ஆப்பிரிக்காவில் பிரின்ஸ்

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லம்பாஸியில் உள்நாட்டு கலவரங்கள் வெடிக்க, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வடங்கோக்கள் என்னும் புரட்சியாளர்களால் நகரமே நாசமாகிறது. புரட்சி கும்பலின் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கொலைவெறியுடன் கொன்று குவிக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் திணறிக் கொண்டிருக்கும் அவல நிலை. இதற்கிடையே புரட்சியாளர்களிடமிருந்து துணிச்சலாக தப்பிக்க முயல்கின்றனர் ரயான் குடும்பத்தினர். சண்டையிட்டுக் கொண்டே லம்பாஸி நகரை விட்டு சிறிய விமானத்தில் இரு குழந்தைகளுடன் தப்பித்து செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக எதிரிகளின் கண்ணில் விமானம் தென்பட அதை சுட்டு சேதப்படுத்துகின்றார்கள். பழுதடைந்த விமானத்தோடு அடர்ந்த முட்காட்டின் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர். தங்களை சுற்றிலும் விஷ முட்கள் சூழ்ந்திருப்பதை கண்டு மரணத்தின் விளிம்பில் உதவிக்காக காத்துக் கிடக்கின்றனர். ரயான் குடும்பத்தினரை மீட்பதற்காக யாருமே செல்ல தயங்கும் ஆபத்துகள் நிறைந்த கானகத்திற்கு மனித நேயம் மிக்க தீரர்களான பிரின்ஸ் மற்றும் பார்னே துணிச்சலாக செல்லத் துணிகிறார்...