம்பு [கரும் புலி]
405.மயக்க ஊசி [ஜேம்ஸ் பாண்ட் ]
406.முரட்டுக் காளை [அதிரடி வீரன் ஜோ ]
407.ஆவி உலகம் [பேய்க் கதை ]
408.கல் கோட்டை  [மாயாவி ]
409.வவ்வால் மனிதன் [கருடன்]
410.செவ்வாயை நோக்கி [விண்வெளிக் கதை ]
411.எலிப் பொறி [மாடஸ்டி ]
412.கஞ்சா கும்பல் [ஜேம்ஸ் பாண்ட் ]
413.பேய்க் கூட்டம்  [மாயாவி ]
414.இராட்சத மனிதன் [கரும் புலி]
415.மரணத் தீவு [காரிகன்]
416.போலி சாமியார் [மாடஸ்டி ]
417.பறக்கும் மனிதன் [ஜடாயு]
418.மாயக் குதிரை [தில்லான்]
419.பேய் மனிதன் [ ஹாரார் ]
420.கடல் பூதம் [கரும் புலி]
421.தீவிரவாதிகள்  [மாயாவி ]
422.கருப்பு முத்து [மாடஸ்தி ]
423.இந்திய டார்ஜான் [கிங்காங்]
424.போலி மன்னன்  [மாயாவி ]
425.கடத்தல்காரன் [தில்லான்]
426.வெடித்துச் சிதறிய இரட்டைக் கோபுரம் [கரும் புலி]
427.கள்ளனுக்குக் கள்ளன் [ஜேம்ஸ் பாண்ட் ]
428.வண்டு மனிதன் [ஜடாயு]
429.கொலைகாரக் கொரில்லா [மாயாவி ]
430.துப்பாக்கிக் கும்பல் [தில்லான்]
431.மலைக் கழுகு [டைசன்]
432.மண்டை ஓட்டு மனிதன் [ஜடாயு]
433.கும்மாங் குத்து [மாடஸ்டி ]
434.காட்டுப் பேய் [மாயாவி ]
435.அணுகுண்டு திருடன் [ஜடாயு]
436.துப்பாக்கி மங்கை [மாடஸ்டி]
437.மர்மத் தாடி [கரும் புலி]
438.மாயக் குதிரை [ஜேம்ஸ் பாண்ட் ]
439.பேய் வீடு [ ஹாரார் ]
440.ஹெலிகாப்டர் கொள்ளையர் [மாயாவி ]
441.துப்பாக்கி முனையில் [ஜேம்ஸ் பாண்ட் ]
442.தங்கக் காளை [மாயாவி ]
443.காபரே ஆட்டக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
444.அம்மன் சிலை [கரும் புலி]
445.மின்னல் தாக்குதல் [ விண்ட்ரிக் ]
446.கொலைகாரன் [ஜேம்ஸ் பாண்ட் ]
447.மனிதப் பேய் [மாயாவி ]
448.சர்வாதிகாரி [கௌபாய் ]
449.ஆபத்தான அழகிகள் [ஜேம்ஸ் பாண்ட் ]
450.பெண் மாயாவி [மாயாவி ]
451.கன்னி வேட்டை [ ஹாரார் ]
452.மன்னன் மகள்  [கெர்ப்]
453.நண்டுத் தீவு  [ஜேம்ஸ் பாண்ட் ]
454.மந்திரக் கோட்டை  [மாயாவி ]
455.மரணப் பிடியில் மாட்டிய மங்கை [ஜேம்ஸ் பாண்ட் ]
456.பாலைவனக் கொள்ளையர் [கௌபாய் ]
457.பாங்கிக் கொள்ளை [ஜடாயு]
458.வில்லேந்திய வீராங்கனை [ஜேம்ஸ் பாண்ட் ]
459.கொலைகாரன் பேட்டை [பாண்டியன்]
460.எலும்புக் கூடு  [மாயாவி ]
461.கள்ள நோட்டு [கௌபாய் ]
462.உளவுப் பெண் [ஜேம்ஸ் பாண்ட் ]
463.மாயாவியைத் தேடிய மங்கை  [மாயாவி ]
464.கடல் பாம்பு [ஜேம்ஸ் பாண்ட் ]
465.சரினா !நீ எங்கே ? [ கரும்புலி ]
466.நடனக் காரி [கௌபாய் ]
467.மின்னல் வீரன் [கௌபாய் ]
468.கப்பல் காதலி [ஜேம்ஸ் பாண்ட் ]
469.அதிர்வெடி அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
470.துடிக்கும் துப்பாக்கி [கார்சன்]
471.கொரில்லாப் பிடியில் குமரிப் பெண்  [மாயாவி ]
472.உளவாளியின் காதலி [ஜேம்ஸ் பாண்ட் ]
473.கனவுக் கன்னி  [மாயாவி ]
474.நாக தேவதை [ஜேம்ஸ் பாண்ட் ]
475.பொன் ஓடை [கௌபாய் ]
476.அந்தப்புர ரகசியம் [ஜேம்ஸ் பாண்ட் ]
477.ஆள் விழுங்கிப் பூ [மாயாவி ]
478.கடல் மனிதன் [சாகஸம்]
479.போதை அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
480.துப்பாக்கி முனையில் டயானா [மாயாவி ]
481.சூதாட்டக்காரி [கௌபாய் ]
482.பறக்கும் பாவை [மாயாவி ]
483.அதிர்வெடி நகரம் [கௌபாய் ]
484.கொலைக் கூட்டம் [ஜேம்ஸ் பாண்ட் ]
485.முடி சூட்டு விழா [மாயாவி ]
486.பெண் சர்வாதிகாரி [ராயன்]
487.வசியக் காரி [ ரிப் கெர்பி ]
488.மாய வலை [மாயாவி ]
489.சூப்பர் டூப்பர் [ஜேம்ஸ் பாண்ட் ] 
490.கடல் கொள்ளைக்காரி [சிங்கன்]
491.மரணத் தூக்கம் [மாயாவி ]
492.மர்மக் கொலைகாரன் [ ஜானி ]
493.சூப்பர் ஸ்டார் [ஜேம்ஸ் பாண்ட் ]
494.அழகு ராணி [மாயாவி ]
495.புதையல் வேட்டை [கௌபாய் ]
496.மரணப் பிடி [புரூஸ் லீ]
497.பேய்க் கோட்டை [ஜூலி]
498.மர்மப் புதையல் [மாயாவி ]
499.காணாமல் போன அணுகுண்டு [ஜேம்ஸ் பாண்ட் ]
500.கடல் பூதம் [மாயாவி ] 

Sunday, May 29, 2011

இரகசிய உளவாளி பிலிப் காரிகன்

1934-ம் வருடம் டேனியல் ஹம்மட் என்பவர் பிலிப் காரிகன் என்கிற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். பல தலை சிறந்த உளவாளிகளில் இவரும் ஒருவர். இரு நபர்களுக்கான நேருக்கு நேர் சண்டையிலும், துப்பாக்கி சண்டையிலும் சிறந்து விளங்குபவர். இவரது மனைவியின் பெயர் வில்டா காரிகன்.

ஆரம்ப காலங்களில் இரகசிய உளவாளி X-9 என்கிற பெயரில் பெயரிடப்படாத ஒரு உளவு நிறுவனத்திற்காக வேலை பார்த்துள்ளார். 1940-க்கு பிறகு இரகசிய உளவாளி X-9 என்ற பெயரை மாற்றி பிலிப் காரிகனாக அழைக்கப்பட்டுள்ளார்.அதன் பிறகு F.B.I. உளவாளியாக மாறி பல சிக்கலான விசித்திரமான பலவழக்குகளை தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1975-ம் வருடம் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு பிலிப் காரிகன் அறிமுகமானார்.
முத்து காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மேகலா காமிக்ஸ் ராணி காமிக்ஸ் மற்றும் தினத்தந்தி நாளேடுகளில் (தொடர்) மூலமாகவும் பிலிப் காரிகனின் சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழில்வந்துள்ள காரிகனின் கதைகளின் தலைப்புகள்
மேகலா காமிக்ஸ்
 • 1) எங்கே அந்த வைரம்
 • 2) கழுகு பார்வை
 • 3) ஆயுதப் புதையல்
 • 4) மனித குண்டு
 • 5) மாய விமானம்
 • 6) ப்ளாக் மெயில்
முத்து காமிக்ஸ்

 • 1) மடலாய மர்மம்
 • 2) வைரஸ் X
 • 3) காணாமல் போன கலைப் பொக்கிஷம்
 • 4) கடலில் தூங்கிய பூதம்
 • 5) பில்லி சூனியமா? பித்தலாட்டமா?
 • 6) தீ விபத்தில் திரைப்படச் சுருள்
 • 7) பழி வாங்கும் பாவை
 • 8) பனித்தீவின் தேவதைகள்
 • 9) வான்வெளி சர்க்கஸ்
 • 10) பனிமலைபூதம்
 • 11) முகமூடிக் கொள்ளைக்காரி
 • 12) மிஸ்டர் பயங்கரம்
 • 13) மரண வலை
 • 14) விசித்திர மண்டலம்
 • 15) பறக்கும் தட்டு மர்மம்
 • 16) இராணுவ இரகசியம்
 • 17) பயங்கரவாதி டாக்டர் செவன்
 • 18) தலைநகரா? கொலைநகரா?

லயன் காமிக்ஸ்

 • 1) சிலந்தி வலையில் காரிகன்
 • 2) மர்ம மூகமூடி
 • 3) பனிமலைபயங்கரம்
 • 4) மனைவி X மரணம்
 • 5) இரத்தமில்லாத யுத்தம்
 • 6) ஏரியில் ஒரு எரிமலை
 • 7) எதிரிக்கு எதிரி
 • 8) பிணம் காத்த புதையல்
 • 9) மீண்டும் டாக்டர் செவன்
 • 10) மாண்டவன் மீண்டான்
 • ராஜ்யத்திற்கு ஒரு ராணி

மாலைமதி காமிக்ஸ்

 • 1) மரண வலை
 • 2) ராக்கெட் ராட்சஸர்கள்
 • 3) மொராக்கோ மர்மம்
 • 4) மூழ்கிய கப்பலில்
 • 5) கடத்தல் மன்னர்கள்
 • 6) நம்பிக்கை துரோகி டாக்டர் செவன்
 • 7) கொள்ளைக்காரன் தீவு

இந்திரஜால் காமிக்ஸ்

 • 1) நெளிந்த சுருக்கு
 • 2) பனித்துயில்
 • 3) ஆழ்கடல்அனர்த்தம்
 • 4) என் காளி
 • 5) மாறாட்டப் போராட்டம்
 • 6) நிலவு கன்னி
 • 7) சதியின் கதி
 • 8) பெட்டிப் பாம்பு
 • 9) கொள்ளிப் பாம்புராணி காமிக்ஸ்

1) மரணத் தீவு