பனிமண்டலக் கோட்டை - பனியில் ஒரு சாகசம்

கேப்டன் பிரின்ஸ்-ன் எதிரியான வாங்-ஓ-வின் அழகிய மகளை மூக் மாஞ்ச் என்ற இன்னொரு பிரபல கடத்தல்காரன் கடத்தி ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள வைரங்களை கேட்கிறான். பேரத்திற்கு உடன்படும் வாங்-ஓ தன் மகளை மீட்டு வர தன்னுடன் இருப்பவர்களை நம்பாமல் தன்னுடைய பரம வைரியான பிரின்ஸ்-ன் உதவியை நாடுகிறான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பிரின்ஸ்-ம் அவனுக்கு உதவி செய்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் சம்மதிக்கிறான். வைரத்துடன் புறப்படும் பிரின்ஸ் மற்றும் பார்னே செங்குத்தான மலைகள், குறுகலான பாதைகள், கந்தகம் நிறைந்த பிரதேசங்கள், வழிப்பறி திருடர்களின் அபாயங்கள், மனித இரத்தத்தை ருசி பார்க்கும் ராட்சத வவ்வால்கள் என பல ஆபத்துகளை கடந்து மூக் மாஞ்சுவிடம் வைரங்களை ஒப்படைத்து வாங்-ஓவின் மகளை மீட்டார்களா என்பதுதான் கதை. வித்தியாசமான கதை சூழல். பிரமிப்பான ஒவியங்கள். கடைசியில் மிரள வைக்கம் சஸ்பென்ஸ். ஓவியர் மற்றும் கதாசிரியர் ஹெர்மான் மற்றும் க்ரேக். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்திரப் புதையலை நமது லயன் மற்றும் முத்து வாசகர்களில் ஒருவரான திரு ராகுலன் என்பவர் பிரெனஞ் (மூலம்) மொழியில், பெரிய அளவில், முழு...