காணாமல் போன கழுகு - பிரின்ஸ் சாகசம்

சர்வதேச கடத்தல் மன்னன் ட்யூக் செபாஸ்டியானை கொல்லத் திட்டம் போடுகிறது ஒரு கொலைகார கும்பல். இதற்கிடையே அடுத்த பணிக்கான வேலைகளில் தயாராகிக் கொண்டிருக்கும் பிரின்ஸ் குழுவினரையும் கழுகு கப்பலையும் தங்களுடைய கொலைத் திட்டத்திற்காக தந்திரமாக சிறை பிடிக்கின்றனர் கொலைகார கும்பல். கமன்சினி என்கிற பயங்கரவாதியின் தலைமையில் கொலைகாரகும்பல் இயங்குவதையும் செபாஸ்டியன் என்ற முக்கிய நபரை நூதன முறையில் கொல்ல இருப்பதையும் தெரிந்துக் கொள்ளும் பிரின்ஸ் தனது நண்பர்களையும் செபாஸ்தியனையும் காப்பாற்றுவதற்காக எதிரிகளிடமிருந்து தப்பித்து செபாஸ்தியனை தேடிச் செல்கிறார். வழியெங்கும் கம்சினி கும்பலால் ஏற்படும் ஆபத்துகளை வெற்றிகரமாக சமாளித்து பலத்த பாதுகாப்புடனும் அடியாட்களுடனும் வாழும் செபாஸ்டியனை நேரில் சந்திக்கிறார். தனது நிலைமையையும் கமன்சினி கும்பலால் அவருக்கு ஏற்பட போகும் ஆபத்துகளையும் எடுத்துக் கூறி செபாஸ்டியானை காப்பாற்ற முயற்சிக்கிறார். கமன்சினியின் கொலைத் திட்டத்தை தெரிந்துக் கொள்ளும் செபாஸ்டியன் கமன்சினி கும்பலையும் தனது இரகசியங்களை தெரிந்துக் கொண்ட பிரின்ஸ் குழுவினரையும் அழிக்க திட்டம் போடுகிறா...